»   »  இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா?: கொந்தளித்த மம்முட்டி! இந்தித் திரையுலகினர் இந்தியாவின் பிற மொழி திரைப்படங்களைப் புறக்கணிக்கும்வகையில் செயல்படுவதாக மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்முட்டி கடுமையாகசாடியுள்ளார்.பாலிவுட் மாத்திரமே இந்திய சினிமா அல்ல என்பதை இந்தியாவும் பிற நாடுகளும்உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்திய சினிமா என்றாலே இந்தி நடிகர்கள், நடிகைகள் என்பது போன்ற தோற்றத்தைவட இந்திய சினிமாக்காரர்களும் மீடியாக்களும் உருவாக்கிவிட்டன.நல்ல சினிமா தரும் கேரளா, வித்தியாசமான சினிமாக்கள் தரும் தமிழ், வசூலில்வரலாறு படைக்கும் தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாக்களையும்நட்சத்திரங்களையும் தேசிய அளவில் இரண்டாம் தரமாகவே நடத்துகிறார்கள்.இந் நிலையில் சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது.வழக்கமாக இந்த திரைப்பட விழாக்களில் இந்திப் படங்கள் மட்டுமேதிரையிடப்படுவது வழக்கம்.பிற மொழிப் படங்களை, குறிப்பாக மிகச் சிறந்த டெக்னீஷியன்கள், நடிகர்கள்,இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் நிரம்பிய தென்னிந்திய திரைப்படங்களைகாட்டுவதே கிடையாது.இந்தியாவில் இந்தி திரையுலகம் மட்டுமே சிறந்தது, இங்குதான் மிக் சிறந்த நடிகர்கள்,நடிகைகள் இருக்கிறார்கள் என்ற நனைப்பு இந்திக்காரர்களுக்கு ரொம்ப காலமாகவேஉண்டு. இந்தி நடிகர்களோ, நடிகைகளோ தென்னிந்திய மொழிப் படங்களில்நடிப்பதாக இருந்தால் ஏகப்பட்ட பந்தாக்கள் காட்டுவார்கள்.படையப்பா படத்தில் தொடங்கி சந்திரமுகி வரை ஐஸ்வர்யா ராயை தனது படத்தில்நடிக்க வைக்க சூப்பர் ஸ்டார் ரஜினி பட்ட பாடு அனைவருக்கும் தெரியும்.கடைசி வரை ஐஸ்வர்யா ராய் பிடி கொடுக்கவே இல்லை. இத்தனைக்கும்அருமையான கேரக்டருக்காகவே ஐஸ்வர்யா ராயைத் தொங்கினார்கள்.அப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் மறுத்து விட்டு, வங்க மொழியில் கிட்டத்தட்டமுக்கால் நிர்வாணமாக நடித்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காப்பாற்றியுள்ளார்ஐஸ்வர்யா.இப்படிப்பட்ட இந்தித் திரையுலகினர் இணைந்து நடத்தும் விழாதான் சர்வதேசஇந்தியத் திரைப்பட விழா. பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில்முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.இந்தித் திரையுலகினர் மட்டுமே இந்த விழாவுக்கு அழைக்கப்படுவர். அதுவும்இந்தியாவில் இந்த விழாக்கள் நடக்காது. வெளிநாடுகளில்தான் நடைபெறும்.இப்படிப்பட்ட விழாதான் சமீபத்தில் துபாயில் நடந்தது. ஆனால் இம்முறைஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியமாக சில தென்னிந்திய மொழிப் படங்களையும்திரையிடுவதாக அறிவித்தார்கள்.தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியான சில படங்கள் இந்தவிழாவில் திரையிடப்பட்டன. ஆனால் பெரும்பாலும் இந்திப் படங்களே அதிகஅளவில் திரையிடப்பட்டன.துபாயில் தமிழர்களும், மலையாளிகளும் அதிக அளவில் இருக்கும் காரணத்தால்தான்அந்த மொழிக்காரர்களிடமிருந்து பணம் வசூல் பண்ணும் ஒரே நோக்கில்தான்தென்னிந்தியப் படங்களையும் இம்முறை விழாவில் சேர்த்திருப்பார்கள் போலும்.ஆனால் படங்களைத் திரையிட்டவர்கள், விருது வழங்கும் விழாவில் மட்டும்தென்னிந்திய மொழிப் படங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.அத்தனை விருதுகளையும் இந்திப் படங்களுக்கே அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.இது விழாவுக்கு சென்றிருந்த மம்முட்டியை பெரிதும் காயப்படுத்தி விட்டது.விழாவில் பேசுமாறு மம்முட்டி அழைக்கப்பட்டபோது தனது மனதில் இருந்தஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார். அவர் பேசப் பேச விழா அரங்கமேஸ்தம்பித்துப் போய் விட்டது.இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஷாக்கில் உறைந்து போய் விட்டனர்.மம்முட்டியின் பேச்சு இதுதான்:இந்த விழாவுக்கு பேசாமல், சர்வதேச இந்தி திரைப்பட விருது வழங்கும் விழா என்றுபெயர் வைத்திருக்கலாம். இந்தியாவில் இந்தியில் மட்டும் படங்கள்தயாரிக்கப்படுவதில்லை.இந்தியையும் தாண்டி பல்வேறு மொழிகள் அருமையான பல படங்கள் வெளியாகிபெரும் வெற்றிகளைப் பெற்று வருகின்றன.இந்தியில் மட்டும் சிறந்த நடிகர்கள், நடிகைகள் உருவாவதில்லை. தென்னிந்தியமொழிகளிலும், பிற மொழிகளிலும் கூட பல நடிகர், நடிகைகள் தேசிய அளவில்விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர்.தென் இந்தியப் படங்கள் இல்லாமல் எப்படி இந்த விருது வழங்கும் விழாவை நீங்கள்பூர்த்தி செய்ய முடியும்? நான் தென்னந்தியத் திரையுலகைச் சேர்ந்தவன் என்பதால்தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் நினைக்கவேண்டாம்.இந்தியைத் தாண்டிப் பாருங்கள், பல அருமையான படங்களை நீங்கள் ஒவ்வொருமொழியிலும் பார்க்க முடியும். அந்தப் படங்களையும், இந்திப் படங்களுடன்போட்டியிட வைத்து அதற்குப் பின்னரே நீங்கள் விருதுக்குரியவர்களை தேர்வுசெய்திருக்க வேண்டும்.இந்திப் படங்கள் மட்டுமே விருதுக்குப் போட்டியிடும் வகையில் அமைந்துள்ள இந்தவிழாவை சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா என்று அழைப்பதேமுதலில் மிகப் பெரிய அபத்தம்.தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரியது. அங்கே மிகப் பெரிய கலைஞர்கள்,டெக்னீஷியன்கள், அருமையான பல படங்கள் தயாராகி வருகின்றன. அவறறைநீங்கள் எப்படிப் புறக்கணிக்க முடியும் என்று ஆவேசமாக பேசினார் மம்முட்டி.இதேபோலத்தான் கோவாவில் கடந்த முறை நடந்த சர்வதேச இந்திய திரைப்படவிழாவின் இறுதி நாளின்போது, நடிகர் மிதுன்சக்ரவர்த்தியுடன் சேர்ந்து விருது வழங்கஅழைக்கப்பட்டபோது மம்முட்டி மறுத்து விட்டார்.அதுகுறித்து மம்முட்டியுடன் அப்போது கேட்டபோது, நான் (நடிப்பே தெரியாத)மிதுன் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டால் அது மலையாள சினிமாவுக்குஅவமானம். அதனால்தான் நான் கலந்து கொள்ளவில்லை என்று நச்சென்று பதில்அளித்தார்.இம்முறை துபாயில் தனது கொந்தளிப்பை கொட்டித் தீர்த்து விட்டார். துபாய்நிகழ்ச்சியில் பேசியது குறித்து மம்முட்டியிடம் கேட்டபோது,இந்த விருது விழாவை இந்தி விருது விழா என்று கூட அழைக்க முடியாது. காரணம்இன்றைக்குப் பல இந்திப் படங்கள் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன.இந்தியாவின் அடையாளம் அவற்றில் சிறிதும் இல்லை.இந்தியத் திரைப்பட விருது என்ற பெயருக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள அத்தனை சிறந்த படங்களும் அந்தபோட்டியில் கலந்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நான் துபாயில் பேசியதில் எந்தத் தவறும்இல்லை. இப்போதும் அந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒருநியாயமற்ற விருது வழங்கும் விழா. இந்தித் திரையுலகுக்கு அப்பாலும் மிகப் பெரியதிரையுலகம் உள்ளது.அதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எனது பேச்சை இந்தித்திரையுலகம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.அது எனக்கு அவசியமம் இல்லை.தென்னிந்தியத் திரையுலகின் மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இதுபோல பேசதைரியம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு தோன்றியது பேசினேன். நான் பேசியஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மம்முட்டி.இந்தித் திரையுலகின் ஆதிக்க மனோபாவம் குறித்து முன்பு சில முறை கமல்ஹாசன்லேசு பாசாக விமர்சித்துள்ளார். ஆனால் வேறு எந்த நடிகரும் இதுவரை துணிச்சலாககருத்து தெரிவித்ததில்லை.இந்திக்காரர்கள் நிரம்பிய சபையில் அவர்களை மம்முட்டி தாளித்துத் தள்ளியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.கடந்த தேசிய விருதுப் போட்டியில் பிதாமகன் படத்தோடு ஹிருத்திக் ரோஷன் என்றநடிப்புச் சிங்கம் நடித்த படத்தை போட்டியில் நிறுத்தினார்கள். அப்போதுஇந்திக்காரர்கள் நிறைந்த ஜூரியில் விக்ரமை விட ஹிருத்திக் ரோஷனே ரொம்ப நல்லநடிகர் என்று முடிவை எட்டி, விருதும் அறிவிக்கப் போயினர்.அப்போது தான் வெகுண்டு எழுந்தார் முன்னாள் நடிகை சுமதலா. ஜூரியிடம் இடம்பெற்ற இவரும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். பாலாவின் டைரக்ஷனையும், விக்ரமின்நடிப்பையும் அரை மணி நேரம் விளக்கிப் பேசி, ஹிருத்திக்குக்கு தேசிய விருதைவழங்குவது எவ்வளவு கேவலம் என்று கொதித்தார்.அதன் பின்னரே இந்திவாலாக்கள் விக்ரமுக்கு விருது என்ற முடிவுக்கு வந்தனர்.தென் இந்தியர்களான மம்முட்டி, சுமலதாவுக்கு உள்ள தைரியம் நம்ம ஊர்கலைஞர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தும் இந்தி சினிமா ஆசாமிகளை நம்ம ஊர்சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் ஏன் கேள்வி கேட்பதில்லை?

இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா?: கொந்தளித்த மம்முட்டி! இந்தித் திரையுலகினர் இந்தியாவின் பிற மொழி திரைப்படங்களைப் புறக்கணிக்கும்வகையில் செயல்படுவதாக மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்முட்டி கடுமையாகசாடியுள்ளார்.பாலிவுட் மாத்திரமே இந்திய சினிமா அல்ல என்பதை இந்தியாவும் பிற நாடுகளும்உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்திய சினிமா என்றாலே இந்தி நடிகர்கள், நடிகைகள் என்பது போன்ற தோற்றத்தைவட இந்திய சினிமாக்காரர்களும் மீடியாக்களும் உருவாக்கிவிட்டன.நல்ல சினிமா தரும் கேரளா, வித்தியாசமான சினிமாக்கள் தரும் தமிழ், வசூலில்வரலாறு படைக்கும் தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாக்களையும்நட்சத்திரங்களையும் தேசிய அளவில் இரண்டாம் தரமாகவே நடத்துகிறார்கள்.இந் நிலையில் சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது.வழக்கமாக இந்த திரைப்பட விழாக்களில் இந்திப் படங்கள் மட்டுமேதிரையிடப்படுவது வழக்கம்.பிற மொழிப் படங்களை, குறிப்பாக மிகச் சிறந்த டெக்னீஷியன்கள், நடிகர்கள்,இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் நிரம்பிய தென்னிந்திய திரைப்படங்களைகாட்டுவதே கிடையாது.இந்தியாவில் இந்தி திரையுலகம் மட்டுமே சிறந்தது, இங்குதான் மிக் சிறந்த நடிகர்கள்,நடிகைகள் இருக்கிறார்கள் என்ற நனைப்பு இந்திக்காரர்களுக்கு ரொம்ப காலமாகவேஉண்டு. இந்தி நடிகர்களோ, நடிகைகளோ தென்னிந்திய மொழிப் படங்களில்நடிப்பதாக இருந்தால் ஏகப்பட்ட பந்தாக்கள் காட்டுவார்கள்.படையப்பா படத்தில் தொடங்கி சந்திரமுகி வரை ஐஸ்வர்யா ராயை தனது படத்தில்நடிக்க வைக்க சூப்பர் ஸ்டார் ரஜினி பட்ட பாடு அனைவருக்கும் தெரியும்.கடைசி வரை ஐஸ்வர்யா ராய் பிடி கொடுக்கவே இல்லை. இத்தனைக்கும்அருமையான கேரக்டருக்காகவே ஐஸ்வர்யா ராயைத் தொங்கினார்கள்.அப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் மறுத்து விட்டு, வங்க மொழியில் கிட்டத்தட்டமுக்கால் நிர்வாணமாக நடித்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காப்பாற்றியுள்ளார்ஐஸ்வர்யா.இப்படிப்பட்ட இந்தித் திரையுலகினர் இணைந்து நடத்தும் விழாதான் சர்வதேசஇந்தியத் திரைப்பட விழா. பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில்முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.இந்தித் திரையுலகினர் மட்டுமே இந்த விழாவுக்கு அழைக்கப்படுவர். அதுவும்இந்தியாவில் இந்த விழாக்கள் நடக்காது. வெளிநாடுகளில்தான் நடைபெறும்.இப்படிப்பட்ட விழாதான் சமீபத்தில் துபாயில் நடந்தது. ஆனால் இம்முறைஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியமாக சில தென்னிந்திய மொழிப் படங்களையும்திரையிடுவதாக அறிவித்தார்கள்.தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியான சில படங்கள் இந்தவிழாவில் திரையிடப்பட்டன. ஆனால் பெரும்பாலும் இந்திப் படங்களே அதிகஅளவில் திரையிடப்பட்டன.துபாயில் தமிழர்களும், மலையாளிகளும் அதிக அளவில் இருக்கும் காரணத்தால்தான்அந்த மொழிக்காரர்களிடமிருந்து பணம் வசூல் பண்ணும் ஒரே நோக்கில்தான்தென்னிந்தியப் படங்களையும் இம்முறை விழாவில் சேர்த்திருப்பார்கள் போலும்.ஆனால் படங்களைத் திரையிட்டவர்கள், விருது வழங்கும் விழாவில் மட்டும்தென்னிந்திய மொழிப் படங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.அத்தனை விருதுகளையும் இந்திப் படங்களுக்கே அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.இது விழாவுக்கு சென்றிருந்த மம்முட்டியை பெரிதும் காயப்படுத்தி விட்டது.விழாவில் பேசுமாறு மம்முட்டி அழைக்கப்பட்டபோது தனது மனதில் இருந்தஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார். அவர் பேசப் பேச விழா அரங்கமேஸ்தம்பித்துப் போய் விட்டது.இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஷாக்கில் உறைந்து போய் விட்டனர்.மம்முட்டியின் பேச்சு இதுதான்:இந்த விழாவுக்கு பேசாமல், சர்வதேச இந்தி திரைப்பட விருது வழங்கும் விழா என்றுபெயர் வைத்திருக்கலாம். இந்தியாவில் இந்தியில் மட்டும் படங்கள்தயாரிக்கப்படுவதில்லை.இந்தியையும் தாண்டி பல்வேறு மொழிகள் அருமையான பல படங்கள் வெளியாகிபெரும் வெற்றிகளைப் பெற்று வருகின்றன.இந்தியில் மட்டும் சிறந்த நடிகர்கள், நடிகைகள் உருவாவதில்லை. தென்னிந்தியமொழிகளிலும், பிற மொழிகளிலும் கூட பல நடிகர், நடிகைகள் தேசிய அளவில்விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர்.தென் இந்தியப் படங்கள் இல்லாமல் எப்படி இந்த விருது வழங்கும் விழாவை நீங்கள்பூர்த்தி செய்ய முடியும்? நான் தென்னந்தியத் திரையுலகைச் சேர்ந்தவன் என்பதால்தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் நினைக்கவேண்டாம்.இந்தியைத் தாண்டிப் பாருங்கள், பல அருமையான படங்களை நீங்கள் ஒவ்வொருமொழியிலும் பார்க்க முடியும். அந்தப் படங்களையும், இந்திப் படங்களுடன்போட்டியிட வைத்து அதற்குப் பின்னரே நீங்கள் விருதுக்குரியவர்களை தேர்வுசெய்திருக்க வேண்டும்.இந்திப் படங்கள் மட்டுமே விருதுக்குப் போட்டியிடும் வகையில் அமைந்துள்ள இந்தவிழாவை சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா என்று அழைப்பதேமுதலில் மிகப் பெரிய அபத்தம்.தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரியது. அங்கே மிகப் பெரிய கலைஞர்கள்,டெக்னீஷியன்கள், அருமையான பல படங்கள் தயாராகி வருகின்றன. அவறறைநீங்கள் எப்படிப் புறக்கணிக்க முடியும் என்று ஆவேசமாக பேசினார் மம்முட்டி.இதேபோலத்தான் கோவாவில் கடந்த முறை நடந்த சர்வதேச இந்திய திரைப்படவிழாவின் இறுதி நாளின்போது, நடிகர் மிதுன்சக்ரவர்த்தியுடன் சேர்ந்து விருது வழங்கஅழைக்கப்பட்டபோது மம்முட்டி மறுத்து விட்டார்.அதுகுறித்து மம்முட்டியுடன் அப்போது கேட்டபோது, நான் (நடிப்பே தெரியாத)மிதுன் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டால் அது மலையாள சினிமாவுக்குஅவமானம். அதனால்தான் நான் கலந்து கொள்ளவில்லை என்று நச்சென்று பதில்அளித்தார்.இம்முறை துபாயில் தனது கொந்தளிப்பை கொட்டித் தீர்த்து விட்டார். துபாய்நிகழ்ச்சியில் பேசியது குறித்து மம்முட்டியிடம் கேட்டபோது,இந்த விருது விழாவை இந்தி விருது விழா என்று கூட அழைக்க முடியாது. காரணம்இன்றைக்குப் பல இந்திப் படங்கள் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன.இந்தியாவின் அடையாளம் அவற்றில் சிறிதும் இல்லை.இந்தியத் திரைப்பட விருது என்ற பெயருக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள அத்தனை சிறந்த படங்களும் அந்தபோட்டியில் கலந்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நான் துபாயில் பேசியதில் எந்தத் தவறும்இல்லை. இப்போதும் அந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒருநியாயமற்ற விருது வழங்கும் விழா. இந்தித் திரையுலகுக்கு அப்பாலும் மிகப் பெரியதிரையுலகம் உள்ளது.அதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எனது பேச்சை இந்தித்திரையுலகம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.அது எனக்கு அவசியமம் இல்லை.தென்னிந்தியத் திரையுலகின் மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இதுபோல பேசதைரியம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு தோன்றியது பேசினேன். நான் பேசியஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மம்முட்டி.இந்தித் திரையுலகின் ஆதிக்க மனோபாவம் குறித்து முன்பு சில முறை கமல்ஹாசன்லேசு பாசாக விமர்சித்துள்ளார். ஆனால் வேறு எந்த நடிகரும் இதுவரை துணிச்சலாககருத்து தெரிவித்ததில்லை.இந்திக்காரர்கள் நிரம்பிய சபையில் அவர்களை மம்முட்டி தாளித்துத் தள்ளியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.கடந்த தேசிய விருதுப் போட்டியில் பிதாமகன் படத்தோடு ஹிருத்திக் ரோஷன் என்றநடிப்புச் சிங்கம் நடித்த படத்தை போட்டியில் நிறுத்தினார்கள். அப்போதுஇந்திக்காரர்கள் நிறைந்த ஜூரியில் விக்ரமை விட ஹிருத்திக் ரோஷனே ரொம்ப நல்லநடிகர் என்று முடிவை எட்டி, விருதும் அறிவிக்கப் போயினர்.அப்போது தான் வெகுண்டு எழுந்தார் முன்னாள் நடிகை சுமதலா. ஜூரியிடம் இடம்பெற்ற இவரும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். பாலாவின் டைரக்ஷனையும், விக்ரமின்நடிப்பையும் அரை மணி நேரம் விளக்கிப் பேசி, ஹிருத்திக்குக்கு தேசிய விருதைவழங்குவது எவ்வளவு கேவலம் என்று கொதித்தார்.அதன் பின்னரே இந்திவாலாக்கள் விக்ரமுக்கு விருது என்ற முடிவுக்கு வந்தனர்.தென் இந்தியர்களான மம்முட்டி, சுமலதாவுக்கு உள்ள தைரியம் நம்ம ஊர்கலைஞர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தும் இந்தி சினிமா ஆசாமிகளை நம்ம ஊர்சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் ஏன் கேள்வி கேட்பதில்லை?

Subscribe to Oneindia Tamil

இந்தித் திரையுலகினர் இந்தியாவின் பிற மொழி திரைப்படங்களைப் புறக்கணிக்கும்வகையில் செயல்படுவதாக மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்முட்டி கடுமையாகசாடியுள்ளார்.

பாலிவுட் மாத்திரமே இந்திய சினிமா அல்ல என்பதை இந்தியாவும் பிற நாடுகளும்உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய சினிமா என்றாலே இந்தி நடிகர்கள், நடிகைகள் என்பது போன்ற தோற்றத்தைவட இந்திய சினிமாக்காரர்களும் மீடியாக்களும் உருவாக்கிவிட்டன.

நல்ல சினிமா தரும் கேரளா, வித்தியாசமான சினிமாக்கள் தரும் தமிழ், வசூலில்வரலாறு படைக்கும் தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாக்களையும்நட்சத்திரங்களையும் தேசிய அளவில் இரண்டாம் தரமாகவே நடத்துகிறார்கள்.

இந் நிலையில் சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது.வழக்கமாக இந்த திரைப்பட விழாக்களில் இந்திப் படங்கள் மட்டுமேதிரையிடப்படுவது வழக்கம்.

பிற மொழிப் படங்களை, குறிப்பாக மிகச் சிறந்த டெக்னீஷியன்கள், நடிகர்கள்,இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் நிரம்பிய தென்னிந்திய திரைப்படங்களைகாட்டுவதே கிடையாது.

இந்தியாவில் இந்தி திரையுலகம் மட்டுமே சிறந்தது, இங்குதான் மிக் சிறந்த நடிகர்கள்,நடிகைகள் இருக்கிறார்கள் என்ற நனைப்பு இந்திக்காரர்களுக்கு ரொம்ப காலமாகவேஉண்டு. இந்தி நடிகர்களோ, நடிகைகளோ தென்னிந்திய மொழிப் படங்களில்நடிப்பதாக இருந்தால் ஏகப்பட்ட பந்தாக்கள் காட்டுவார்கள்.

படையப்பா படத்தில் தொடங்கி சந்திரமுகி வரை ஐஸ்வர்யா ராயை தனது படத்தில்நடிக்க வைக்க சூப்பர் ஸ்டார் ரஜினி பட்ட பாடு அனைவருக்கும் தெரியும்.

கடைசி வரை ஐஸ்வர்யா ராய் பிடி கொடுக்கவே இல்லை. இத்தனைக்கும்அருமையான கேரக்டருக்காகவே ஐஸ்வர்யா ராயைத் தொங்கினார்கள்.

அப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் மறுத்து விட்டு, வங்க மொழியில் கிட்டத்தட்டமுக்கால் நிர்வாணமாக நடித்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காப்பாற்றியுள்ளார்ஐஸ்வர்யா.

இப்படிப்பட்ட இந்தித் திரையுலகினர் இணைந்து நடத்தும் விழாதான் சர்வதேசஇந்தியத் திரைப்பட விழா. பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில்முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.

இந்தித் திரையுலகினர் மட்டுமே இந்த விழாவுக்கு அழைக்கப்படுவர். அதுவும்இந்தியாவில் இந்த விழாக்கள் நடக்காது. வெளிநாடுகளில்தான் நடைபெறும்.

இப்படிப்பட்ட விழாதான் சமீபத்தில் துபாயில் நடந்தது. ஆனால் இம்முறைஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியமாக சில தென்னிந்திய மொழிப் படங்களையும்திரையிடுவதாக அறிவித்தார்கள்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியான சில படங்கள் இந்தவிழாவில் திரையிடப்பட்டன. ஆனால் பெரும்பாலும் இந்திப் படங்களே அதிகஅளவில் திரையிடப்பட்டன.

துபாயில் தமிழர்களும், மலையாளிகளும் அதிக அளவில் இருக்கும் காரணத்தால்தான்அந்த மொழிக்காரர்களிடமிருந்து பணம் வசூல் பண்ணும் ஒரே நோக்கில்தான்தென்னிந்தியப் படங்களையும் இம்முறை விழாவில் சேர்த்திருப்பார்கள் போலும்.

ஆனால் படங்களைத் திரையிட்டவர்கள், விருது வழங்கும் விழாவில் மட்டும்தென்னிந்திய மொழிப் படங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.

அத்தனை விருதுகளையும் இந்திப் படங்களுக்கே அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள்.இது விழாவுக்கு சென்றிருந்த மம்முட்டியை பெரிதும் காயப்படுத்தி விட்டது.

விழாவில் பேசுமாறு மம்முட்டி அழைக்கப்பட்டபோது தனது மனதில் இருந்தஆதங்கத்தை கொட்டித் தீர்த்து விட்டார். அவர் பேசப் பேச விழா அரங்கமேஸ்தம்பித்துப் போய் விட்டது.

இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஷாக்கில் உறைந்து போய் விட்டனர்.

மம்முட்டியின் பேச்சு இதுதான்:

இந்த விழாவுக்கு பேசாமல், சர்வதேச இந்தி திரைப்பட விருது வழங்கும் விழா என்றுபெயர் வைத்திருக்கலாம். இந்தியாவில் இந்தியில் மட்டும் படங்கள்தயாரிக்கப்படுவதில்லை.

இந்தியையும் தாண்டி பல்வேறு மொழிகள் அருமையான பல படங்கள் வெளியாகிபெரும் வெற்றிகளைப் பெற்று வருகின்றன.

இந்தியில் மட்டும் சிறந்த நடிகர்கள், நடிகைகள் உருவாவதில்லை. தென்னிந்தியமொழிகளிலும், பிற மொழிகளிலும் கூட பல நடிகர், நடிகைகள் தேசிய அளவில்விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர்.

தென் இந்தியப் படங்கள் இல்லாமல் எப்படி இந்த விருது வழங்கும் விழாவை நீங்கள்பூர்த்தி செய்ய முடியும்? நான் தென்னந்தியத் திரையுலகைச் சேர்ந்தவன் என்பதால்தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் நினைக்கவேண்டாம்.

இந்தியைத் தாண்டிப் பாருங்கள், பல அருமையான படங்களை நீங்கள் ஒவ்வொருமொழியிலும் பார்க்க முடியும். அந்தப் படங்களையும், இந்திப் படங்களுடன்போட்டியிட வைத்து அதற்குப் பின்னரே நீங்கள் விருதுக்குரியவர்களை தேர்வுசெய்திருக்க வேண்டும்.

இந்திப் படங்கள் மட்டுமே விருதுக்குப் போட்டியிடும் வகையில் அமைந்துள்ள இந்தவிழாவை சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா என்று அழைப்பதேமுதலில் மிகப் பெரிய அபத்தம்.

தென்னிந்தியத் திரையுலகம் மிகப்பெரியது. அங்கே மிகப் பெரிய கலைஞர்கள்,டெக்னீஷியன்கள், அருமையான பல படங்கள் தயாராகி வருகின்றன. அவறறைநீங்கள் எப்படிப் புறக்கணிக்க முடியும் என்று ஆவேசமாக பேசினார் மம்முட்டி.

