»   »  புத்தாண்டு குத்து: சிக்கலில் மல்லிகா!

புத்தாண்டு குத்து: சிக்கலில் மல்லிகா!

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு தினத்திற்கு முந்தின இரவு, மும்பை நட்சத்திர ஹோட்டலில் படு ஆபாசமாகஆடி இந்திய கலாச்சாரத்தை மல்லிகா ஷெராவத் இழிவுபடுத்தி விட்டார் என்று கூறிமும்பையைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள நட்சத்திரஹோட்டல்களில் ஆட்டம், பாட்டம், பெருக்கெடுத்து ஓடியது.

மும்பை, சென்னை போன்ற நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் கவர்ச்சி ஆட்டம்,மது போதை என நிரம்பி வழிந்தது.

மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மலைக்க வைக்கும் மல்லிகாஷெராவத்தை 50 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து வாட்டமான ஒரு ஆட்டத்தைப்போட்டு தனது வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தியது.

இந்த ஆட்டம் இப்போது மல்லிகாவுக்கு வேட்டு வைத்து விடும் போலத் தெரிகிறது.மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத் ஜெயின் என்பவர் மல்லிகாவின்ஆட்டம் படு ஆபாசம் எனக் கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகாரில் பொது இடத்தில் படு ஆபாசமாக மல்லிகா ஆடினார்.மிகவும் மோசமாக, அறுவறுக்கத்தக்க வகையில் அவரது ஆடைக் குறைப்பு இருந்தது.

இது நமது கலாசாரத்தையும், பெண்களையும் இழிவு படுத்தும் விதமாக இருக்கிறது.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் மல்லிகாவின் ஆட்டம் குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக புகார் ஏதும்வரவில்லை என கூடுதல் ஆணையர் பிபின் பிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிகாரி கூறுகையில், எங்களுக்கு முறைப்படி புகார் வரவில்லை. ஒரு சமூகஆர்வலர் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்றார். தனது புகாரை கடிதம் மூலமும்மும்பை காவல்துறை ஆணையருக்கு வினோத் ஜெயின் அனுப்பியுள்ளாராம்.

இதற்கிடையே, தனது ஆட்டத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது. அப்படிமீறி ஒளிபரப்பினால் தனக்கு ரூ. 15 லட்சம் தர வேண்டும் என மல்லிகா ஏற்கனவேகூறியிருந்தாராம்.

ஆனால் அதை மீறி ஒரு தொலைக்காட்சி மல்லிகாவின் மல்லாட்டத்தைஒளிபரப்பியதாம். இதனால் அந்தத் தொலைக்காட்சியிடம் நஷ்ட ஈடு வசூலிக்கமல்லிகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜில்பான்சியா கீதே ஜி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil