twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட.. சுதந்திர வீரர்களை வெளிக் காட்டும் சமீபத்திய பிரம்மாண்ட படங்கள்!

    |

    சென்னை: மூவர்ண கொடியை நெஞ்சில் ஏந்த இன்னும் மூன்று தினங்களே உள்ளன.

    சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட கதைகள் என சமீபத்தில் பிரம்மாண்டமாக ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன.

    கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா முதல் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் ராஜமெளலியின் இரத்தம் ரணம் ரெளத்திரம் படம் வரை சொல்லும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை இங்கே காண்போம்..

    மூத்த மகளின் 25வது பர்த்டே.. 2வது மனைவி கரீனா கபூர் கர்ப்பம்.. டபுள் சந்தோஷத்தில் சைஃப் அலி கான்!மூத்த மகளின் 25வது பர்த்டே.. 2வது மனைவி கரீனா கபூர் கர்ப்பம்.. டபுள் சந்தோஷத்தில் சைஃப் அலி கான்!

    ஜான்சி ராணி

    ஜான்சி ராணி

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த ஆண்டு குடியரசு தினத்துக்கு வெளியான மணிகர்ணிகா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மணிகர்ணிகாவாக இருந்த வீர மங்கை எப்படி ஜான்சி எனும் நாட்டிற்கு ராணியாகவும், பல நூறு வெள்ளையர்களின் தலைகளை கொய்த வீராங்கனையாகவும் சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாகவும் இருந்தார் என்பதை சமீபத்தில் பிரம்மாண்டமாக எடுத்து சொன்ன படம் தான் மணிகர்ணிகா.

    சைரா நரசிம்ம ரெட்டி

    சைரா நரசிம்ம ரெட்டி

    பாகுபலி படத்தைத் தொடர்ந்து டோலிவுட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செலவு செய்து சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படம் சைரா நரசிம்ம ரெட்டி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த படத்தில் ஆந்திராவில் சுதந்திர போராட்டத்திற்காக குரல் கொடுத்த சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு பிரம்மாண்டமாக கூறப்பட்டு இருக்கும். மேலும், யோகியான அவரை தூக்கில் போட முடியாமல், தலையை வெட்டி கொன்ற வரலாறு படத்தை பார்த்த தேச பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கும்.

    மறக்கப்பட்ட மாவீரனின் கதை

    மறக்கப்பட்ட மாவீரனின் கதை

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தானாஜி படம் முகலாய பேரரசர் அவுரங்கசிப்பை எதிர்த்து போராடிய மறக்கப்பட்ட வீரர் தானாஜியை குறித்து உருவாக்கப்பட்டு இருக்கும். அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    அல்லுரி சீதாராமா ராஜு

    அல்லுரி சீதாராமா ராஜு

    ஆங்கிலேயருக்கு அல்லு விடும் அளவுக்கு தனது வீரத்தால் மிரட்டிய அல்லுரி சீதாராமா ராஜு மற்றும் கொமரம் பீமின் கதையை மையமாக வைத்து சுதந்திர தீ பறக்க பாகுபலி படத்தைத் தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி நடிக்கும் இந்த படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகி உள்ளது.

    English summary
    Manikarnika, Syera Narashima Reddy, Tanhaji and RRR movie will well elaborately portray the unsung heroes of Patriotism in recent days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X