»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரேவதி, சுஹாசினி, குஷ்பு, ரோஜா, ரஞ்சிதா, ஊர்வசி, விந்தியாவின் வரிசையில் விரைவில் சேரப் போகிறார் மீனா.அதாவது, டிவி தொடரில் நடிக்க போகிறார்.

சினிமா சான்ஸ்கள் அறவே இல்லாததால் மீனாவுக்கு விரைவில் கல்யாணம் நடப்பது உறுதியாகிவிட்டது.மாப்பிள்ளையும் கூட ரெடி என்கிறார்கள். தாலி கட்ட தலையை நீட்டும் முன் கடைசி கடைசியாக ஏதாவது சான்ஸ்கிடைக்கிறதா என்று வேட்டையாடும் முயற்சியில் இறங்கியுள்ளார் மீனா.

ஆனால் அவரது முயற்சிக்கு சினிமா சைடில் இருந்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

ஆனால், மீனா வீசிய வலையில் ஒரு நட்சத்திர டிவி மாட்டியது. இடையில் திருமணம் நடந்தாலும் தொடர்ந்துநடிக்கலாம் என்று டிவிக்காரர்கள் சொல்ல, டிவி தொடரில் நடிக்க தலையாட்டிவிட்டார் மீனா. ஆனால், ரேடி தான்இன்னும் படியவில்லையாம்.

பேரம் நல்லபடியாக முடியும்போல் உள்ளதால் விரைவில் மீனாவ டிவியில் காணலாம் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...