பெண்ணை கற்பழித்த வழக்கு-மன்சூருக்கு கோர்ட் கெடு
உதவியாளராக இருந்த பெண்ணைக் கற்பழித்து குழந்தையைக் கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கட்ட சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கெடு விதித்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகானிடம் உதவியாளராக இருந்தவர் சினேகா சர்மா. கடந்த 1999ம் ஆண்டு தன்னை மன்சூர் அலிகான் கற்பழித்து விட்டதாக புகார் கூறினார் சினேகா. இதையடுத்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் மன்சூருக்கு ரூ. 10 லட்சம் அபராதமும், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்சூர் அலிகான் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாட்ஷா, ரூ. 10 லட்சம் அபராதப் பணத்தை மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும். அதை செலுத்தி விட்டால் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
ஆனால் ரூ. 3 லட்சம் பணத்தைத் தான் கட்டினார் மன்சூர் அலிகான். மீதப் பணத்தைக் கட்டாமல் இருந்து வந்தார். மன்சூர் அலிகான் மூலமாக சினேகாவுக்குப் பிறந்த குழந்தையின் நலனுக்காகவே இந்தப் பணம் வசூலிக்கப்படுகிறது என்று நீதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், இன்றைக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி கெடு விதித்துள்ளார். எனவே மீதப் பணத்தையும் கட்டி விட்டு தண்டனையிலிருந்து மன்சூர் தப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











