»   »  கிரிவல மீரா, பாவம் போக்கிய ஷ்ரியா!

கிரிவல மீரா, பாவம் போக்கிய ஷ்ரியா!

Subscribe to Oneindia Tamil

பஜனைப் பாடல்களைப் பாடியபடி திருவண்ணாமலை கோவிலில் மீரா ஜாஸ்மின் சாமி கும்பிட்டது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மலையாளத்து மீரா ஜாஸ்மின் பிறப்பால் கிறிஸ்தவர் ஆனாலும், இந்துக் கோவில்கள் மீதும், இந்துக் கடவுள்கள் மீதும் அதீத பக்தி கொண்டவர். எந்தஊருக்குச் சென்றாலும் அங்குள்ள புகழ் பெற்ற இந்துக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கூட கேரளாவில் ஒரு இந்துக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலரது வாயில் விழுந்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் பல்வேறு இந்துக் கோவில்களுக்கும் விசிட் அடித்து சாமி கும்பிட்ட அனுபவம் மீராவுக்கு உண்டாம். ஆனால் அவருக்கு ரொம்பநாளாக திருவண்ணாமலைக்குப் போய் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்து வந்தது.

சமீபத்தில்தான் அந்த ஆசை நிறைவேறியதாம். அவர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் வேலூர் பக்கம் நடந்தது. அண்ணாமலைக்குபக்கத்தில் வந்து விட்டோம், அப்படியே ஒரு நடை போய் வந்து விடலாம் என தீர்மானித்த மீரா, துணைக்கு சிலரைக் கூட்டிக் கொண்டுதிருவண்ணாமலைக்கு கிளம்பினார்.

கோவிலில் பக்தி ரசம் ததும்ப சாமி கும்பிட்டார் மீரா. பின்னர் கோவில் பிரகாரத்தை வலம் வந்து மனமுருக பிரார்த்தார். அப்படியே பஜன்பாடல்களையும் பாடியவாறு அவர் நடந்து சென்றதைப் பார்த்த பல பக்தர்கள் மீராவின் பக்தியை மெச்சினர்.

சிலர் ஆர்வத்தோடு மீராவை நெருங்கி ஆட்டோகிராப்பும் கேட்டனர். மீராவும் முகம் சுளிக்காமல் போட்டுக் கொடுத்தார். தனது நீண்ட நாள் ஆசைநிறைவேறிய திருப்தியில் அண்ணாமலையாரிடமிருந்து விடை பெற்று வேலூர் பறந்தார் மீரா.

மீரா இப்படி என்றால் ஷ்ரியாவுக்கு புதுவித அனுபவம் கிடைத்தது. புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிவாஜிபடத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நடத்தியுள்ளனர். அங்குள்ள நளன் குளத்தில் ஷிரியா குளித்து எழுவதுபோல காட்சியாம்.

முதல் முறை முங்கி எழுந்தபோது டேக் ஓ.கே. ஆகவில்லையாம். இப்படி மொத்தம் ஏழு முறை முங்கி எழுந்து கடைசியில் காட்சி ஓ.கே. ஆனதாம்.

அப்புறமாக யூனிட்டில் உள்ளவர் ஒருவர் ஷ்ரியாவிடம் கூறியுள்ளார். இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் செய்த பாவம் எல்லாம் போய் விடும்.வழக்கமாக ஒருமுறைதான் முங்கி எழுவார்கள், நீங்களோ ஏழு முறை முங்கி எழுந்து விட்டீர்கள். ஸோ, உங்களிடம் ஒரு பாவமும் இருக்காது, எல்லாம்போயிருக்கும் என்றாராம் குறும்பாக.

எல்லோரும் நல்லா இருந்தா, சந்தோஷம் தான்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil