twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்காக மணிவண்ணன் அப்பா அந்த எண்ணத்தை தூக்கி எறிந்தார்... சீமான் நெகிழ்ச்சி

    |

    சென்னை: இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் சீமான்

    அதன் பின்னர் திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநர் ஆனார்.

    நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த சீமான் ஒரு கட்டத்தில் திரைத்துறைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

    புஷ்பா படத்துல அப்படி பண்ணா.. நீ இப்படி பண்ணு.. சினிமாவை வைத்து சீமான் பேசிய கலகல பேச்சு! புஷ்பா படத்துல அப்படி பண்ணா.. நீ இப்படி பண்ணு.. சினிமாவை வைத்து சீமான் பேசிய கலகல பேச்சு!

     சினிமா ஆசை

    சினிமா ஆசை

    இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோரின் திரைப்படங்களை பார்த்துவிட்டு இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் அவர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நடிகர் பிரபு நடித்திருந்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றியும் கண்டார். அதன் பின்னர் மீண்டும் பிரபுவை வைத்து ஒரு படமும் சத்யராஜை வைத்து ஒரு படமும் இயக்கினார்.

     போராடிய காலம்

    போராடிய காலம்

    அந்தப் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அடுத்ததாக நடிகர்கள் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், ராஜ்கிரன் என்று நான்கு நடிகர்களை வைத்து வெவ்வேறு காலகட்டங்களில் நான்கு படங்களை துவங்கினார். ஆனால் எந்தப் படமும் ஷூட்டிங் வரை செல்லவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கிய படம் தான் தம்பி. அந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னரும் நடிகர்கள் அஜித்குமார், விஜய், சிம்பு, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரை வைத்து பல தருணங்களில் படங்களை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார் சீமான். ஆனால் எந்தப் படமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

     அரசியல் சப்போர்ட்

    அரசியல் சப்போர்ட்

    இடையில் அரசியலில் நுழைந்த சீமான் தனக்கென மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்திற்கு ஆதரவாக நடிகர்கள் சத்யராஜ், இயக்குநர்கள் மணிவண்ணன் மற்றும் ஆர்.கே.செல்வமணி தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் உரையாடலில் ஏன் முன்னர் போல இப்போது யாரும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மணிவண்ணன் அவர்கள் இறக்கும் வரை என்னுடைய இயக்கத்தில் இருந்தார். ஆர்.கே.செல்வமணி அண்ணன் என்னுடைய சீனியராக மணிவண்ணன் அப்பாவிடம் வேலை பார்த்தவர். அன்பின் காரணமாக அவப்போவது எனக்காக வந்து பேசுவார். இப்போது கூப்பிட்டாலும் வருவார். ஆனால் நான்தான் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று யாரையும் அழைப்பதில்லை என்று கூறியுள்ளார்.

     அண்ணன் சத்யராஜ்

    அண்ணன் சத்யராஜ்

    மணிவண்ணன் அப்பா நான் அவரிடம் வேலை பார்த்தவன் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு என்னுடன் இருந்தார். அண்ணன் சத்யராஜ் அவர்களைப் பொறுத்தவரை அவர் பெரியார் கருத்தியலில் ஈடுபாடு கொண்டவர். நான் அந்தப் பாதையில் பயணம் செய்தவன்தான். ஆனால் இப்போது என் பாதை மாறிவிட்டது என்று கூறி இருக்கிறார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்திருந்த அமைதிப்படை திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய சீமான் பின்னர் சத்யராஜை வைத்து வீரநடை என்கிற திரைப்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Naam Tamilar Katchi Thalaivar Seeman Shared the Interesting Incident with her Senior Manivannan. He Said, Manivannan Appa Give Away the Thought Only For me and I completely into politics after certain peroid.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X