வருகிறார் ஜென்னி ஜாஸ்மின் மீரா ஜாஸ்மினின் அக்காவும், சினிமாவுக்கு வருகிறார்.கேரளத்து ப்யூட்டி குயீன் மீரா ஜாஸ்மின் ரன் மூலம் தமிழில் அறிமுகமாகி மெல்ல மெல்ல செட்டில் ஆகி வருகிறார். அப்படியும்,இப்படியுமாக இருந்து வரும் மீராவின் மார்க்கெட் கண்ட நாள் முதல், சண்டக்கோழி ஆகிய படங்களல் மெதுவாக சூடு பிடிக்கஆரம்பித்துள்ளது.தமிழில் படங்களை செலக்ட் செய்து நடித்து வரும் மீரா அப்படியே மலையாளத்திலும், தெலுங்கிலும், கூடவே கன்னடத்திலும்அவ்வப்போது தலை காட்டி வருகிறார். அவருக்கும், இயக்குனர் லோகிததாஸுக்கும் இடையிலான உறவினால், மீராவின்குடும்பத்தில் பெரும் பூகம்பம் வெடித்தது.மீராவின் போக்கினால் அதிருப்தி அடைந்த அவரது குடும்பத்தினர், மீராவின் சொத்துக்களை தங்களது கஸ்டடிக்குக் கொண்டுவந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீரா வீட்டை விட்டு வெளியேறினார். தனது நிலையை கேரள முதல்வர் உம்மன் சாண்டிமுன்பு கண்ணீர் விட்டுக் கதறி அழுது புலம்பினார்.இந்த சர்ச்சையினால் மீராவுக்கும், லோகிததாஸுக்கும் மலையாளத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. இதனால் எதையும்தாங்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இருவரும் இடம் பெயர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்து தயாரித்த படம்தான் கஸ்தூரி மான்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் சரியாக போணியாகவில்லை. இதையடுத்து லோகிததாசிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறார் மீரா.இந் நிலையில் மீரா மூலமாக அவரது குடும்பத்துக்கு வந்து கொண்டிருந்த வருமானம் சடக்கென நின்று போய்விட்டதாம். மீராஇப்போது குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையைக் கூட வைத்துக் கொள்வதில்லை.இதையடுத்து மீராவின் சொந்த அக்கா சினிமாவில் குதித்துள்ளார். மலையாள டிவிக்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தவர்தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.ஜென்னி என்ற இயற்பெயருடைய அவர் தமிழிலிலும் தேவதை என்ற ஒரு டிவி தொடரில் நடித்துள்ளார். தங்கச்சியால் நின்றுபோன வருமானத்தை ஈடு செய்ய தானும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.மீராவை விட கூடுதலாக ஒத்த ரூபாயையாவது சம்பாதிக்க வேண்டும் ஜென்னியை ஆசிர்வதித்து கோடம்பாக்கத்துக்கு அனுப்பிவைத்துள்ளது அவரது குடும்பம்.ஜென்னி நடிக்கப் போகும் முதல் தமிழ்ப் படம் ஆடாத ஆட்டமெல்லாம். இதை இயக்கப் போவது அழகர் என்ற புதுமுகஇயக்குனர். இவர் காதல் கொண்டேன் படத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர்.ஜென்னிக்கு இதில் ஹீரோவின் தங்கை வேடம் தானாம். மெதுவாக அப்படியே ஹீரோயின் ஆகிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பை தொடங்கப் போவதாக கூறுகிறார்களாம். பட பூஜையின்போது ஜென்னியின் அழகு சொட்டும்புகைப்படங்களை வெளியிடத் திட்டமாம். அதற்காக ஜென்னியை கவர்ச்சிகரமாக போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே பல பத்மினி-ராகினியில் ஆரம்பித்து கே.ஆர்.விஜயா-கே.ஆர். வத்சலா வழியாக, அம்பிகா-ராதா மற்றும் பல அக்கா,தங்கச்சிகள் (எல்லோருமே சேச்சிகள்தான்) தமிழ் சினிமாவை கலக்கியுள்ளனர்.ஜென்னியும், மீராவும் அந்த வரிசையில் சேருவார்களா அல்லது மலையாளக் கரைக்கே போய்ச் சேருவார்களா என்பதைபொறுத்திருந்து பார்ப்போம்.மீராவுக்கு ஜெபி என்று ஒரு தங்கையும் இருக்கிறார். அவரும் தமிழ் சினிமாவுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம்.

By Staff
மீரா ஜாஸ்மினின் அக்காவும், சினிமாவுக்கு வருகிறார்.

கேரளத்து ப்யூட்டி குயீன் மீரா ஜாஸ்மின் ரன் மூலம் தமிழில் அறிமுகமாகி மெல்ல மெல்ல செட்டில் ஆகி வருகிறார். அப்படியும்,இப்படியுமாக இருந்து வரும் மீராவின் மார்க்கெட் கண்ட நாள் முதல், சண்டக்கோழி ஆகிய படங்களல் மெதுவாக சூடு பிடிக்கஆரம்பித்துள்ளது.

தமிழில் படங்களை செலக்ட் செய்து நடித்து வரும் மீரா அப்படியே மலையாளத்திலும், தெலுங்கிலும், கூடவே கன்னடத்திலும்அவ்வப்போது தலை காட்டி வருகிறார். அவருக்கும், இயக்குனர் லோகிததாஸுக்கும் இடையிலான உறவினால், மீராவின்குடும்பத்தில் பெரும் பூகம்பம் வெடித்தது.

மீராவின் போக்கினால் அதிருப்தி அடைந்த அவரது குடும்பத்தினர், மீராவின் சொத்துக்களை தங்களது கஸ்டடிக்குக் கொண்டுவந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மீரா வீட்டை விட்டு வெளியேறினார். தனது நிலையை கேரள முதல்வர் உம்மன் சாண்டிமுன்பு கண்ணீர் விட்டுக் கதறி அழுது புலம்பினார்.

இந்த சர்ச்சையினால் மீராவுக்கும், லோகிததாஸுக்கும் மலையாளத்தில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. இதனால் எதையும்தாங்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இருவரும் இடம் பெயர்ந்துள்ளனர். இருவரும் சேர்ந்து தயாரித்த படம்தான் கஸ்தூரி மான்.பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் சரியாக போணியாகவில்லை.

இதையடுத்து லோகிததாசிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறார் மீரா.

இந் நிலையில் மீரா மூலமாக அவரது குடும்பத்துக்கு வந்து கொண்டிருந்த வருமானம் சடக்கென நின்று போய்விட்டதாம். மீராஇப்போது குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையைக் கூட வைத்துக் கொள்வதில்லை.

இதையடுத்து மீராவின் சொந்த அக்கா சினிமாவில் குதித்துள்ளார். மலையாள டிவிக்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தவர்தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

ஜென்னி என்ற இயற்பெயருடைய அவர் தமிழிலிலும் தேவதை என்ற ஒரு டிவி தொடரில் நடித்துள்ளார். தங்கச்சியால் நின்றுபோன வருமானத்தை ஈடு செய்ய தானும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

மீராவை விட கூடுதலாக ஒத்த ரூபாயையாவது சம்பாதிக்க வேண்டும் ஜென்னியை ஆசிர்வதித்து கோடம்பாக்கத்துக்கு அனுப்பிவைத்துள்ளது அவரது குடும்பம்.

ஜென்னி நடிக்கப் போகும் முதல் தமிழ்ப் படம் ஆடாத ஆட்டமெல்லாம். இதை இயக்கப் போவது அழகர் என்ற புதுமுகஇயக்குனர். இவர் காதல் கொண்டேன் படத்தில் இயக்குனர் செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர்.

ஜென்னிக்கு இதில் ஹீரோவின் தங்கை வேடம் தானாம். மெதுவாக அப்படியே ஹீரோயின் ஆகிவிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.

விரைவில் படப்பிடிப்பை தொடங்கப் போவதாக கூறுகிறார்களாம். பட பூஜையின்போது ஜென்னியின் அழகு சொட்டும்புகைப்படங்களை வெளியிடத் திட்டமாம். அதற்காக ஜென்னியை கவர்ச்சிகரமாக போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பல பத்மினி-ராகினியில் ஆரம்பித்து கே.ஆர்.விஜயா-கே.ஆர். வத்சலா வழியாக, அம்பிகா-ராதா மற்றும் பல அக்கா,தங்கச்சிகள் (எல்லோருமே சேச்சிகள்தான்) தமிழ் சினிமாவை கலக்கியுள்ளனர்.

ஜென்னியும், மீராவும் அந்த வரிசையில் சேருவார்களா அல்லது மலையாளக் கரைக்கே போய்ச் சேருவார்களா என்பதைபொறுத்திருந்து பார்ப்போம்.

மீராவுக்கு ஜெபி என்று ஒரு தங்கையும் இருக்கிறார். அவரும் தமிழ் சினிமாவுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X