தமிழுக்கு 'மலையாளத்தின்' பாராட்டு

By Staff
Click here for more images
பிரபல மலையாள இயக்குநர் ஜெயராஜ், தமிழ் சினிமாவையும், தமிழ் திரையுலகினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஜெயராஜ். இவர் இயக்கிய பார் தி பீப்பிள் படம் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது. இது தமிழலும் டப் ஆகி வந்தது. இப்படத்தில் கோபிகா, சித்திரம் பேசுதடி நரேன், பரத் நடித்திருந்தனர்.

தற்போது தமிழில் சில நேரங்களில் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ். இதுதவிர பார் தி பீப்பிள் படத்தின் தொடர்ச்சியாக ஆப் தி பீப்பிள் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தை முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் படமாக்கியுள்ளாராம்.

தமிழில் இவர் இயக்கி வரும் 'சில நேரங்களில்' படத்தில் வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர், வினீத் நடித்துள்ளனர்.

தமிழ்ப் பட அனுபவம் குறித்து ஜெயராஜ் கூறுகையில், தமிழ் சினிமா நிறைய வளர்ந்து விட்டது. இங்கு தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமல்லாமல், பிற மொழி இயக்குநர்களுக்கும் நல்ல மரியாதை தருகிறார்கள். எதையுமே முன்னேற்றப் பார்வையில்தான் இங்குள்ளவர்கள் யோசிக்கிறார்கள்.

இயக்குநர்களின் கிரியேட்டிவ் சிந்தனைகளுக்கு இங்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது. எதைச் செய்தாலும் அதற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. புதுமுகங்களுக்கு மலையாளத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. யாராக இருந்தாலும், திறமைகளுக்கு நிச்சயம் மதிப்பு கிடைக்கிறது.

சில நேரங்களில், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகும். இரு வேறு கால கட்டங்களில் கதை நடப்பது போல உள்ளது. நவ்யா நாயர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு பாடல் பெரிய அளவில் பேசப்படும். பழம்பெரும் பாடகி பி.சுசீலா இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடலுக்கு பழம்பெரும் நடன மாஸ்டர் தாரா டான்ஸ் வடிவமைத்துள்ளார்.

இப்பாடலை பாங்காக்கில் படமாக்கிநோம். வின்சென்ட் அசோகன், இந்தப் பாடலில் சாமுராய் வீரன் போன்ற கெட்டப்பில் வருகிறார் என்றார் ஜெயராஜ்.

சில நேரங்களில் டிசம்பரில் திரைக்கு வருகிறதாம்.

More from Filmibeat

Read more about: navya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X