சிக்குன்குனியா பிடியில் மல்லுவுட்!
மலையாளத் திரையுலகம் சிக்குன்குனியாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறதாம். இதனால் ஷூட்டிங்குகளை முறையாக நடத்த முடியாமல் மலையாளத் திரையுலகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
மலையாளப் படவுலகை சமீபத்தில் ஆட்டிப் படைத்த மாக்டா ஸ்டிரைக் முடிவுக்கு வந்து விட்டது. ஆனாலும் இன்னும் படப்பிடிப்புகள் சீராகவில்லையாம். இப்போதைய குழப்பத்திற்கு சிக்குன்குனியாதான் காரணமாம்.கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சிக்குன்குனியா வந்துள்ளதாம். இதனால் வீட்டோடு முடங்கிப் போயுள்ளனராம்.
மெகா ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலையும் கூட சிக்குன்குனியா விடவில்லையாம். நான்கு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்களாம்.
அதேபோல, மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் போன்ற நடிகைகளும் கூட சிக்குன்குனியா பிடியில் சிக்கித் தவிக்கிறார்களாம். சிக்குன்குனியாவால் பல படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.
மலையாளப் படவுலகில் முக்கிய நடிகர் நடிகைகளுக்கு இப்படி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
பேசாமல், வைரஸ் கூட யாராவது பேச்சுவார்த்தை நடத்தினால் தேவலாம்!


Click it and Unblock the Notifications











