»   »  வெந்தும், வேகாத குரு!

வெந்தும், வேகாத குரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னத்தின் குரு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.

பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நிஜத்திற்கு, நிழல் வடிவம் கொடுப்பதுதான்மணிரத்னத்தின் தனி ஸ்டைல். இம்மாதிரி செய்வதில் ஒரு பெரிய வசதிஎன்னவென்றால், திரைக் கதை அமைப்பதில் ரொம்ப சிரமப்பட நேரிடாது. அதை விடஈசியாக, படத்திற்கு ஓசியாகவே விளம்பரமும் கிடைத்து விடும்.

மணியின் பல படங்களில் இந்த நிஜமும், நிழலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை நன்றாக கவனித்தால் தெரியும். மணியின் முதல் படம் பகல் நிலவு.சத்யராஜ், முரளி, ரேவதி நடிப்பில் வெளி வந்த அப்படம், வடசென்னையை வாட்டிக்கொண்டிருந்த ஒரு பிரபல தாதாவின் கதையை ஒட்டி இருந்தது.

பிறகு வந்தது அக்னிநட்சத்திரம். சாராய மன்னன் ராமசாமி உடையாரின் வாழ்க்கைக்கதைதான் இது என்று அப்போது பேசப்பட்டது. ஆனாலும் வழக்கம் போலபுன்னகையுடன் நழுவி விட்டார் மணி.

பின்னர் வந்த நாயகன். இதிலும் நிஜ கேரக்டரே நிழலாக மாறியது. மும்பையைக்கலக்கிய தமிழகத்தின் வரதராஜ முதலியார் (மும்பைவாசிகளுக்கு அவர் வரதா பாய்)கதைதான் நாயகனாக மாற்றம் பெற்றது.

மணிரத்தினத்தின் அஞ்சலி வந்தபோது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இதிலும் கூட ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி. படத்திலிருந்து சில காட்சிகள் பாடல்களில்பயன்படுத்தப்பட்டன.

பாம்பே படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம். மும்பை தொடர் குண்டவெடிப்புப்பின்னணியில் உருவான படம். அதை விட பால்தாக்கரே கேரக்டரையே இதில்இமிடேட் செய்து சீன் வைத்திருந்தார் மணி. அது பால் தாக்கரேவையும், சிவசேனைக்கட்சியினரையும் சீற வைத்தது.

அடுத்து இருவர். எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் கதை. அப்படியா என்றுமணிரத்னத்திடம் கேட்டபோது இல்லையே என்று தடாலடிாயக மறுத்தார். ஜெயலலிதாகேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய், பிறகு இந்தித் திரையுலகின் ராணியாக மாறினார்.

இந்தப் படத்திற்கு அப்போது திமுக (ஆட்சியில் இருந்தது) தரப்பில் கடும் அதிருப்திஉருவானதால், எம்.ஜி.ஆர், கேரக்டரை கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்குமாற்றிவிட்டார் மணி.

தில் சே (தமிழில் உயிரே) வந்தபோது அது வட கிழக்கு இந்தியர்களின் பிரச்சனையைவிவரிக்கும் படமாக கூறப்பட்டது. ஆனால் அந்த மக்களின் உண்மை நிலையைப்பிரதிபலிக்கும் விதமாக படம் அமையவில்லை. சூடான பிரச்சனைக்கு இடையேகாதலையும் கோர்த்து விட்டு கலப்படமாக்கினார் மணி.

இதுபோல வந்த இன்னொரு படம்தான் கன்னத்தில் முத்தமிட்டால். இது அவரதுவழக்கமான படங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்த படம் எனலாம். 30 ஆண்டு காலஈழப் போராட்டத்தை, ஈழ மக்களின் உயிர்ப் போராட்டத்தை படு லைட்டாககாட்டியிருந்தார் இப்படத்தில் மணி.

வளர்ந்த நாடுகளின் ஆயுத வியாபாரத்தை பிரமாதப்படுத்துவதற்காகவே இலங்கைஅரசும், விடுதலைப் புலிகளும் மோதிக் கொள்வதைப் போல வசனங்கள் வேறு.

இந்த வரிசையில் வந்துள்ள இன்னொரு படம்தான் குரு. தனது கடும் உழைப்பால்இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக உயர்ந்த திருபாய் அம்பானியின் வாழ்க்கைகதையை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து படத்தையும் எடுத்து முடித்துரிலீஸும் பண்ணி விட்டார் மணி.

இதுகுறித்து சர்ச்சை எழுந்தபோது அம்பானி கதை அல்ல இது என்று ஒரே போடாகபோட்டு விட்டார். அதை விட படு சூப்பராக, அம்பானியைப் போல எத்தனையோயகடின உழைப்பாளிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எனது குருஎன்றும் அட்டாக் செய்து விட்டார்.

இந்திய மீடியா உலகின் ஜாம்பவான் ராம்நாத் கோயங்கா, நுஸ்லி வாடியா, குருமூர்த்திஆகியோருக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள், பூசல்கள்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் குரு படத்தின் கதைக் களத்தைஅமைத்துள்ளார் மணி. அதையும் கூட உருப்படியாக தரவில்லை.

இப்படத்தில் அபிஷேக்கின் பெயர் குருபாய். இது திருபாய் கதை என்பதற்கு இதுவேமுதல் சான்று. ரியல் அம்பானிக்கு 2 ஆண் குழந்தைகள். ரீல் அம்பானிக்கு 2 பெண்குழந்தைகள்.

கிளைமேக்ஸ் அதை விட பெரிய குழப்படி. குருபாய் மீது பல்வேறு புகார்கள்எழுகின்றன. அவற்றின் பேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்படுகிறார் குருபாய்.டிரிப்யூனல் முன் நிறுத்தப்படுகிறார்.

அது ஒரு ஓபன் கோர்ட். பத்திரிக்கைக்காரர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிரம்பிவழிகிறது. குருபாய் டிரிப்யூனலில் ஆஜராகி 5 நிமிடம் பேசுகிறார்.

இந்தியப் பொருளாதாரத்தைக் காக்கும் சிற்பி போல பேசும் குருபாய், தன் மீதானபுகார்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் எந்த மறுப்பும் தரவில்லை.

ஆனால், அவரது உரையால் கவரப்பட்ட நீதிபதி, குருபாயைகுற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து தீர்ப்பளிக்கிறார். லேசான அபராதம் மட்டும்குருபாய்க்கு விதிக்கப்படுகிறது.

விசாரணையின்போது நீதிபதிகளில் ஒருவர், இன்னொருவரிடம் கேட்கிறார். குருபாய்,தாதாவா அல்லது அறிவாளி தொழிலதிபரா? (அதாவது நாயகனில் கமலிடம், அவரதுபேரன் கேட்பானே தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா என்று, அதுபோல). அதற்குஇன்னொரு நீதிபதி இரண்டுமேதான் என்கிறார்.

இப்படியாக ஆப்-பாயில் மாதிரி வெந்தும் வேகாமல் குரு நம்மை வாட்டுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil