பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

By Shankar

பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மஞ்சப்பை தமிழ்ப் படம் தேர்வாகியுள்ளது.

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மஞ்சப்பை.

தாத்தா, பேரன் பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை ராகவன் இயக்கியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

Manjappai to screen at BRICS festival

இப்போது, விருதுகளையும் குவிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக வருகிற 22-ந் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சர் சென்டரில் நடைபெறும் பிரிக்ஸ் எனும் உலக திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (Brazil, Russia, India, China, South Africa) ஆகிய நாடுகள் இணைந்ததுதான் இந்த பிரிக்ஸ் (BRICS).

இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆனால், தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் 'மஞ்சப்பை' என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X