»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ் மீடியா ஆர்ட்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக மந்த்ராவை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

ஆந்திராவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து தன் புஜ பலத்தால் வெள்ளித் திரையை மட்டுமல்லாமல் தியேட்டர்களையே அதிரவைத்தவர் மந்த்ரா. இங்கே மந்த்ரா.. அங்கே ராசி என தெலுங்கிலும் குலுக்கி எடுத்து கலக்கினார்.

இதனால் சென்னையில் பல சொத்துக்களை வளைத்துப் போட்டார். வடபழனியில் அவருக்கு ஒரு அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்இருக்கிறது.

ஆனால், திடீரென தமிழில் மடமடவென வாய்ப்புக்கள் சரிய, தெலுங்கே கதியாகிப் போனார். சொந்த ஊரும் அதுவே என்பதால்பிரச்சனை இல்லை. பம்பர் குலுக்கல் டான்ஸ்களைப் போட்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கும் பஞ்சம்வந்துவிட்டது.

இந் நிலையில் முதலில் ஒரு தொழிலதிபரோடு கிசுகிசுக்கப்பட்ட மந்த்ரா ஒரு உதவி இயக்குனரைக் கரம் பிடித்துவிட்டார். இந்தக்கல்யாணத்தை இன்னும் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் விஷயம் வெளியே கசிந்துவிட்டது.இதனால் வாய்ப்புக்களும் மேலும் குறைந்துவிட்டன.

உடம்பு பல மடங்கு பெருத்தது தான் இதற்குக் காரணம் என்று யாரோ சொல்லக் கேட்டு உடலை கிச் ஆக்கும் முயற்சியில்இறங்கினார். நினைத்த மாதிரியே உடம்பு ஒரு ஷேப்புக்குள் வந்துவிட்டது. ஆனாலும் சினிமா வாய்ப்புக்கள் வரவில்லை.

இதையடுத்து மெதுவாக சின்னத்திரைப் பக்கமாக காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழில் அல்ல, தெலுங்கில்... தான். அந்தத்தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல், அதைத் தயாரிக்கவும் செய்கிறார் மந்த்ரா.

அத்தோடு சினிமா வாய்ப்புக்களையும் விடாமல் தேடிக் கொண்டு தான் இருக்கிறார். தனது திறமையை எல்லாம் காட்டிஅவ்வப்போது சில லகரங்கள் தேறும் அளவுக்கு ஏதாவது ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடும் சான்ஸை வளைத்துவிடுகிறார்.

அப்படித்தான் வெங்கேடஷ் நடிக்கும் ஒரு படத்துக்கு விசாகப்பட்டிணம் ரயில் நிலையத்தில் நடந்த சூட்டிங்கில் முக்கால்உடம்பைக் காட்டி மந்த்ரா போட்ட டான்ஸ் அங்கு வந்த ரயில்களைக் கூட நடுங்க வைத்துவிட்டதாம்.

இதற்கிடையே தமிழிலும் அவர் அவ்வப்போது வலையை வீசிக் கொண்டு தான் இருக்கிறார். குறைக்கப்பட்ட தனது உடம்பழகைபடம் பிடித்து ஆல்பம் போட்டு கோலிவுட்டில் ரவுண்டுக்கு விட்டிருக்கிறார்.

அப்படி வலை வீசியதில் சமீபத்தில் ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. சத்யராஜ் நடிக்க குருதனபால் இயக்கும்படமொன்றில் மந்த்ரா தான் நாயகி. கூடவே அபிதகுஜலாம்பாளும்.. அதாங்க சேது அபிதா. அவரும் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, வைத்து தமிழிலும் சின்னத்திரைப் பக்கம் வரலாமா என்ற சிந்தனையில் இருக்கிறாராம் மந்த்ரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil