'பூக்கடை' மணிரத்தினம்!

By Sudha

Karthik and Maniratnam
ராவணன் படத்தை வெளியிட்டு விட்டு சற்று அமைதியாக இருந்து வந்த மணிரத்தினம் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டாராம்.

வித்தியாசமான பெயர்களை தனது படங்களுக்கு சூட்டும் மணிரத்தினம் இந்த முறை கையில் எடுத்திருப்பது பூக்கடை என்ற பெயரை.

இதுவரை தமிழ், இந்தி என சேஃபாக விளையாடிக் கொண்டிருந்தவர் இந்த முறை தமிழில் மட்டுமே இயக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

படத்திற்கு கதாநாயகனையும் அவர் தேர்வு செய்து விட்டார். அவர், கார்த்திக்கின் மகன் கெளதம்தான். தனது மகனை நாயகனாக்கும் முடிவுக்கு கார்த்திக் வந்து நெடு நாட்களானாலும் கூட மணிரத்தினம்தான் அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என பொறுமையாக இருந்தாராம். இப்போது மணியே கூப்பிட்டு கெளதமை ஹீரோவாக்கப் போவதாக கூறியுள்ளாராம்.

பெங்களூரில் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார் கெளதம். மணிரத்தினம் படத்தின் நாயகன் என்ற செய்தியைக் கேட்டது முதல் உற்சாகமாக இருக்கிறாராம்.

சற்றும் பிரமாண்டம் இல்லாமல் இப்படத்தை படு இயல்பாக எடுக்கவுள்ளாராம் மணிரத்தினம்.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.சி.ஸ்ரீராம், மணிரத்தினத்துடன் கை கோர்க்கிறார். இசை வழக்கம் போல ரஹ்மான்தான்.

விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X