'மிஸ் இந்தியாவாக' மும்பை பெண் மானஸ்வி தேர்வு!

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இவர் பங்கேற்பார்.
'பெமினா பான்டலூன் மிஸ் இன்டர்நேசனலாக' புனேவைச் சேர்ந்த நேகா ஹிங்கே (23) தேர்ந்தெடுக்கப்பட்டார். 'பெமினா பான்டலூன் மிஸ் எர்த்தாக' பெங்களூரைச் சேர்ந்த நிக்கோல் பாரியா (20) தேர்வானார்.
இறுதிப் போட்டியில் 18 பேர் மோதினர். இதில் இந்த மூவரை நடுவர்களான சானியா மிர்ஸா, ஷி்ல்பா ஷெட்டி, வீரேந்திர ஷேவாக் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.
இறுதிப் போட்டியில் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த கிருத்திகா பாபுவும் (20) பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
அழகிப் போட்டி உலக அழகி போட்டி பெமினா மிஸ் இந்தியா மதுரை பெண் கிருத்திகா மும்பை மானஸ்வி மம்கய் beauty pageant miss india manasvi mamgai miss world pageant pantaloons femina miss


Click it and Unblock the Notifications