மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மகன் அறிமுகம்

முத்துராமனின் மகனாக மட்டுமே அறியப்பட்ட கார்த்திக்கை மிகப் பெரிய ஸ்டாராக மாற்றியதும் மெளன ராகம்தான். தற்போது அரசியல் அபிலாஷைகளை ஓரம் கட்டி விட்டு மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கார்த்திக்.
அதே மணிரத்னத்தின் ராவணன் படத்தில் சிறப்பான கேரக்டர் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
இந்த நிலையில், கார்த்திக்கின் மகனும் நடிகராகப் போகிறார். அவரது பெயர் கெளதம். இவரை அறிமுகம் செய்யப் போகிறவர் மணிரத்னம். ராவண் படத்தை முடித்து விட்டு அடுத்து மணிரத்னம் இயக்கப் போகும் படத்தில்தான் கெளதம் ஹீரோவாகிறார்.
இந்தப் படமும் வழக்கம் போல தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. இந்தியில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் ரன்பீர் கபூர். தமிழ்ப் பதிப்பில் கெளதம் ஹீரோவாக நடிப்பாராம். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications











