»   »  சேர்த்து வைத்த மெர்க்குரி பூக்கள் மீரா ஜாஸ்மீன்- ஸ்ரீகாந்த் நடித்த மெரிக்குப் பூக்கள் படத்தைப் பார்த்து இரண்டரை ஆண்டுகளாகப் பிரிந்திருந்தஒரு தம்பதி மீண்டும் வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.சென்னை அசோக் நகரைச் சேர்ந்த முருகனுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே இரண்டரைஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்றுபோனது.அத்தோடு முருகனை விட்டு பிரிந்தும் போய்விட்டார் சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. பிரிந்துபோன இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டது. இவர்களை சேர்க்க முயன்றஉறவினர்களும் தோற்றுப் போய்விட காலமும் மிக வேகமாக கரைந்து ஓடிவிட்டது.இந் நிலையில் சமீபத்தில் மெர்க்குரிப் பூக்கள் படத்தைப் பார்த்தார் முருகன். படத்தில் நடக்கும் சம்பவங்கள் தனதுவாழ்வை நினைவூட்ட தியேட்டரிலேயே கண் கலங்கியிருக்கிறார்.அதில் ஹீரோ ஸ்ரீகாந்த் நடந்து கொண்டதைப் போல விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வர,படம் முடிந்தவுடன் நேராக சரஸ்வதியின் வீட்டுக்குப் போயுள்ளார் முருகன்.கணவரைக் கண்ட சரஸ்வதி மகிழ்ச்சியில் திக்குமுக்காட, தனது ஈகோவை உடைத்தெறிந்துவிட்டு மனைவிடம்மன்னிப்பு கேட்டுள்ளார் முருகன். இதை சற்றும் எதிர்பாராத சரஸ்வதியும் பதிலுக்கு வருத்தம் தெரிவிக்க,இரண்டரை வருடமாக இவர்களது இடையில் விழுந்திருந்த வெடிப்பு சட்டென மறைந்துவிட்டது.இதையடுத்து கணவருடன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்ற தங்களது மகளைப் பார்த்து ஆனந்தமாய் அழுதுள்ளதுசரஸ்வதியின் குடும்பம்.திடீரென்று எப்படி இதெல்லாம் என்று சரஸ்வதி கேட்க, மெர்க்குரிப் பூக்கள் படம் பார்த்தேன். என் தப்பைஉணர்ந்தேன் என்றிருக்கிறார் முருகன்.இப்படி ஒரு ஜோடி தங்கள் படத்தைப் பார்த்து இணைந்ததை அறிந்த மெர்க்குரிப் பூக்கள் யூனிட் மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளது.உடனடியாக முருகனையும் சரஸ்வதியையும் வரவழைத்து பெரிய ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் ஸ்ரீகாந்த்.இந்தப் படம் ஓடும் சென்னை காசி தியேட்டருக்கு தம்பதியை வரவழைத்தார் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி.தனது மனைவியோடு வந்திருந்த ரெட்டி, இடைவேளையின்போது முருகன்-சரஸ்வதி தம்பதியை மேடையேற்றிகெளரப்படுத்தினார்.அப்போது முருகனுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலியை ஸ்ரீகாந்த் அணிவிக்க, அதை உடனே எடுத்து தனது மனைவிசரஸ்வதியின் கழுத்தில் போட்டார் முருகன். படம் பார்க்க வந்தவர்கள் வாழ்த்திலும் கரகோஷத்திலும்உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார் சரஸ்வதி.முருகன்-சரஸ்வதி ஜோடியுடன் இயக்குனர் ஸ்டான்லி, ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் ரெட்டி, அவரது மனைவி

சேர்த்து வைத்த மெர்க்குரி பூக்கள் மீரா ஜாஸ்மீன்- ஸ்ரீகாந்த் நடித்த மெரிக்குப் பூக்கள் படத்தைப் பார்த்து இரண்டரை ஆண்டுகளாகப் பிரிந்திருந்தஒரு தம்பதி மீண்டும் வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.சென்னை அசோக் நகரைச் சேர்ந்த முருகனுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே இரண்டரைஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்றுபோனது.அத்தோடு முருகனை விட்டு பிரிந்தும் போய்விட்டார் சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. பிரிந்துபோன இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டது. இவர்களை சேர்க்க முயன்றஉறவினர்களும் தோற்றுப் போய்விட காலமும் மிக வேகமாக கரைந்து ஓடிவிட்டது.இந் நிலையில் சமீபத்தில் மெர்க்குரிப் பூக்கள் படத்தைப் பார்த்தார் முருகன். படத்தில் நடக்கும் சம்பவங்கள் தனதுவாழ்வை நினைவூட்ட தியேட்டரிலேயே கண் கலங்கியிருக்கிறார்.அதில் ஹீரோ ஸ்ரீகாந்த் நடந்து கொண்டதைப் போல விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வர,படம் முடிந்தவுடன் நேராக சரஸ்வதியின் வீட்டுக்குப் போயுள்ளார் முருகன்.கணவரைக் கண்ட சரஸ்வதி மகிழ்ச்சியில் திக்குமுக்காட, தனது ஈகோவை உடைத்தெறிந்துவிட்டு மனைவிடம்மன்னிப்பு கேட்டுள்ளார் முருகன். இதை சற்றும் எதிர்பாராத சரஸ்வதியும் பதிலுக்கு வருத்தம் தெரிவிக்க,இரண்டரை வருடமாக இவர்களது இடையில் விழுந்திருந்த வெடிப்பு சட்டென மறைந்துவிட்டது.இதையடுத்து கணவருடன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்ற தங்களது மகளைப் பார்த்து ஆனந்தமாய் அழுதுள்ளதுசரஸ்வதியின் குடும்பம்.திடீரென்று எப்படி இதெல்லாம் என்று சரஸ்வதி கேட்க, மெர்க்குரிப் பூக்கள் படம் பார்த்தேன். என் தப்பைஉணர்ந்தேன் என்றிருக்கிறார் முருகன்.இப்படி ஒரு ஜோடி தங்கள் படத்தைப் பார்த்து இணைந்ததை அறிந்த மெர்க்குரிப் பூக்கள் யூனிட் மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளது.உடனடியாக முருகனையும் சரஸ்வதியையும் வரவழைத்து பெரிய ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் ஸ்ரீகாந்த்.இந்தப் படம் ஓடும் சென்னை காசி தியேட்டருக்கு தம்பதியை வரவழைத்தார் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி.தனது மனைவியோடு வந்திருந்த ரெட்டி, இடைவேளையின்போது முருகன்-சரஸ்வதி தம்பதியை மேடையேற்றிகெளரப்படுத்தினார்.அப்போது முருகனுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலியை ஸ்ரீகாந்த் அணிவிக்க, அதை உடனே எடுத்து தனது மனைவிசரஸ்வதியின் கழுத்தில் போட்டார் முருகன். படம் பார்க்க வந்தவர்கள் வாழ்த்திலும் கரகோஷத்திலும்உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார் சரஸ்வதி.முருகன்-சரஸ்வதி ஜோடியுடன் இயக்குனர் ஸ்டான்லி, ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் ரெட்டி, அவரது மனைவி

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மீன்- ஸ்ரீகாந்த் நடித்த மெரிக்குப் பூக்கள் படத்தைப் பார்த்து இரண்டரை ஆண்டுகளாகப் பிரிந்திருந்தஒரு தம்பதி மீண்டும் வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த முருகனுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே இரண்டரைஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்றுபோனது.

அத்தோடு முருகனை விட்டு பிரிந்தும் போய்விட்டார் சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. பிரிந்துபோன இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டது. இவர்களை சேர்க்க முயன்றஉறவினர்களும் தோற்றுப் போய்விட காலமும் மிக வேகமாக கரைந்து ஓடிவிட்டது.

இந் நிலையில் சமீபத்தில் மெர்க்குரிப் பூக்கள் படத்தைப் பார்த்தார் முருகன். படத்தில் நடக்கும் சம்பவங்கள் தனதுவாழ்வை நினைவூட்ட தியேட்டரிலேயே கண் கலங்கியிருக்கிறார்.


அதில் ஹீரோ ஸ்ரீகாந்த் நடந்து கொண்டதைப் போல விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வர,படம் முடிந்தவுடன் நேராக சரஸ்வதியின் வீட்டுக்குப் போயுள்ளார் முருகன்.

கணவரைக் கண்ட சரஸ்வதி மகிழ்ச்சியில் திக்குமுக்காட, தனது ஈகோவை உடைத்தெறிந்துவிட்டு மனைவிடம்மன்னிப்பு கேட்டுள்ளார் முருகன். இதை சற்றும் எதிர்பாராத சரஸ்வதியும் பதிலுக்கு வருத்தம் தெரிவிக்க,இரண்டரை வருடமாக இவர்களது இடையில் விழுந்திருந்த வெடிப்பு சட்டென மறைந்துவிட்டது.

இதையடுத்து கணவருடன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்ற தங்களது மகளைப் பார்த்து ஆனந்தமாய் அழுதுள்ளதுசரஸ்வதியின் குடும்பம்.

திடீரென்று எப்படி இதெல்லாம் என்று சரஸ்வதி கேட்க, மெர்க்குரிப் பூக்கள் படம் பார்த்தேன். என் தப்பைஉணர்ந்தேன் என்றிருக்கிறார் முருகன்.

இப்படி ஒரு ஜோடி தங்கள் படத்தைப் பார்த்து இணைந்ததை அறிந்த மெர்க்குரிப் பூக்கள் யூனிட் மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளது.

உடனடியாக முருகனையும் சரஸ்வதியையும் வரவழைத்து பெரிய ட்ரீட் கொடுத்து அசத்திவிட்டார் ஸ்ரீகாந்த்.

இந்தப் படம் ஓடும் சென்னை காசி தியேட்டருக்கு தம்பதியை வரவழைத்தார் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி.தனது மனைவியோடு வந்திருந்த ரெட்டி, இடைவேளையின்போது முருகன்-சரஸ்வதி தம்பதியை மேடையேற்றிகெளரப்படுத்தினார்.

அப்போது முருகனுக்கு 2 பவுன் தங்கச் சங்கிலியை ஸ்ரீகாந்த் அணிவிக்க, அதை உடனே எடுத்து தனது மனைவிசரஸ்வதியின் கழுத்தில் போட்டார் முருகன். படம் பார்க்க வந்தவர்கள் வாழ்த்திலும் கரகோஷத்திலும்உணர்ச்சிவசப்பட்டு அழுதே விட்டார் சரஸ்வதி.


முருகன்-சரஸ்வதி ஜோடியுடன் இயக்குனர் ஸ்டான்லி, ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் ரெட்டி, அவரது மனைவி

படத்தை இயக்கிய ஸ்டான்லியின் முகத்தில் ஒரே சந்தோஷக் களை. நம்ம படத்தைப் பார்த்து பிரிந்த தம்பதிஒன்று சேர்ந்தது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்று தனது மகிழ்ச்சியை நமக்கும் பாஸ் செய்தார்.

ஜோடி சேர்ந்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இதை வைத்து படத்துக்கு இலவசமாக நல்ல விளம்பரத்தைசம்பாதிச்சிட்டீங்களே, ஸ்டான்லி.. சார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil