»   »  ஒரு ராத்திரிக்கு 50 லட்சம்!

ஒரு ராத்திரிக்கு 50 லட்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புத்தாண்டுக்கு முதல் நாள், டிசம்பர் 31ம் தேதி ஒரே ஒரு ராத்திரி பார்ட்டிக்கு வந்து போக மல்லிகாஷெராவத்துக்கு ரூ. 50 லட்சம் கொடுத்து புக் செய்துள்ளதாம் மும்பை ஸ்டார் ஹோட்டல் ஒன்று. பாலிவுட்டைவாய் பிளக்க வைத்திருக்கிறது இந்த சமாச்சாரம்.

டிசம்பர் 31ம் தேதி இரவை நினைத்து இப்போதே இளமைப் பட்டாளம் துள்ள ஆரம்பித்து விட்டது. பார்ட்டிக்குஎங்கே போகலாம், எப்படிப் புத்தாண்டைக் கொண்டாடலாம் என பட்டியல் போட்டு பட்டையைக் கிளப்ப வயதுவித்தியாசமின்றி அத்தனை பேரும் அசத்தலாக யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

வழக்கமான டான்ஸ், டிரிங்ஸ், ஹேப்பி நியூ இயர் கூச்சலோடு நிற்காமல் ஒவ்வொரு ஆண்டும் தினுசு தினுசாகயோசித்து அசத்துவது ஸ்டார் ஹோட்டல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் வித்தியாசமாக யோசித்து வாடிக்கையாளர்களை வெரைட்டியாக அசத்ததிட்டமிட்டனர். அதற்கு அவர்கள் குறி வைத்தது இந்தி திரையலகின் கிளாமர் கன்னிகளைத்தான்.

கிளாமரில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்திய நடிகைகள் சிலரை அணுகி, தங்களது ஹோட்டலில்வந்து டான்ஸ் ஆடித் தருமாறு கேட்க ஆரம்பித்துள்ளனராம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். ரசிகர்களின் கனவுக்கன்னிகளை யார் பிடிப்பது என்பதில் இப்போது பெரும் போட்டா போட்டியே நிலவுகிறதாம்.

அனைவரின் மத்தியிலும் மல்லிகா ஷெராவத்தான் டாப் பேவரைட்டாக உள்ளார். அவரை பார்ட்டிக்கு மட்டும்வரவைத்து விட்டால் கல்லாவில் கலக்கிடலாம் என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கணக்கு.

எனவே அனைவருமே மல்லிகாவை முயற்சிக்க ஆரம்பித்தன. ஆனால் அவர் கேட்ட தொகைதான் மலைக்கவைத்து விட்டதாம். டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் கால்ஷீட் கொடுக்க ரூ. 50 லட்சம் கேட்டுள்ளார்மல்லிகா.

ஆனால் மும்பை நட்சத்திர ஹோட்டல் ஒன்று இந்தத் தொகையை கொடுத்து மற்றவர்களை அதிர்ச்சிகரமாகபோட்டியிலிருந்து விரட்டி விட்டதாம். இந்த ஹோட்டலில்தான் டிசம்பர் 31ம் தேதி இரவு களேபரப்படுத்தப்போகிறார் மல்லிகா.

இந்த நிகழ்ச்சியின்போது தனி குத்தாட்டம், வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து ஒரு ஆட்டம் என விதம் விதமானஆட்டத்தை வெளிப்படுத்துவாராம் மல்லிகா.

மல்லிகா கைவிட்டுப் போனதால் இப்போது மற்ற நடிகைகளைத் தேடி ஓட ஆரம்பித்துள்ளனர் மல்லிகாகிடைக்காதவர்கள். நேஹா தூபியாவுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளதாம்.

சென்னையை ஆட்டுவிக்கப் போவது யாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil