»   »  நீ-நான்-நிலா-பாட்டு!

நீ-நான்-நிலா-பாட்டு!

Subscribe to Oneindia Tamil

முற்றிலும் புத்தம் புது முகங்களுடன் உருவாகியுள்ள நீ நான் நிலா படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முற்றிலும் புத்தம் புது முகங்களுடன் உருவாகியுள்ள நீ நான் நிலா படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

200க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்த பழுத்த அனுபவம் கொண்ட திருச்சி விஸ்வாதன் தயாரிப்பில், எம்.பி.எஸ்.சிவக்குமார்இயக்கத்தில், விஸ்வநாதனின் மகன் பரதன் ஹீரோவாக அறிமுகமாக உருவாகியுள்ள படம்தான் நீ நான் நிலா.

விஸ்வநாதனின் ஒரே பையன் பரதன். ஹீரோவாக வேண்டும் என அவர் ஆசைப்பட, மகனின் ஆசையை தானே தயாரிப்பாளராகி நிறைவேற்றிவைத்து விட்டார் விஸ்வநாதன்.ே

இப்படத்தின் ஆடியோ வெளியீடு ரெசிடென்ஸி டவர் ஹோட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் ஆடியோ கேசட்டைவெளியிட, பரதன் முதல் கேசட்டைப் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சிடியை வெளியிட இப்ராகிம் ராவுத்தர் பெற்றுக்கொண்டார்.

பரதன் தவிர ரவி என்ற இன்னொரு புதுமுக ஹீரோவும் படத்தில் உண்டு. மேக்னாதான் நாயகி. பெயரைப் போலவே காந்தமாக கவர்ந்திழுக்கிறார்மேக்னா. நல்ல சிவப்பு, எடுப்பான வனப்பு, நல்ல எதிர்காலம் உள்ளது மேக்னாவுக்கு.

நிகழ்ச்சியின்போது பாடல்கள் அனைத்தும் திரையிட்டுக் காட்டப்பட்டது. தினாவின் இசையில், பாடல்கள் தித்திப்பாக வந்துள்ளன. ஒவ்வொருபாடலையும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு கூட்டம் கை தட்டி, விசிலடித்து உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்று ரசித்தது. பார்ட்டிங்கள்ளாம் யார் என்றுவிசாரித்தார், திருச்சியிலிருந்து தயாரிப்பாளர் தரப்பால் கூட்டி வரப்பட்டவர்களாம்!

பாடல்களை சினேகனும், கன்னியப்பனும் எழுதியுள்ளனர். ஹரிஹரன், சாதனா சர்கம், ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் பாடல்களைப்பாடியுள்ளனர். நம்ம சிம்புவும் கூட ஒரு குத்துப் பாட்டுக்குக் குரல் கொடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து பாடியுள்ளது மாலதி லஷ்மன்.

சிவக்குமாருக்கு இது முதல் படம். கதை, திரைக்கதை, வசனத்தோடு இயக்கத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

நீ நான் நிலா ஒரு இன்னிசை உலா!

Read more about: nee naan nila audio launch

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil