»   »  மம்தாவின் மாயா பஜார்!

மம்தாவின் மாயா பஜார்!

Subscribe to Oneindia Tamil

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், தெலுங்கு திரை ரசிகர்களுக்கு விருந்து படைத்த புகழ் பெற்ற மாயா பஜார்படம் ரீமேக் ஆகிறது.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் இது கெளரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்ஹஹாஹாஹாஹா! என்று ரங்காராவ் ஆடிப் பாடி, மாயாஜாலம் மூலம் அள்ளிச் சாப்பிட்டுப் பாடிய காட்சி தமிழ்திரை ரசிகர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்து போயிருக்காது.

இந்தப் பாடல் இடம்பெற்ற படம்தான் மாயா பஜார். படம் முழுக்க ஒரே மந்திர ஜாலங்கள்தான். இந்தக் காலடெக்னிக்குகள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்திலேயே கைவித்தையால் கலக்கி எடுத்திருப்பார்கள்இப்படத்தில்.

என்.டி.ஆர்தான் இப்படத்தின் நாயகன். தெலுங்கிலும் உருவான இப்படம் தமிழ் பேசி தமிழ் ரசிகர்களையும்கவர்ந்தது. இப்படத்தை இப்போது ரீமேக் செய்யவுள்ளனர். என்.டி.ஆரின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர். தனதுதாத்தா நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

சாவித்ரி நடித்த வேடத்தில் மலையாள வரவான மம்தா மோகதன்தாஸ் செய்யவுள்ளார். தெலுங்கலி, கலர்புல்கலக்கல் படங்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீராமதாசு போன்ற பக்திப் படங்களுக்கும் ரசிகர்கள்சிறப்பான வரவேற்பைத் தருவதால், மாயா பஜார் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டார்களாம்.

மம்தா மோகன்தாஸ் காட்டில் இப்போது அடை மழையாம். காரணம் தமிழில் அவர் அறிமுகமான சிவப்பதிகாரம்சிறப்பாக ஓடுவதால் சந்தோஷமாகியுள்ளார். சில புதிய படங்கள் தேடி வந்துள்ளதாம்.

இப்போது தெலுங்கிலும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போகும் மாயா பஜார் படம் வந்துள்ளதால் கூடுதல்குஷியாகியுள்ளார்.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்குப் படங்களில் தனது திறமையைக் காட்டி இரு மொழி ரசிகர்களுக்கும் இன்பத்தைக்கொடுப்பதுதான் அம்மணியின் இப்போதைய லட்சியமாம்.

டப்பு சேர்க்கனும்னா இக்கரைக்கு வந்துதானே ஆகனும்!

Read more about: mamtha in mayabazar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil