»   »  ஹீரோயின்கள்..பக்பக் இயக்குனர்

ஹீரோயின்கள்..பக்பக் இயக்குனர்

Subscribe to Oneindia Tamil

ஒரு படம் எடுக்கும் இயக்குனருக்கு எவ்வளவோ பிரச்சனைகள் வரும், சிக்கல்கள் வரும்.

ஹீரோ வரலை, ஹீரோயின் குளியல் சீன்ல நடிக்க மாட்டாங்களாம், தயாரிப்பாளர் கையை விரிச்சுட்டார்(பணமில்லை), சூட்டிங் ஸ்பாட்டுக்கு போலீஸ் அனுமதி தரலை, வினியோகஸ்தர்கள் கதையை மாத்த சொல்றாங்கஎன்று இயக்குனரின் பிரச்சனைகள் கணக்கில் அடங்காதவை.

ஆனால், இங்கே ஒரு இயக்குனர் வித்தியாசமான கவலையில் ஆழ்ந்துள்ளார். அவரது கவலையெல்லாம்ஹீரோயின் பாதியில் கல்யாணம் பண்ணிக் கொண்டு ஓடி விடக் கூடாது என்பது தான்.

கண்ணா நீ எனக்குத்தாண்டா என்று ஒரு படம் தயாராகி வருகிறது. இதை இயக்குபவர் ஒளிமாறன்.

நெல்லையைச் சேர்ந்த ஒளிமாறனுக்கு சின்ன வயசிலேயே சினிமா பாடாய் படுத்த சென்னைக்கு ஓடி வந்தவர்.நடிகராகும் ஆசையில் அலைந்தவருக்கு கிட்டத்தட்ட 100 படங்களில் வெறும் தலையைக் காட்டும் ரோல்கள்தான் கிடைத்தன.

பஞ்சாயத்தில் மத்தியில் செம்பும், அதைச் சுற்றி ஏகப்பட்ட பேர் வேட்டி, கைலி பனியனோடு நின்று கொண்டு,அட சட்டு புட்டுனு ஆக வேண்டியத பாருங்க என்பார்களே.. அந்தக் கூட்டத்தில் நிற்கும் ரோல்களும்

அதே போல ஸ்டண்ட் காட்சிகளில் ஹீரோ உதை விட, வில்லன் வந்து விழுந்து பானை கடையை உடைத்தவுடன்,கடைக்காரர் தெறித்து ஓடுவாரே.. அந்த கடைக்காரர் ரோலும் தான் ஒளிமாறனுக்குக் கிடைத்தன.

ஆனாலும் கஷ்டப்பட்டு முன்னேறி உதவி இயக்குனராகி, ராஜசேகரிடம் பணியாற்றி கடைசியில் இயக்குனரும்ஆகிவிட்டார்.

சசிரேகா என்ற புதுமுக ஹீரோயினைப் போட்டு நீதி தூங்காது என்று ஒரு படத்தை எடுத்தார். படம் எல்லாம்முடிந்துவிட்ட நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக ஹீரோயினைத் தேடினால் அவர் வரவில்லை.

ஆள் அனுப்பித் தேடியபோது தான் தெரிந்தது, அவர் காதலனுடன் வீட்டை விட்டே ஓடிப் போய்விட்டார் என்று.ஏகப்பட்ட லட்சங்கள் இழப்பு, படம் முடியாததால் அடுத்த படம் கிடைக்காத வெறுப்பு என ஒளிமாறன் பியூஸ்போன பல்பு மாதிரி அலைந்தார் கோலிவுட்டில்.

அதன் பிறகு பல லட்சம் கடன் வாங்கி படம் எடுக்க 15க்கும் அதிகமான முறை ஆபிஸ் போட்டும், ஏதும்தேறவில்லை. எந்தப் படத்தையும் தொடங்க முடியவில்லை. ஆனாலும் சினிமா இவரை விடவில்லை. இவரும்சினிமாவை விடவில்லை.

போராடி போராடி இறுதியில் ஒரு புரடியூசரைப் பிடித்து மதிஷா, பாயல் என்ற இரு கும் கட்டைகளைப் போட்டுகண்ணா நீ எனக்குத்தாண்டா படத்தைத் தொடங்கிவிட்டார்.

ஆனாலும் மதிஷாவும் பாயலும் யாருடனாவது செல்போனில் கொஞ்சிக் குலாவி பேசினாலோ, சூட்டிங்ஸ்பாட்டுக்கு அவர்களைத் தேடி யாராவது ஆண் வந்தாலோ ஒளிமாறனுக்கு பக் ஆகி விடுகிறதாம்.

அப்புறம், இந்த புள்ளைங்களும் ஓடிப் போனா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil