»   »  மேக்னா ஆட்டம்.. டிஆர் கட்

மேக்னா ஆட்டம்.. டிஆர் கட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேக்னா நாயுடுவை வைத்து தள தள என எடுத்திருந்த கிளாமர்காட்சிகளையெல்லாம் படத்திலிருந்து தூக்கி விட்டாராம் டி.ராஜேந்தர்.

ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வந்த படம் வீராசாமி. வழக்கம் போலராஜேந்தர்தான் எல்லாமே, அதாவது பாட்டு, மெட்டு, கதை, திரைக்கதை உள்ளிட்டஅத்தனையையும் ராஜேந்தரே கவனித்துக் கொண்டார்.

படத்தில் மும்தாஜுக்கு செமத்தியான வேடம். அவருடைய அம்மாவாக முன்னாள்தளுக்கல் நாயகி ஷர்மிலி நடித்துள்ளார். இருவரும் கிளாமரில் கிண்டி ரேஸ் குதிரைகணக்காக பாய்ந்துள்ளனராம்.

மும்தாஜுக்கும், டி.ஆருக்கும் வைக்கப்பட்டுள்ள ஒரு பாடல் காட்சிதான்கோலிவுட்டின் ஹாட் டாக். பால் மழையில் குளிக்க வைத்து மும்தாஜை முத்தெடுக்கவைத்துள்ளார் ராஜேந்தர். இதற்காக ஏகப்பட்ட காஸ்ட்யூமில் இப்பாடலில்வருகிறாராம் மும்ஸ்.

இவர் தவிர மேக்னா நாயுடுவும் படத்தில் இருக்கிறார். இவர் சம்பந்தப்பட்டகாட்சிகளும் சும்மா இல்லை, சொக்க வைக்கும் சுந்தரியாக மேக்னா சம்பந்தப்பட்டகாட்சிகளை சுட்டுள்ளார் டி.ஆர்.

குறிப்பாக மழையில் நனைய வைத்து மேக்னாவை மினுமினுக்க வைத்து சிலகாட்சிகளை சுட்டுள்ளார் டி.ஆர். இந்தக் காட்சிகளில் வெளிப்படையாக நடித்துசூடேத்தியுள்ளாராம் மேக்னா. மேக்னா வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை காந்தம்போல இழுத்து இம்சிக்குமாம்.

ஆனால் ரசிகர்களுக்கு மேக்னாவின் தரிசனம் முழுமையாக கிடைக்காதுபோலிருக்கிறது. காரணம் சென்சாருக்குப் பயந்து மேக்னா சம்பந்தப்பட்ட பலகாட்சிகளை தானே வெட்டி விட்டாராம் ராஜேந்தர்.

எல்லாம் கஸ்தூரி ராஜாவின் இது காதல் வரும் பருவம் சென்சார் அதிகாரிகளிடம்பட்ட பாட்டால் வந்த வினையாம். கிரணை முழுக்க உரித்து இது காதல் வரும் பருவம்படத்தில் நடிக்க வைத்திருந்தார் கஸ்தூரி ராஜா. கிரணும், இதுக்கு மேலமுடியாதுண்ணே என்ற ரேஞ்சுக்கு வெள்ளாடியிருந்தார்.

ஆனால் சென்சார் உறுப்பினர்கள் முன்பு படத்தை திரையிட்டுக் காட்டியபோதுவியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டார்களாம். இது என்ன பலான படமா என்றுகஸ்தூரியைக் கேட்ட அவர்கள் பல காட்சிகளை குறிப்பாக கிரண் சம்பந்தப்பட்டகாட்சகிளை தூக்கி விட உத்தரவிட்டனராம். இதனால் வேறு வழியின்றி பல காட்சிகள்வெட்டப்பட்டு விட்டன.

இதை அறிந்த ராஜேந்தர், தனது படத்துக்கும் இப்படி வெட்டுக் குத்து ஆகி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் அவராகவே மேக்னா சம்பந்தப்பட்டகாட்சிகளை தூக்கி கடாசி விட்டாராம்.

முழுக்கப் பார்க்க முடியாம போயிடும் போலிருக்கே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil