லாக்டவுன் நேரத்துல கர்ப்பம் மட்டுமில்ல.. இப்படியும் ஆன பிரபலங்கள்.. என்ன மேட்டருன்னு பாருங்க!

சென்னை: லாக்டவுன் நேரத்தில் பல நடிகைகள் கர்ப்பமாகியுள்ள நிலையில் நடிகைகள் உட்பட பிரபலங்கள் சிலர் வேறு மாதிரி ஆகியுள்ளனர்.

Recommended Video

Eramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார் - Filmibeat Tamil

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரபலங்கள் பலரும் வேலையின்றி வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பல பிரபலங்கள் கர்ப்பாமாகியிருப்பதாக தகவல் வெளியானது.

எடை குறைப்பு

எடை குறைப்பு

இந்நிலையில் கோலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரும் எடையை குறைத்து, தங்களின் கொழுக் மொழுக் தோற்றத்தில் இருந்து சிக்கென ஸ்லிம் பிட்டாகியுள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்தில், வொர்க் அவுட், யோகா, ரொட்டின் ஹேப்பிட்ஸ் என அவர்கள் முறையாக பின்பற்றியதே காரணம் என கூறப்படுகிறது. அப்படி உடல் உடையை குறைத்த பிரபலங்கள் யார் என்று பார்ப்போம்.

நடிகை வித்யு ராமன்

நடிகை வித்யு ராமன்

முதலில் நடிகை வித்யு ராமன்.. தமிழ் சினிமாவில் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, வீரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை வித்யு ராமன். தமிழ் சினிமாவின் குண்டான நடிகைகளில் ஒருவராக உள்ள வித்யு ராமன், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் தூக்க முறைகளால் 86 கிலோ எடையில் இருந்தார். இதனால் மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இதனை தொடர்ந்து தனது உடல் எடையை குறைக்கும் பயணத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். நேட்சுரோபதி, ஆயுர்வேதம், யோக, டயட் என பின்பற்றிய வித்யு ராமன் தற்போது பெருமளவு எடையை குறைத்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த்

அடுத்து நடிகை யாஷிகா ஆனந்த்.. தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். யாஷிகா பிட்டாக இருந்த போதும் தொடர்ந்து எடைக் குறைப்பு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பான போட்டோக்களை பலமுறை சமூக வலைதளங்களில் ஷேல் செய்தார். இந்நிலையில் லாக் டவுன் நேரத்தில் தனது உடல் எடையில் நல்ல மாற்றத்தை சந்தித்துள்ளார் யாஷிகா. மூன்று மாதத்தில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என அதான் பெல்லி குறைத்த போட்டோவை ஷேர் செய்து வாவ் போட வைத்தார் யாஷிகா.

பாடலாசிரியர் விவேக்

பாடலாசிரியர் விவேக்

இதேபோல் பாடலாசிரியர் விவேக்கும் பெரிய அளவு எடையை குறைத்த ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் அவர் கிட்டதட்ட 15 கிலோ வரை எடை இழந்துள்ளார். வேலையால் அதிக பிரஷரில் இருந்ததாகவும் ஆனால் இந்த லாக்டவுன் தனக்கு ஒரு ஆசீர்வாதம் போல இருந்தது என்றும் கூறியுள்ள விவேக், இந்த நேரத்தில் எடையை குறைக்க வேலை பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதிகளவு வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்ததும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றியதுமே தனது எடை குறைப்புக்கு காரணம் என கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் சைமன்

இசையமைப்பாளர் சைமன்

அடுத்து இசையமைப்பாளர் சைமன் கிங். இவர் லாக்டவுன் நேரத்தில் 25 கிலோ எடையை குறைத்ததாக கூறி ஒட்டு மொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் பெற்றார். அவருடைய பழைய மற்றும் புதிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆண்டு பிப்ரவரியில் 128 கிலோ எடையுடன் இருந்த அவர், முதலாம் கட்ட லாக்டவுனின் போது 3முதல் 5 கிலோ எடையை குறைத்ததாக கூறினார். இதனை தொடர்ந்து 5.. 5 கிலோவாக குறைத்ததாக கூறியுள்ளார்.

நடிகை ஷெரின்

நடிகை ஷெரின்

அடுத்து நடிகை ஷெரின்.. ஷெரின் மாஸிவ் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தெரிந்தது. நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் சமீபத்தில் தனது எடை மாற்ற கதை பற்றி பேசினார். தனது சமூக வலைதள கணக்கில், ஷெரின் ஆரஞ்சு உடை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார், அவர் பிக் பாஸில் இருந்தபோது என்றும் இப்போது என்றும் குறிப்பிட்டு ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்களில் கடுமையான எடை குறைப்பு தெரிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X