For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அவன் ’பேன்ட்’ நல்லா இருந்திருக்கும்.. இந்த மாதிரி ஒரு இண்டர்வியூ சீனை பார்த்து இருக்கவே மாட்டீங்க!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏலியன்களையே சுட்டு வீழ்த்தும் ஆக்‌ஷன் கிங்காக மென் இன் பிளாக் படங்களிலும் அதிரடி காட்டும் போலீஸ் அதிகாரியாக பேட் பாய்ஸ் படங்களிலும் நடித்து வந்த வில் ஸ்மித்தை உங்களுக்குள்ளும் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என நடுத்தர குடும்பத் தலைவராக மாற்றி அற்புத நடிப்பை அவரிடம் இருந்து வர வழைத்த படம் தான் 'The Pursuit of Happyness'.

  கடந்த 2006ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் வில் ஸ்மித் உடன் அவரது ரியல் மகனான ஜேடன் ஸ்மித்தும் நடித்து அசத்தி இருப்பார்.

  ஏகப்பட்ட சூப்பர் சீன்களை கொண்டுள்ள அந்த படத்தில் மாஸ்டர் பீஸாக இடம்பெற்றுள்ள இண்டர்வியூ சீன் பற்றி இங்கே காண்போம்.

  இப்படியொரு இண்டர்வியூ

  இப்படியொரு இண்டர்வியூ

  கிறிஸ்கார்ட்னர் எழுதிய தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் நாவலை தழுவியே இந்த படத்தை இயக்குநர் கேபிரியல் முச்சினோ இயக்கினார். 2021ம் ஆண்டில் கூட இண்டர்வியூவுக்கு செல்பவர்கள் ஒருவித பயம் மற்றும் பதட்டத்துடனே செல்வார்கள். ஆனால், 2006ம் ஆண்டில் இப்படியொரு இண்டர்வியூ காட்சியை வைத்த இடத்திலேயே படம் வெற்றியடைந்து விட்டது.

  குடும்ப கஷ்டம்

  குடும்ப கஷ்டம்

  மனைவி கணவரையும் குழந்தையும் பிரிந்து விட்டு வேறு ஒரு வேலைக்காக பக்கத்து ஊருக்கு சென்று விடுகிறார். தனது 5 வயது மகனுடன் வசித்து வரும் வீட்டை காலி செய்ய ஓனர் பிரச்சனை பண்ண இன்னும் ஒரு வாரம் தங்கிக் கொள்கிறேன் என்றும் அதற்கு மாறாக அந்த வீட்டிற்கு பெயின்ட் அடித்து தரும் பணியையும் மேற்கொள்கிறார். அந்த நேரம் பார்த்து பல நாட்களாக பார்க்கிங் டிக்கெட் கட்டாத குற்றத்திற்காக போலீசார் வில் ஸ்மித்தை ஒரு நாள் காவலில் வைத்து மறுநாள் காலை அனுப்புகின்றனர்.

  வாய்ப்பு முக்கியம்

  வாய்ப்பு முக்கியம்

  வாழ்வில் வரும் சில முக்கிய வாய்ப்புகளை ஏதோ சில காரணங்களுக்காக உதறி விடக் கூடாது என்பதை இந்த காட்சியின் மூலம் இயக்குநர் அழகாக எடுத்து உரைத்திருப்பார். சட்டை பட்டன் இல்லாத கிழிந்த சட்டை, முகம் எல்லாம் பெயின்ட் துளிகள், குளிக்கவும் இல்லை. இப்படியொரு நிலையிலும் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த இண்டர்வியூ வாய்ப்பை நழுவ விடக் கூடாது என அப்படியே இண்டர்வியூ இடத்திற்கு கிறிஸ் கார்ட்னர் கதாபாத்திரத்தில் நடித்த வில் ஸ்மித் செல்வார்.

  ஒரு கதை சொல்லட்டா

  ஒரு கதை சொல்லட்டா

  உள்ளே நுழைந்ததும் அதுவரை இருந்த பதட்டம் மற்றும் பயத்தை வெளியே வைத்து விட்டு அனைத்து நேர்காணல் நடத்தும் அதிகாரிகளுக்கும் கை கொடுப்பார். பின்னர், அவரது இருக்கையில் அமர்ந்ததும், கிட்டத்தட்ட அரை மணி நேரமா? நான் ஏன் இப்படி வந்தேன் என்பதற்கான காரணத்தை சொல்ல ஏகப்பட்ட கதைகளை சிந்தித்தேன். ஆனால், எதுவும் சிக்கவில்லை என்பார்.

  உண்மை வெல்லும்

  உண்மை வெல்லும்

  இண்டர்வியூக்களில் தேவையற்ற பொய்களை சொல்வதை காட்டிலும் உண்மையை சொன்னால், அதுவே உங்களுக்கு அந்த நேர்காணலில் உங்களுக்கு சில புள்ளிகளையும் நன்மதிப்பையும் உயர்த்தும் எனும் தாரக மந்திரத்தையும் இந்த காட்சி நன்றாகவே விளக்கி இருக்கும். தான் ஏன் இப்படி அங்கே வந்தேன் என்கிற உண்மையை உரக்கச் சொல்வார். தான் கைது செய்யப்பட்டது, வீட்டில் பெயின்ட் அடித்தது என அனைத்தையும்.

  சிக்கலை சமாளித்தல்

  சிக்கலை சமாளித்தல்

  இப்படி மோசமான சட்டை அணிந்து கொண்டு வரும் ஒருவனுக்கு வேலையை ஏன் கொடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு? அந்த சிக்கலான சூழலில் அதனை சமாளிக்கும் விதமாக "அவன் போட்டிருந்த பேன்ட் நல்லா இருந்ததால் அவனுக்கு வேலை கொடுத்தார்கள்" என எந்த இடத்திலும் தனது சுயத்தையும் விட்டுக் கொடுக்காமல் வில் ஸ்மித் பேசும் வசனமே படத்தின் வெற்றியை தீர்மானித்து விட்டது.

  வேலை வேண்டாம்

  எல்லாம் முடிந்து வெளியே வரும் வில் ஸ்மித்தை அழைத்து அவரது நண்பர், இண்டர்வியூவில் கலக்கிட்டீங்க.. உங்களுக்கு வேலை கிடைச்சிருச்சு என சொல்லும் போது 6 மாதம் சம்பளம் இன்றி ஸ்டாக் புரோக்கராக பயிற்சி செய்ய வேண்டும், என் குடும்பம் இருக்கிற சூழ்நிலையில் அது செட் ஆகாது அந்த வேலை வேண்டாம் என சொல்லும் இடமும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும், பின்னர் தான் செய்யும் வேலையையும், பயிற்சி வேலையையும் டபுள் டியூட்டி பார்ப்பது போல பார்த்து கடைசியாக நாயகன் வெற்றி அடையும் சந்தோஷம் தான் படத்தின் கிளைமேக்ஸ்.

  English summary
  Will Smith’s The Pursuit of Happyness movie interview scene was the best interview scene till date. Will Smith’s powerful performance definitely blow your mind.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X