twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கரும்புத் தின்னக் கூலி.. அந்தக் கரும்பே கொடுத்தா எப்படி இருக்கும்? காமம் இல்லாத ஒரு காதல் காட்சி!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகையே வியக்க வைத்த காதல் கொள்ள செய்த ஒரு பிரம்மாண்ட படைப்பு என்றால் அது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் தான்.

    பணக்கார பொண்ணு ஏழைப் பையன் அதே ரோமியோ ஜூலியட் கதை தான். ஆனால், மூழ்கிய நிஜ ஷிப்புக்குள் மூழ்காமல் என்றென்றும் வாழும் காதல் காவியமாக படைப்பின் உச்சமாக படைத்த படம் டைட்டானிக்.

    ப்பா.. மக்கள் செல்வன் மனசிருக்கே.. கொரோனா நிவாரண நிதி.. ரூ. 25 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி!ப்பா.. மக்கள் செல்வன் மனசிருக்கே.. கொரோனா நிவாரண நிதி.. ரூ. 25 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி!

    அதுவரை ஹாலிவுட் திரைப்படங்களை ஏறெடுத்தும் பார்க்காத உலகின் கடைக்கோடி மனிதர்களையும் பார்க்க வைத்து உலகின் அதிக வசூலை ஈட்டிய படமாக பல ஆண்டுகள் நீடித்தது. ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த படமான அவதார் வரும் வரையில்..

    பிரம்மாண்ட இயக்குநர்

    பிரம்மாண்ட இயக்குநர்

    1912ம் ஆண்டு பனிப்பாறையில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கதையை காதலுடன் கலந்து என்றுமே அழியாத படைப்பாக கொடுத்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். ஏலியன்களையும் டெர்மினேட்டர்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்திய அதே பிரம்மாண்ட இயக்குநர் தான்.

    டைட்டானிக்

    டைட்டானிக்

    1997ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி வெளியான டைட்டானிக் திரைப்படத்தை பார்த்து வியக்காதவரே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பெரிய கப்பல் மூழ்கியதை அப்படியே படமாக்கிக் காட்டியது மட்டுமின்றி ஜாக் மற்றும் ரோஸை நமது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிய பெருமையும் டைட்டானிக் படத்திற்கு உண்டு.

    காமம் இல்லாத காதல்

    காமம் இல்லாத காதல்

    ஹாலிவுட் படங்கள் என்றாலே ஆடை அணியாத காட்சிகள் சர்வ சாதாரணம் தான். நம்ம கோலிவுட் படங்களிலேயே அமலா பால், ஆண்ட்ரியா என பலரும் ஆடைகளை களைந்து நடித்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு காமமும் இல்லாத காதல் காட்சியாக உலக ரசிகர்களை உற்று நோக்க வைத்தது அந்த ஓவியக் காட்சி.

    வைரம் மட்டுமே

    வைரம் மட்டுமே

    காதலன் ஜாக்கை தனது அறைக்கு அழைத்துச் செல்லும் ரோஸ் அவனிடம் உலகிலேயே விலை உயர்ந்த நீல வைரத்தை காட்டுவாள். மேலும், இதை அணிந்து கொண்டு வருகிறேன். என்னை ஓவியமாக வரைய வேண்டும் எனக் கூற ஜாக்கும் உடனே ஓகே சொல்லிடுவான். அழுத்தம் திருத்தமாக இதை மட்டும் தான் அணிந்து வரப் போகிறேன் என ரோஸ் சொல்ல உள்ளூர ஆடிப் போய்விடுவான் ஜாக்.

    கரும்புத் தின்னக் கூலி

    கரும்புத் தின்னக் கூலி

    தனது காதலியை அப்படியொரு கோலத்தில் வரையப் போவதை அறிந்து ஆழ் மனதில் சந்தோஷம் அடையும் ஜாக்கிடம் அந்த ஓவியத்தை வரைந்துக் கொடுக்க ஒரு வெள்ளிக் காசையும் ரோஸ் கொடுக்கும் காட்சி தான் ரசிகர்களை அந்தளவுக்கு அந்த காட்சியை ரசிக்கும் படியாக இருந்தது என்றே சொல்லலாம். கரும்புத் தின்னக் கூலி வேண்டுமா என்பார்கள்.. இங்கே அந்த கரும்பே கூலி கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மாஸ்டர் பீஸ் காட்சியை உருவாக்கி இருப்பார் ஜேம்ஸ் கேமரூன்.

    அழியாமல் இருந்தது

    அழியாமல் இருந்தது

    அதனால் தான் அத்தனை பெரிய டைட்டானிக் கப்பலும் பனிப் பாறையில் மூழ்கி ஜாக் உள்பட பல ஆயிரம் பேர் இறந்து போனாலும் அந்த காதல் ஓவியம் அழியாமல் அந்த கப்பலிலேயே இருந்தது. லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட்டுக்கு இன்றும் உலகளவில் ரசிகர்கள் இருக்க காரணமும் அந்த ஒரு டைட்டானிக் காட்சி தான் என்றே சொல்லலாம்.

    English summary
    James Cameron’s Master piece drawing scene in Titanic grabs the attention all over the world. And it is spotted world’s best scene also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X