»   »  சிறுசுக்குப் போன மல்லிகா!

சிறுசுக்குப் போன மல்லிகா!

Subscribe to Oneindia Tamil

பெரிய திரையைக் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆட்டோகிராப் மல்லிகா, இப்போது சின்னத் திரைநடிகையாகி விட்டார்.

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப்பில், சேரனின் பள்ளிக்காலத்து காதலியாக வந்து நடிப்பில்ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிச் சென்றவர் மல்லிகா. கருத்தழகியான மல்லிகாவுக்கு ஆட்டோகிராப் பெயர்வாங்கிக் கொடுத்தது.

ஆனால் துரதிர்ஷ்டமோ என்னவோ அடுத்தடுத்து பெரிய அளவிலான கேரக்டர்கள் கிடைக்கவில்லை. கூட நடித்தகோபிகா எங்கேயோ போய் விட்டார். ஆனால் மல்லிகாவுக்கு வந்ததெல்லாம் தங்கச்சி கேரக்டர்கள்தான்.

விஜய்க்குத் தங்கச்சியாக திருப்பாச்சியில் நடித்தார். பார்த்திபனின் தங்கச்சியாக குண்டக்க மண்டக்க படத்தில்வந்து போனார். ஹீரோயின் வாய்ப்புக்காக ஏங்கிக் கிடந்த மல்லிக்கு, இப்படி தங்கச்சி கேரக்டர்களாக வந்துசோர்வைக் கொடுத்தன.

தாய் மொழியான மலையாளத்திலும் கூட அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்தசமயத்தில்தான் விரக்தியுடன் கிடந்த மல்லிகாவைத் தேடி சின்னத் திரை வாய்ப்பு தேடி வந்தது.

சின்னத் திரையின் பிரபல இயக்குநரான சித்தி புகழ் சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் அஞ்சலி தொடரில் ஹீரோயினாக மல்லிகாவை நடிக்க வைத்துள்ளனர். முதலில் யோசித்த மல்லிகா,பிறகு இந்த ஆஃபரை ஏற்றுக் கொண்டாராம்.

இந்தத் தொடரை முன்னாள் தினகரன் நாளிதழ் உரிமையாளரும், தற்போதைய திமுக ராஜ்யசபா எம்.பியுமானகே.பி.கே.குமரனின் மனைவி அனிதாதான் தயாரிக்கிறார். கனா கண்டேன் படத்திற்குத் திரைக்கதை எழுதிய சுபாஇந்தத் தொடருக்கும் திரைக்கதை அமைக்கின்றனர்.

பெரிய திரையில் பணிப்பெண்ணாக இருப்பதற்கு சின்னத் திரையில் ராணியாக இருப்பது பெஸ்ட் என்பதால்தான்இந்தத் தொடரை மல்லிகா ஏற்றுக் கொண்டாராம். மேலும் பெரிய திரையில் ஒரு காலத்தில் பிசியாக இருந்தமீனா, தேவயானி, குஷ்பு போன்றோர் சின்னத் திரையில் வெளுத்து வாங்கி வருவதாலும், டப்பு தேத்திவருவதாலும், அதையும் யோசித்துப் பார்த்தே மல்லிகா அஞ்சலி நாயகியாக சம்மதித்தாராம்.

படங்களில் அப்பப்ப வந்து போன மல்லிகா இனிமேல் தினசரி நமது வீடு தேடி வந்து தரிசனம் கொடுக்கப்போகிறார். சந்தோஷம்தானே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil