»   »  மறுபடியும் அந்த அலை!

மறுபடியும் அந்த அலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷகீலா போனால் என்ன, சதை நாயகிகளுக்கா பஞ்சம் என ஷகீலாவுக்கே சவால் விடும் வகையில் மறுபடியும்மலையாளத்தில் பலான படங்களின் அலை படு பலமாக வீச ஆரம்பித்துள்ளது.

அது ஒரு காலம். தியேட்டர்களில் சின்னப் பசங்க கூட்டம் கேமா என அலையடித்த காலம் அது. எல்லாம் ஷகீலாபடுத்திய பாடு. தமிழகத்தில் ஓடிய மலையாளப் படங்களுக்கு இடையே ஷகீலாவின் பிட்டைச் செருகி, படத்தைஓட்டி, வாலிப வயோதிக அன்பர்களை தியேட்டர்காரர்கள் குஷிப்படுத்தினர்.

கேரளாவிலோ ஷகீலாவின் முழு நீள சாப்ட் போர்ன் படங்கள் வரிசை கட்டி பெரிய பெரிய ஹீரோக்களின்படங்களையே ஓரம் கட்டியது. ரொம்பக் கஷ்டப்பட்டு ஷகீலாவை நாடு கடத்தி நிம்மதி அடைந்தது மலையாளபடவுலகம்.

இப்போதும் கூட ஷகீலா இல்லாமல் பலான மலையாளப் படவுலகம் ஏக்கத்துடன் மூச்சுத் திணறிக் கொண்டுதான்உள்ளது. ஷகீலா இருந்த கட்டில் இப்போதும் காலியாகத்தான் உள்ளது. ஆனால் அதற்குப் பக்கத்திலேயேசின்னதாக சில கட்டில்களைப் போட்டு மறுபடியும் ஜமாய்க்க ஆரம்பித்து விட்டனர் பலான மலையாளப் படத்தயாரிப்பாளர்கள்.

ரேஷ்மா, சிந்து, தேவி, ஷர்மிலி என பல நடிகைகள் நடித்த பலான படங்கள் மறுபடியும் கேரளாவைக் கலக்கஆரம்பித்துள்ளன. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 14 பலான படங்கள் மலையாளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளதாம்.

கேரளாவின் கிராமப்புறங்களையும், ரெண்டும் கெட்டான் நகர்ப் புறங்களையும் இந்தப் படங்கள் வளைய வரஆரம்பித்துள்ளன. இந்தப் படங்கள் பெரும்பாலனவற்றில், மேற்கண்ட நான்கு நடிகைகளும் சேர்ந்து நடித்து,திறமை காட்டி விளையாடியிருக்கிறார்கள்.

இந்தப் படங்களை அப்படியே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் பார்சல் கட்டி அனுப்பிசர்வதேச அளவில் பலான அலையை படு பலமாக பரப்பி விட்டிருக்கிறார்களாம் இப்படங்களின்தயாரிப்பாளர்கள்.

மேலும் வளைகுடா நாடுகளுக்கும் சிடி-வீடியோவாக இந்தப் படங்கள் சட்ட விரோதமாக ஊடுருவி வருகின்றன.

நான்கு நடிகைகளின் படங்களுக்கும் சர்வதேச அளவில் நல்ல கிராக்கி இருக்கிறதாம். இப்படிப்பட்ட படங்களைரெகுலராக வாங்கி வெளிநாட்டு ரசிகர்களை ரொங்கடிக்கும் விநியோகஸ்தரான சுனில் இதுகுறித்துக் கூறுகையில்,இதுபோன்ற படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் (வசனம் ரொம்ப முக்கியம்!) போட்டு வெளியிடுகிறோம்.இப்படங்களுக்கு செமத்தியான வரவேற்பு உள்ளது.

சுந்தரிக் குட்டி என்று ஒரு படம். ஒரு ஆண்டுக்கு முன்பு தயாரானது. சமீபத்தில் இப்படத்தை இங்கிலாந்தில்திரையிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல ஷகீலா நடித்த ஆளில்லா தோணி என்ற படம் அமெரிக்காவில் சூப்பர் ஹிட் ஆனது என்கிறார்.இதைத் தவிர இன்டர்நெட்டிலும் இந்தப் பட வீடியோக்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இப்படங்கள் பெரும்பாலும் சென்னையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரே ஒரு பங்களாதான் படத்துக்கானமுக்கியச் செலவு. அதுவும் உத்தண்டி, நீலாங்கரைப் பக்கம் போனால் சகல வசதிகளுடன் சகாய வாடகைக்குக்கிடைக்கிறது.

அதேபோல சாலிகிராமம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களிலும் இதுபோன்ற படப்பிடிப்புகள் நடக்கிறதாம்.

சென்னையின் பிரபல திரைப்பட ஆய்வகமான பிரசாத் லேபின் ஊழியர் ஒருவர் இப்படிக் கூறுகிறார். இதுபோன்றபலான படங்கள் சென்னையில்தான் தயாரிக்கப்படுகின்றன. இங்குதான் பிரிண்ட் போடப்படுகின்றன. கிட்டத்தட்ட47 தயாரிப்பாளர்கள் இந்தத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்ற படங்களில் நடிக்கும் முன்னணி மலையாள நடிகைக்கு ஒரு வார கால்ஷீட்டுக்கு ரூ. 10 லட்சம் வரைதருகிறார்கள். துணை நடிகைகளுக்கு 6 மணி நேர கால்ஷீட்டுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரைகிடைக்கும். இதுவும் சரியாக கிடைக்க வேண்டுமானால் அவர்கள் சிறப்பாக ஒத்துழைத்தால்தான் ஆச்சுஎன்கிறார்.

பலான படங்களுக்குத் துணை நடிகைகளை ஏற்பாடு செய்து வரும் ஏஜென்ட் வாசுவிடம் கேட்டால், இதுபோன்றபடங்களில் நடிக்க துணை நடிகைகள் பலர் படு ஆர்வமாக இருக்கிறார்கள் சார். நல்ல வருவாய் கிடைக்கிறது.சாதாரணமாக ஒரு தமிழ்ப் படத்திலோ, தெலுங்குப் படத்திலோ நடித்தால், அவர்களுக்கு 6 மணி நேரகால்ஷீட்டுக்கு 350 ரூபாயும், படியும் தருவார்கள்.

ஆனால் இதுபோன்ற படங்களில் நடித்தால் ஒரே நாளில் ஆயிரங்களை பார்த்துவிடலாம். அதனால்தான் பலதுணை நடிகைகள் இது மாதிரி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்.

போலீஸ் கண்ணை தெறக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil