»   »  ரெண்டு ரேட் மல்லிகா!

ரெண்டு ரேட் மல்லிகா!

Subscribe to Oneindia Tamil

மல்லிகா கபூர் செம பார்ட்டியாக இருக்கிறார். துட்டு கறப்பதற்கு ஏகப்பட்டடெக்னிக்குகளை கைவசம் வைத்திருக்கிறாராம் இந்த கும் கபூர்.

தமிழில் மல்லிகா கபூர் நடித்தது ரெண்டே படம் தான். முதல் படம் அழகாய்இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இன்னொன்று வாத்தியார். இதுதவிர அவர்மலையாளத்தில் நடித்த அற்புதத் தீவு தமிழுக்கும் டப் ஆகி வருகிறது.

இம்புட்டு படங்களே நடித்திருந்தாலும் கூட மல்லிகா கபூர் படு கிராக்கி செய்கிறாராம்புதுப் படங்களை புக் பண்ண வருகிறவர்களிடம். மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆனசிஐடி மூசா என்ற படத்தை ரீமேக் செய்யும் உரிமையை இயக்குநரும், காமெடிநடிகருமான டி.பி.கஜேந்திரன் வாங்கியுள்ளார்.

சீனாதானா 001 என்ற பெயரில் தமிழில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் கஜேந்திரன்.இதில் ஹீரோவாக பிரசன்னாவை புக் செய்த கஜேந்திரன், ஹீரோயினாக மல்லிகாகபூரைப் போடலாம் என முடிவு செய்தார்.

அவடம் பேசியபோது நிடிக்க நிான் ரெடி என்று கூறி தனது ரேட்டையும் கூறினார்.முதலில் மிரண்டாலும், பின்னர் கொஞ்சம் போல குறைத்து படிய வைத்தார்கள்.ஆனால் அதற்கு அடுத்து மல்லிகா ஒரு மேட்டரைப் போட்டபோதுதான் கஜேந்திரன்நிஜமாகவே மிரண்டு போய் விட்டாராம்.

அதாவது படம் தொடர்பான போட்டோ செஷனுக்கு வர தனியாக ஒரு ரேட்கேட்டுள்ளார் மல்லிகா. அதுவும் பெத்த தொகையாக. கலங்கிப் போய் கடுப்பானகஜேந்திரன், இது வேலைக்கு ஆவாது என்று புலம்பியவாறே மல்லிகா கபூரை டிராப்செய்து விட்டாராம்.

இப்போது வேறு நாயகிக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறாராம் கஜேந்திரன். மல்லிகா,கஜேந்திரனிடம் மட்டும்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றில்லையாம், தன்னைத்தேடி வருகிற அத்தனை பேரிடம் துட்டு விஷயத்தில் படு கறாராக இருக்கிறாராம்.

இப்படியே போனால் நிஜமாலுமே ஏதாவது ஒரு அற்புதத் தீவில் போய் தான்வாய்ப்பு தேட வேண்டும் என்று புலம்புகிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.அதுவும் சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil