»   »  மல்லிகா குத்து-விசாரிக்க உத்தரவு

மல்லிகா குத்து-விசாரிக்க உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடிகை மல்லிகா ஷெராவத் புத்தாண்டு நிகழ்ச்சியின்போது மிகமோசமான உடையில் குத்தாட்டம் போட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு காவல்துறைக்குபரோடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் டிசம்பர் 31ம் தேதி இரவு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் மல்லிகாஷெராவத் கலந்து கொண்டு கவர்ச்சிகரமான உடையில் குத்தாட்டம் போட்டு கலக்கினார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகா ஆபாச ஆடையில் அவர் ஆடிய கவர்ச்சி ஆட்டம் கலாச்சரத்தைஇழிவுபடுத்துவதாக உள்ளதாக கூறி மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் போலீஸில் புகார் கொடுத்தார்.ஆனால் இதுவரை போலீஸார் அதைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இந் நிலையில் பரோடா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நரேந்திர திவாரி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அந்த மனுவை விசா>த்த நீதிபதி டி.பி. வைத்யா, மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி நடனம் குறித்துவிசாரணை நடத்த வேண்டும். அதன் அறிக்கையை 30 நாட்களுக்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனபோலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இஐதயடுத்து பரோடா ஜே.பி. சாலை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படவுள்ளது. விரைவில் பரோடாபோலீஸார் மும்பை சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

மல்லிகா ஷெராவத்தின் வாக்குமீலத்தையும் போலீஸார் பெறவுள்ளனர். இருப்பினும் தற்போது கிரிமினல்குற்றவியல் சட்டத்தின் 202வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் மல்லிகா கைது செய்யப்படமாட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குத்தாட்டத்திற்காக மல்லிகா 50 லட்சம் சம்பளமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil