»   »  மேக்னாவின் சுட்டா மிக்ஸ்!

மேக்னாவின் சுட்டா மிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி வீடியோ ஆல்பம் ஒன்றைஉருவாக்கியுள்ளார் கிளாமர் மேக்னட் மேக்னா நாயுடு.

இந்தியைக் கலக்கி வரும் கிளாமர் புயல் மேக்னா நாயுடு, தமிழ் ரசிகர்களின் தாகம்தீர்க்க சரவணாவில் சக்கைப் போடு போட்டார். அடுத்து வீராசாமியிலும் இவரதுவில்லங்க ஆட்டம், பாட்டம் படு அமர்க்களமாக வந்திருக்கிறது. கூடவே சிலகாட்சிகளிலும் நடித்துள்ளார்.

உண்மையில் இப்படத்தின் ஹீரோயினாகத்தான் மேக்னாவை போட்டிருந்தார் விஜயடி.ராஜேந்தர். ஆனால் படத்தை இயக்குவதில் ராஜேந்தர் செய்த தாமதத்தால்கடுப்பாகிப் போன மேக்னா பாதிப் படத்திற்கு மேல் மும்பைக்குப் போய் விட்டார்.இதனால் மும்தாஜின் காட்சிகளை பெரிதாக்கி, ஸ்டிராங்க் ஆக்கி விட்டார் ராஜேந்தர்.

மேக்னா இப்போது சூப்பரான ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது தம்அடிப்பவர்களுக்கு எதிராக ஒரு அருமையான ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்தவீடியோ ஆல்பத்தில் இவரே நடித்துப் பாடியும் உள்ளார்.

என்ன திடீர்னு இப்படி ஒரு டாப்பிக் என்று மேக்னாவிடம் கேட்டபோது, எனக்கு தம்அடிக்கிற பழக்கம் இல்லை. ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் புகைபிடிக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்லாது அவர்களச் சுற்றுச்சூழலும்தான்பாதிக்கிறது.

எனவேதான் புகை பிடிப்பதன் ஆபத்துக்களை விளக்கி இந்த வீடியோ ஆல்பத்தைஉருவாக்கியுள்ளேன். இந்தப் பாடலை கேட்கும் யாருக்கும் புகை பிடிக்கும் எண்ணம்வரவே வராது, அவ்வளவு உருக்கமாக அமைந்திருக்கிறது இந்த ஆல்பம் என்கிறார்நாயுடு.

சுட்டா மிக்ஸ் என இதற்குப் பெயர் வைத்துள்ளார் மேக்னா. இன்னொரு மேட்டர்என்னன்னா, இந்த ஆல்பத்தை ஷூட் செய்தபோது செட்டில் இருந்த யாருமே பத்தவைக்கலையாம். அத்தனை பேரும் அடக்க, ஒடுக்கமாக இருந்து மேக்னாவுக்குசந்தோஷத்தைக் கொடுத்தனாராம்.

வெல்டன் நாயுடு!

அப்படியே கொஞ்சம் பெருசா ஒரு டிரஸை வாங்கி மாட்டிக்க கூடாதா?

Read more about: meghna naidus chutta mix

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil