»   »  கலக்கும் நாடோடிமன்னன்! யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா? எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.

கலக்கும் நாடோடிமன்னன்! யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா? எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.

Subscribe to Oneindia Tamil

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா?

எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.

1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.

இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.

இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.

அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.

தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான்.

ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.

படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.

இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil