ஆபாச ஆட்டம் - மல்லிகா வழக்கு ஒத்திவைப்பு

By Staff

Mallika Sherawat
மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு ஸ்டார் ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆபாசமாக ஆடியதாக கூறி பாலிவுட் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன. இந்த நிகழ்ச்சியில், மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டு படு கவர்ச்சிகரமாக ஆடினார்.

மேலும், கீழும் சிறு துணிகளை மட்டும் அணிந்து கொண்டு அவர் போட்ட ஆட்டம் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

இந்த ஆட்டத்துக்காக மல்லிகா ரூ. 75 லட்சம் பணம் பெற்றதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்த ஆட்டம் நீடித்தது. உடல் முழுக்கத் தெரியும் வகையில் அவர் போட்டிருந்த காஸ்ட்யூமால் அந்த புத்தாண்டு கொண்டாட்டமே கிளுகிளுப்பாகிப் போனது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் பின்னர் பகிரங்கமாக வெளியிடப்பட்டன. வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று முன் கூட்டியே ஹோட்டல் நிர்வாககிளிடம் மல்லிகா கூறியிருந்தாராம். ஆனால் அதை மீறி வீடியோ காட்சிகள் வெளியானதால் மல்லிகா கடுப்பாகி விட்டார்.

இந்த நிலையில், மல்லிகாவின் ஆட்டம் படு ஆபாசமாகவும், நமது கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகர் வினோத் ஜெயின் என்பவர் மும்பை போலீஸில் புகார் கொடுத்தார்.

ஆனால் போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் பந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி விசாரணையை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X