மாளவிகா, பூமிகாவுக்கு தலை தீபாவளி !
| Click here for more images |
இந்த ஆண்டு இல்லற வாழ்க்கையில் புகுந்த இரு பிரபல நடிகைகள் மாளவிகா, பூமிகா.
இதில் பூமிகாவுக்கு லேட்டஸ்டாக கல்யாணம் நடந்தது. காதலித்து வந்த யோகா மாஸ்டர் பரத் தாக்கூரை மணந்தார் பூமிகா. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்யாண வாழ்க்கையில் நுழைந்தவர் மாளவிகா.
மும்பையில் வசித்து வரும் கேரளாக்காரரான சுமேஷ் மேனனை கைப் பிடித்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கல்யாணமும் கூட காதல் கல்யாணம்தான்.
திருமணத்திற்குப் பிறகும் மாளவிகா தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் பூமிகா இதுவரை நடிக்க ஆரம்பிக்கவில்லை.
இந்த இருவரும் இப்போது தலை தீபாவளிக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
மாளவிகா தனது பெற்றோர் வசிக்கும் பெங்களூருக்கு கணவருடன் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டாராம். புத்தம் புதுத் துணிகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் என தடபுடல் படுத்தி வருகிறாராம்.
இதேபோல பூமிகாவும் தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வருகிறார்.
தலை தீபாவளியையொட்டி இரு நடிகைகளும் படப்பிடிப்புகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துள்ளனராம். தலை தீபாவளியை முடித்து விட்டுத்தான் அடுத்த அசைன்மென்ட்டுகளுக்குப் போவார்களாம்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











