படமான சுபா-சிவராசன் கதை! ராஜீவ் காந்தியைக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு பெங்களூரில் தற்கொலைசெய்துகொண்ட சுபா மற்றும் சிவராஜனின் கதை கன்னடத்தில் திரைப்படமாகியுள்ளது. முேன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தான் சுபா. ராஜீவ் காந்திகொல்லப்பட்ட போது அந்த இடத்தில் இருந்தவர் சிவராஜன். இருவரும் ராஜீவ் கொலைக்குப் பின்னர் தப்பிவிட்டனர்.இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பெங்களூர் புற நகரில் இருவரும் பதுங்கியிருப்பதுதெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் சுபாவும், சிவராஜனும் சயனைட் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். இந்த பரபரப்பான சம்பவம் இப்போது கன்னடத்தில் சினிமாவாகியுள்ளது.இப்படத்தை சயனைடு என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவரான ரமேஷ் என்பவர்தான்இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கன்னடத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.சுபா வேடத்தில் அண்ணி தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பிரபலமான மாளவிகா நடித்துள்ளார் (இவரதுகணவர் அவினாஷ்தான், சந்திரமுகியில் சாமியாராக வந்தவர்). சுபா வேடத்தில் நடித்து குறித்து மாளவிகாவிடம்கேட்டபோது, சுபாவின் தோற்றம், எனது தோற்றம் வேறு வேறாக இருந்தாலும் இந்தக் கேரக்டருக்காக என்னைதேர்வு செய்தது எனது நடிப்புத் திறமைக்காகத்தான் என்று நினைக்கிறேன்.சுபா வேடத்தில் நடிப்பதற்காக சுபாவைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன். ஆனால் அதிகம் கிடைக்கவில்லை.இருப்பினும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்துப் படித்துப் பார்த்தேன்.இதன் மூலம் என்னால் அவர்களுடைய மன நிலைக்கு மாற முடிந்தது. அதனால் தான் இந்த கேரக்டரைதத்ரூபமாக செய்ய முடிந்தது. இப்போது எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இது போலவித்தியாசமான கேரக்டர்களை செய்ய ஆசையாக உள்ளேன் என்கிறார் மாளவிகா.

By Staff

ராஜீவ் காந்தியைக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு பெங்களூரில் தற்கொலைசெய்துகொண்ட சுபா மற்றும் சிவராஜனின் கதை கன்னடத்தில் திரைப்படமாகியுள்ளது.

முேன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தான் சுபா. ராஜீவ் காந்திகொல்லப்பட்ட போது அந்த இடத்தில் இருந்தவர் சிவராஜன். இருவரும் ராஜீவ் கொலைக்குப் பின்னர் தப்பிவிட்டனர்.

இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பெங்களூர் புற நகரில் இருவரும் பதுங்கியிருப்பதுதெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் முற்றுகையிட்டனர்.

ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் சுபாவும், சிவராஜனும் சயனைட் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். இந்த பரபரப்பான சம்பவம் இப்போது கன்னடத்தில் சினிமாவாகியுள்ளது.

இப்படத்தை சயனைடு என்ற பெயரில் படமாக்கியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவரான ரமேஷ் என்பவர்தான்இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கன்னடத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சுபா வேடத்தில் அண்ணி தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பிரபலமான மாளவிகா நடித்துள்ளார் (இவரதுகணவர் அவினாஷ்தான், சந்திரமுகியில் சாமியாராக வந்தவர்). சுபா வேடத்தில் நடித்து குறித்து மாளவிகாவிடம்கேட்டபோது, சுபாவின் தோற்றம், எனது தோற்றம் வேறு வேறாக இருந்தாலும் இந்தக் கேரக்டருக்காக என்னைதேர்வு செய்தது எனது நடிப்புத் திறமைக்காகத்தான் என்று நினைக்கிறேன்.

சுபா வேடத்தில் நடிப்பதற்காக சுபாவைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன். ஆனால் அதிகம் கிடைக்கவில்லை.இருப்பினும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்துப் படித்துப் பார்த்தேன்.இதன் மூலம் என்னால் அவர்களுடைய மன நிலைக்கு மாற முடிந்தது. அதனால் தான் இந்த கேரக்டரைதத்ரூபமாக செய்ய முடிந்தது.

இப்போது எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து இது போலவித்தியாசமான கேரக்டர்களை செய்ய ஆசையாக உள்ளேன் என்கிறார் மாளவிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X