»   »  கிரீஸில் மாளு தேனிலவு!

கிரீஸில் மாளு தேனிலவு!

Subscribe to Oneindia Tamil

கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு விட்ட மாளவிகா தேனிலவுக்கு கிரீஸ் நாட்டுக்குப் பறக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த கேரளத்து தொழிலதிபர் சுமேஷ் மேனனுக்கும், வாள மீனு மாளவிகாவுக்கும் பெங்களூரில் நேற்று கோலாகலமாக திருமணம்நடந்தேறியது.

கோலிவட்டின் கிளாமர் பொம்மையாக இருந்து இப்போது குடும்பத் தலைவியாகி விட்ட மாளவிகா, தனது காதல் கணவருடன் தேனிலவை படுசிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

தேனிலவுக்காக ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்யப் போகிறாராம் மாளவிகா. ஐரோப்பாவின் அழகான நாடுகளுக்கு ஒரு விசிட் அடிப்பதுதான்மாளவிகாவின் திட்டமாம். குறிப்பாக கிரீஸ் நாட்டுக்கு போவதில் படு ஆர்வமாக இருக்கிறாராம். கிரீஸில் ஒரு வாரத்திற்கு அவர் ஜாலியாகஇருக்கப் போகிறாராம்.

மாளவிகா தொடர்ந்து நடிப்பாரா? அவரது பி.ஆர்.ஓ. கோவிந்தராஜிடம் கேட்டோம். அதற்கு அவர், இப்போதைக்கு அவரிடம் தமிழ்ப் படம்எதுவும் இல்லை. இனிமேல் அவர் செலக்டிவாக நடிப்பார்.

இந்தியில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார். ஏப்ரல் மாதம் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. தேனிலவை முடித்து விட்டு வந்த பின்னர் இந்தஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வார் என்றார் கோவிந்தராஜ்.

வாளமீனுக்கும், சுமேஷ் மேனனுக்கும் இனிய தேனிலவு வாழ்த்துக்கள்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil