»   »  மணிரத்னத்தின் நேற்று-இன்று-நாளை வழக்கமாக பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்றால் கூச்சமாய் போய் ஒதுங்கிக் கொள்ளும் மணிரத்தினம் முதல் முறையாகஒரு கலை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக் காட்டப் போகிறார்.பான்யன் சமூக நல அமைப்புக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்,சிவாஜியின் படப் பாடல்களுக்கு கமல்ஹாசனும், ரஜினியின் பாடல்களுக்கு விக்ரமும் ஆடவுள்ளனர்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இயக்குனர் மணி ரத்தினத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கவுள்ளன.மணிரத்தினம் தவிர நடிகைகள் ரேவதி, ரோஹினி ஆகியோரும் நிகழ்ச்சிகளை வடிவமைத்து இயக்கவுள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் மிக பிஸியாக இருக்கும் மணிரத்தினம் தன் அருகே இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானையும்வைத்துக் கொண்டு கூறியதாவது:வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வழக்கமான நட்சத்திரக் கலை விழா போல இல்லாமல் வெகுவித்தியமான முறையில் இதை வடிவமைக்கவுள்ளோம்.எம்.ஜி.ஆர்.- சிவாஜி படங்களில் இடம் பெற்ற 6 பாடல்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆடப் போகிறார். அதேபோல, ரஜினிகாந்த்படப் பாடல்கள் சிலவற்றிற்கு விக்ரம் ஆடப் போகிறார்.இவர்கள் தவிர சிலம்பரசன், பரத், ஸ்ரீகாந்த், ஆர்யா, விவேக், நடிகைகள் சதா, ரீமா சென், கிரண், சாயா சிங், மாளவிகா, அசின்,குஷ்பு, லைலா, சுகன்யா, ஷோபனா, பூஜா, ஜெனிலியா, தியா ஆகியோரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும்தொகையில் ஒரு பகுதி பான்யன் அமைப்புக்கு வழங்கப்படும்.மொத்தம் 20 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு நேற்று-இன்று-நாளை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் ஸ்ரீகிருஷ்ணா கார்டன் மைதானத்தில் இதற்காக பிரமாண்டமான செட்போடப்படுகிறது என்றார் மணிரத்தினம்.

மணிரத்னத்தின் நேற்று-இன்று-நாளை வழக்கமாக பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்றால் கூச்சமாய் போய் ஒதுங்கிக் கொள்ளும் மணிரத்தினம் முதல் முறையாகஒரு கலை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக் காட்டப் போகிறார்.பான்யன் சமூக நல அமைப்புக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்,சிவாஜியின் படப் பாடல்களுக்கு கமல்ஹாசனும், ரஜினியின் பாடல்களுக்கு விக்ரமும் ஆடவுள்ளனர்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இயக்குனர் மணி ரத்தினத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கவுள்ளன.மணிரத்தினம் தவிர நடிகைகள் ரேவதி, ரோஹினி ஆகியோரும் நிகழ்ச்சிகளை வடிவமைத்து இயக்கவுள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் மிக பிஸியாக இருக்கும் மணிரத்தினம் தன் அருகே இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானையும்வைத்துக் கொண்டு கூறியதாவது:வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வழக்கமான நட்சத்திரக் கலை விழா போல இல்லாமல் வெகுவித்தியமான முறையில் இதை வடிவமைக்கவுள்ளோம்.எம்.ஜி.ஆர்.- சிவாஜி படங்களில் இடம் பெற்ற 6 பாடல்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆடப் போகிறார். அதேபோல, ரஜினிகாந்த்படப் பாடல்கள் சிலவற்றிற்கு விக்ரம் ஆடப் போகிறார்.இவர்கள் தவிர சிலம்பரசன், பரத், ஸ்ரீகாந்த், ஆர்யா, விவேக், நடிகைகள் சதா, ரீமா சென், கிரண், சாயா சிங், மாளவிகா, அசின்,குஷ்பு, லைலா, சுகன்யா, ஷோபனா, பூஜா, ஜெனிலியா, தியா ஆகியோரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும்தொகையில் ஒரு பகுதி பான்யன் அமைப்புக்கு வழங்கப்படும்.மொத்தம் 20 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு நேற்று-இன்று-நாளை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் ஸ்ரீகிருஷ்ணா கார்டன் மைதானத்தில் இதற்காக பிரமாண்டமான செட்போடப்படுகிறது என்றார் மணிரத்தினம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக பொது நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என்றால் கூச்சமாய் போய் ஒதுங்கிக் கொள்ளும் மணிரத்தினம் முதல் முறையாகஒரு கலை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக் காட்டப் போகிறார்.

பான்யன் சமூக நல அமைப்புக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான கலை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்,சிவாஜியின் படப் பாடல்களுக்கு கமல்ஹாசனும், ரஜினியின் பாடல்களுக்கு விக்ரமும் ஆடவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இயக்குனர் மணி ரத்தினத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கவுள்ளன.

மணிரத்தினம் தவிர நடிகைகள் ரேவதி, ரோஹினி ஆகியோரும் நிகழ்ச்சிகளை வடிவமைத்து இயக்கவுள்ளனர்.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் மிக பிஸியாக இருக்கும் மணிரத்தினம் தன் அருகே இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானையும்வைத்துக் கொண்டு கூறியதாவது:

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வழக்கமான நட்சத்திரக் கலை விழா போல இல்லாமல் வெகுவித்தியமான முறையில் இதை வடிவமைக்கவுள்ளோம்.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி படங்களில் இடம் பெற்ற 6 பாடல்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆடப் போகிறார். அதேபோல, ரஜினிகாந்த்படப் பாடல்கள் சிலவற்றிற்கு விக்ரம் ஆடப் போகிறார்.

இவர்கள் தவிர சிலம்பரசன், பரத், ஸ்ரீகாந்த், ஆர்யா, விவேக், நடிகைகள் சதா, ரீமா சென், கிரண், சாயா சிங், மாளவிகா, அசின்,குஷ்பு, லைலா, சுகன்யா, ஷோபனா, பூஜா, ஜெனிலியா, தியா ஆகியோரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும்தொகையில் ஒரு பகுதி பான்யன் அமைப்புக்கு வழங்கப்படும்.

மொத்தம் 20 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு நேற்று-இன்று-நாளை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் ஸ்ரீகிருஷ்ணா கார்டன் மைதானத்தில் இதற்காக பிரமாண்டமான செட்போடப்படுகிறது என்றார் மணிரத்தினம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil