கல்யாணத்துக்கு க்ரீன் சிக்னல்.. குழந்தைக்கு ரெட் சிக்னல்.. ஸ்ரேயா முதல் காஜல் அகர்வால் வரை!

சென்னை: நடிகைகள் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதே பெரிய விஷயமாக உள்ள நிலையில், குழந்தை விஷயம் என்றால் பிக் 'நோ'வாகத் தான் உள்ளது.

சில நடிகைகள் இந்த காரணத்திற்காகவே திருமணமே செய்து கொள்ளாமலும் காலத்தை ஓட்டி வருகின்றனர்.

சிலர் திருமணம் ஆனாலும், குழந்தை வேண்டாம் என தள்ளி வைத்து வருகின்றனர். அப்படி தள்ளிப் போட்டு வரும் முன்னணி நடிகைகள் யார் யார் என்பதை இங்கே பார்ப்போம்.

குழந்தை வேண்டாம்

குழந்தை வேண்டாம்

மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஸ்சிவ்வை ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டார். பெரிதாக படங்களில் நடிக்காத நிலையிலும் அவர் இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் காதல் கணவருடன் ஜாலியாக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

சமந்தா கர்ப்பம்

சமந்தா கர்ப்பம்

நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் காதலித்து வந்த நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு லாக்டவுனில் எந்தவொரு புகைப்படங்களையும் வெளியிடாமல் தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்காக ரகசியம் காத்த நிலையில், சமந்தா கர்ப்பம் ஆகி விட்டார் என்றே வதந்திகள் வைரலாகின. ஆனால், கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில், இப்போதைக்கு குழந்தைக்கு ரெட் சிக்னல் தானாம்.

ரொம்ப வருஷமாச்சே நஸ்ரியா

ரொம்ப வருஷமாச்சே நஸ்ரியா

நேரம், ராஜா ராணி என நடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிய நடிகை நஸ்ரியா நடிகர் பகத் ஃபாசில் உடன் பெங்களூரு டேஸ் படத்தில் நடித்த போது காதலில் விழுந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டே பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இன்னமும் நடித்து வரும் நஸ்ரியா பேபிக்கு பிளானே பண்ணலயாம்.

ஆர்யா – சாயிஷா

ஆர்யா – சாயிஷா

நீண்ட ஆண்டுகளாக பெண் தேடிக் கொண்டிருந்த நடிகர் ஆர்யாவுக்கு கடந்த 2019ம் ஆண்டு கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் உடனடியாக நடைபெற்று விட்டது. திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா உடன் மட்டுமே டெடி படத்தில் நடித்துள்ள சாயிஷாவும் இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வர வில்லையாம். 2 வருஷம் தானே ஆகுது. ஜாலியா இருக்கட்டும்.

காஜலை அவசரப்படுத்துறாங்க

காஜலை அவசரப்படுத்துறாங்க

கடந்த அக்டோபரில் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கணவர் மற்றும் தங்கையுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் விரைவில் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது குழந்தையுடன் விளையாட ஆள் வேண்டும் என்றும் காஜல் அகர்வாலின் தங்கையும் முன்னாள் நடிகையுமான நிஷா அகர்வாலே டார்ச்சர் செய்துள்ளார். எப்போ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட உரிமை என்பதால் திருமணமான பிரபலங்கள் ஜாலியாக வாழ வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X