ஸ்பெஷல்ஸ்
மணிரத்னம் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். பக்கா கமர்ஷியல் படமாக எடுக்கப் போகிறார்.
சூர்யா மற்றும் ஷாம் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.
முன்னதாக ஸ்ரீகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் டைட்டாக இருப்பதால் அவர் இழுத்தடித்தார். இதையடுத்து அவரைத் தூக்கிவிட்டு ஷாமை கமிட் செய்திருக்கிறார் மணி.
ஹீரோயின்களாக மீரா ஜாஸ்மின், திரிஷா இருவரும் புக் ஆகியிருக்கிறார்கள்.
மீராவை ரொம்ப நாளைக்கு முன்பே பிடித்துப் போட்டுவிட்டமணி ரத்னம் ரொம்ப நாளாக இரண்டாவது ஹீரோயினைத் தேடி வந்தார்.
பல புதுமுகங்களைக் கூட அழைத்துப் பார்த்தார். ஆனால், யாரும் தேறவில்லை. இதையடுத்து திரிஷாவை புக் செய்துள்ளார்.
இதில் இன்னொரு முன்னணி ஹீரோயினையும் நடிக்க வைக்க மணி திட்டமிட்டிருக்கிறார். அது ஸ்னேகாவாக இருக்கலாம்என்கிறார்கள்.
வழக்கம்போல ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். சூட்டிங் கொல்கத்தா, அஸ்ஸாம் பக்கம் நடக்கலாம் என்கிறார்கள்.
அண்ணன் ஜி.வியின் மறைவால் படம் தொடர்பான எல்லா விஷயங்களையும் கொஞ்சம கிடப்பில் போட்ட மணி ரத்னம் இப்போதுமீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டார்.
விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். படத்தைத் தயாரிக்கப் போவது அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தான்.
சூர்யா, ஷாம், மீரா ஜாஸ்மீன், திரிஷா எல்லோருமே மணி ரத்னத்தின் படத்தில் நடிக்கப் போவது இது தான் முதல்முறை.
இதனால்டென்சன் கலந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