இதேபோலத்தான் கோவாவில் கடந்த முறை நடந்த சர்வதேச இந்திய திரைப்படவிழாவின் இறுதி நாளின்போது, நடிகர் மிதுன்சக்ரவர்த்தியுடன் சேர்ந்து விருது வழங்கஅழைக்கப்பட்டபோது மம்முட்டி மறுத்து விட்டார்.

அதுகுறித்து மம்முட்டியுடன் அப்போது கேட்டபோது, நான் (நடிப்பே தெரியாத)மிதுன் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து கலந்து கொண்டால் அது மலையாள சினிமாவுக்குஅவமானம். அதனால்தான் நான் கலந்து கொள்ளவில்லை என்று நச்சென்று பதில்அளித்தார்.

இம்முறை துபாயில் தனது கொந்தளிப்பை கொட்டித் தீர்த்து விட்டார். துபாய்நிகழ்ச்சியில் பேசியது குறித்து மம்முட்டியிடம் கேட்டபோது,

இந்த விருது விழாவை இந்தி விருது விழா என்று கூட அழைக்க முடியாது. காரணம்இன்றைக்குப் பல இந்திப் படங்கள் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன.இந்தியாவின் அடையாளம் அவற்றில் சிறிதும் இல்லை.

இந்தியத் திரைப்பட விருது என்ற பெயருக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால்இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உள்ள அத்தனை சிறந்த படங்களும் அந்தபோட்டியில் கலந்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நான் துபாயில் பேசியதில் எந்தத் தவறும்இல்லை. இப்போதும் அந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒருநியாயமற்ற விருது வழங்கும் விழா. இந்தித் திரையுலகுக்கு அப்பாலும் மிகப் பெரியதிரையுலகம் உள்ளது.

அதை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எனது பேச்சை இந்தித்திரையுலகம் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை.அது எனக்கு அவசியமம் இல்லை.

தென்னிந்தியத் திரையுலகின் மற்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இதுபோல பேசதைரியம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு தோன்றியது பேசினேன். நான் பேசியஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மம்முட்டி.

இந்தித் திரையுலகின் ஆதிக்க மனோபாவம் குறித்து முன்பு சில முறை கமல்ஹாசன்லேசு பாசாக விமர்சித்துள்ளார். ஆனால் வேறு எந்த நடிகரும் இதுவரை துணிச்சலாககருத்து தெரிவித்ததில்லை.

இந்திக்காரர்கள் நிரம்பிய சபையில் அவர்களை மம்முட்டி தாளித்துத் தள்ளியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

கடந்த தேசிய விருதுப் போட்டியில் பிதாமகன் படத்தோடு ஹிருத்திக் ரோஷன் என்றநடிப்புச் சிங்கம் நடித்த படத்தை போட்டியில் நிறுத்தினார்கள். அப்போதுஇந்திக்காரர்கள் நிறைந்த ஜூரியில் விக்ரமை விட ஹிருத்திக் ரோஷனே ரொம்ப நல்லநடிகர் என்று முடிவை எட்டி, விருதும் அறிவிக்கப் போயினர்.

அப்போது தான் வெகுண்டு எழுந்தார் முன்னாள் நடிகை சுமதலா. ஜூரியிடம் இடம்பெற்ற இவரும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். பாலாவின் டைரக்ஷனையும், விக்ரமின்நடிப்பையும் அரை மணி நேரம் விளக்கிப் பேசி, ஹிருத்திக்குக்கு தேசிய விருதைவழங்குவது எவ்வளவு கேவலம் என்று கொதித்தார்.

அதன் பின்னரே இந்திவாலாக்கள் விக்ரமுக்கு விருது என்ற முடிவுக்கு வந்தனர்.

தென் இந்தியர்களான மம்முட்டி, சுமலதாவுக்கு உள்ள தைரியம் நம்ம ஊர்கலைஞர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

தென் இந்திய சினிமாவை கேவலப்படுத்தும் இந்தி சினிமா ஆசாமிகளை நம்ம ஊர்சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் ஏன் கேள்வி கேட்பதில்லை?


Read more about: mamooty attacks hindi cinema
Please Wait while comments are loading...