»   »  மது, விருந்து, மாளவிகா

மது, விருந்து, மாளவிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் ரொம்ப அதிர்ஷடசாலி, எனது கணவர் எல்லாவகையிலும் என்னோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று சந்தோஷமாக கூறுகிறார் மாளவிகா.

கொஞ்ச நாளைக்கு முன்பு கல்யாணமாகி இல்லற வாழ்க்கையில் செட்டிலானவர் மாளவிகா. கடைசியாக அவர் நடித்த, நடித்துக் கொண்டிருக்கும் படம் நான் அவனில்லை.

படு கிளாமரான வேடத்தில் நடித்துள்ள மாளவிகா, திருமணமான பின்னரும் கூட கிளாமராக நடித்துள்ளதுதான் இதில் விசேஷமானது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனது ஹனிமூனைக் கூட மாளவிகா ஒத்திப் போட்டு விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேற்று சென்னையில், நான் அவனில்லை படத்தின் ஐம்பெரும் நாயகிகளும் ஒட்டுக்காக வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கவர்ச்சி தேவதை நமீதா மூடிய உடலோடு வர மற்ற நான்கு பேரும் நச்சென்ற கிளாமர் உடையில் வந்து நிருபர்களை வியர்க்க வைத்தனர். சினேகா உடை சில்லோ சில்லென சிலீரிட்டது இன்னொரு விசேஷம்.

மாளவிகாவை மட்டும் ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு கல்யாணம் பிளஸ் நான் அவனில்லை பற்றிக் கேட்டோம்.

இந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது. படத்தில் என்னுடைய கேரக்டர் படு சூப்பராக வந்திருக்கிறது. இதற்காக எனது தேனிலவு பயணத்தைக் கூட ஒத்திப் போட்டு விட்டேன்.

எனது கேரக்டரின் முக்கியத்துவம், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியதன் அவசரம் ஆகியவற்றை இயக்குநர் செல்வா என்னிடம் எடுத்துச் சொன்னதால் தேனிலவை ஒத்திப் போட்டு விட்டேன்.

அடுத்த வாரத்தோடு நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விடுவார்கள். அதன் பின்னர் கணவரும், நானும், தென் ஆப்பிரிக்காவுக்குப் பறக்கிறோம். அங்குதான் தேனிலவு.

ஒரு வாரம் தென் ஆப்பிரிக்காவில் திகட்டத் திகட்ட தேனிலவைக் கொண்டாடுகிறோம். நேரம் கிடைத்தால் கிரீஸ் செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்தில் நடித்தது எனக்கு எனது பள்ளிக்கூட நாட்களை நினைவுபடுத்தியது. அவ்வளவு ஜாலியாக இருந்தது ஷூட்டிங் நாட்கள்.

அதை விட எனது கணவர் கொடுத்த ஒத்துழைப்புதான் மறக்க முடியாதது. எனது ஷூட்டிங்கில் எப்போதும் அவர் தலையிடுவதில்லை. இப்படி ஒரு கணவர் கிடைத்தற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று புல்லரித்துப் பேசினார்.

இப்படத்தில் மாடல் அழகியாக வருகிறார் மாளவிகா. கதாநாயகன் ஜீவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகா, தனது கிளாமர் தூண்டிலால் ரசிகர்களையும் கவர்ந்திழுப்பார் என்பது உறுதி.

மாளவிகாவின் நடிப்பு பிளஸ் ஒத்துழைப்பை இயக்குநர் செல்வாவும் கூட சொல்லிச் சொல்லி சிலாகித்தார். சொல்வதை டக்கென புரிந்து கொண்டு அதை விட கூடுதலாகவே கொடுத்து அசத்தி விட்டார் மாளவிகா. நிச்சயம் ரசிகர்களின் ஓட்டும் மாளவிகாவுக்கே கூடுதலாக கிடைக்கும் என்றார் மகிழ்ச்சியுடன்.

மாளவிகாவுக்கு ஓட்டு கிடைப்பது இருக்கட்டும். அவரது கல்யாண வரவேற்பு விருந்தின்போது நடந்த கூத்துக்கள் புகைப்படங்கள் ரூபத்தில் இணையதளங்களை கலக்க ஆரம்பித்துள்ளன.

மாளவிகாவும், சுமேஷ் மேனனும் பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து சூப்பர் விருந்துடன் வரவேற்பு நடந்துள்ளது.

விதம் விதமான மது வகைகளுடன் அந்த விருந்து தடபுடல் பட்டுள்ளது. இதில் மாளவிகா, சுமேஷுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினகர்கள் கலந்து கொண்டனர்.

படு ரகசியமாக நடந்த இந்த விருந்தில் மாளவிகா, ததும்பத் ததும்ப மது போதையுடன் ஆட்டம் போட்டுள்ளார்.

விருந்துக்கு வந்தவர்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் அவர் ஆடிய ஆட்டம், விருந்துக்கு வந்திருந்தவர்களை சூடாக்க விட்டதாம்.

சுமேஷை விட விருந்துக்கு வந்திருந்த ஆண் நண்பர்களுக்குத்ததான் மாளவிகா மலைக்க மலைக்க முத்தம் கொடுத்தாராம். கிளுகிளுப்பைக் கொடுக்கும் அந்தப் படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

தித்திக்குதே மாளவிகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil