»   »  கலக்கிய முன்னாள் கனவு கன்னிகள்! அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா,சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்துகொடுத்தனர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடிமன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது.இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்தபழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன்நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு,எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ ,வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் பின்னணிப்பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னாள் கனவுக் கன்னிகளை, குறிப்பாகசரோஜாதேவியை (இன்னும் அப்படியே இருக்காருப்பா என்று ரசிகர்கள் கமெண்ட்அடித்ததை கேட்க முடிந்தது!) காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்கூடியிருந்தனர்.ரசிகர்களின் அன்பான வரவேற்பை ஏற்றபடி நடிகைகள் உள்ளே அழைத்துச்செல்லப்படட்னர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசுகையில், எம்.ஜி.ஆரைப் போலஇன்னொரு நடிகர் வரமுடியாது. அவரால் தான் இந்தப் படம் மூலம் நான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன்.எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களையும், எம்.ஜி.ஆரையும் மறக்கமாட்டேன் என்றார்.பத்மினி பேசுகையில், நான் இப்போது அதிகமாக படங்கள் பார்ப்பது இல்லை.சமீபத்தில் அந்நியன் படம் பார்த்தேன். விக்ரம் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிவாஜி,எம்.ஜி.ஆருடன் நடித்து விட்டேன். இனி பிரபுவுடன் நடிக்க மட்டுமே ஆசை உள்ளதுஎன்றார்.டி.எம்.எஸ். பேசுகையில், நாடோடி மன்னில் இடம் பெற்றுள்ள தூங்காதே தம்பிதூங்காதே பாடலை ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பாடிஅசத்தினார். பாராட்டுவிழாமுடிந்த பின்னர் நாடோடிமன்னன் படத்தை நடிகைகள் அனைவரும்ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தனர்.வாத்தியார், வாத்தியார் தான்!

கலக்கிய முன்னாள் கனவு கன்னிகள்! அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா,சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்துகொடுத்தனர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடிமன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது.இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்தபழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன்நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு,எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ ,வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் பின்னணிப்பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னாள் கனவுக் கன்னிகளை, குறிப்பாகசரோஜாதேவியை (இன்னும் அப்படியே இருக்காருப்பா என்று ரசிகர்கள் கமெண்ட்அடித்ததை கேட்க முடிந்தது!) காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்கூடியிருந்தனர்.ரசிகர்களின் அன்பான வரவேற்பை ஏற்றபடி நடிகைகள் உள்ளே அழைத்துச்செல்லப்படட்னர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசுகையில், எம்.ஜி.ஆரைப் போலஇன்னொரு நடிகர் வரமுடியாது. அவரால் தான் இந்தப் படம் மூலம் நான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன்.எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களையும், எம்.ஜி.ஆரையும் மறக்கமாட்டேன் என்றார்.பத்மினி பேசுகையில், நான் இப்போது அதிகமாக படங்கள் பார்ப்பது இல்லை.சமீபத்தில் அந்நியன் படம் பார்த்தேன். விக்ரம் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிவாஜி,எம்.ஜி.ஆருடன் நடித்து விட்டேன். இனி பிரபுவுடன் நடிக்க மட்டுமே ஆசை உள்ளதுஎன்றார்.டி.எம்.எஸ். பேசுகையில், நாடோடி மன்னில் இடம் பெற்றுள்ள தூங்காதே தம்பிதூங்காதே பாடலை ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பாடிஅசத்தினார். பாராட்டுவிழாமுடிந்த பின்னர் நாடோடிமன்னன் படத்தை நடிகைகள் அனைவரும்ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தனர்.வாத்தியார், வாத்தியார் தான்!

Subscribe to Oneindia Tamil

அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா,சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்துகொடுத்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடிமன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்தபழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன்நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு,


எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ ,வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் பின்னணிப்பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னாள் கனவுக் கன்னிகளை, குறிப்பாகசரோஜாதேவியை (இன்னும் அப்படியே இருக்காருப்பா என்று ரசிகர்கள் கமெண்ட்அடித்ததை கேட்க முடிந்தது!) காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல்கூடியிருந்தனர்.

ரசிகர்களின் அன்பான வரவேற்பை ஏற்றபடி நடிகைகள் உள்ளே அழைத்துச்செல்லப்படட்னர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசுகையில், எம்.ஜி.ஆரைப் போலஇன்னொரு நடிகர் வரமுடியாது.


அவரால் தான் இந்தப் படம் மூலம் நான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன்.எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களையும், எம்.ஜி.ஆரையும் மறக்கமாட்டேன் என்றார்.

பத்மினி பேசுகையில், நான் இப்போது அதிகமாக படங்கள் பார்ப்பது இல்லை.சமீபத்தில் அந்நியன் படம் பார்த்தேன். விக்ரம் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிவாஜி,எம்.ஜி.ஆருடன் நடித்து விட்டேன். இனி பிரபுவுடன் நடிக்க மட்டுமே ஆசை உள்ளதுஎன்றார்.


டி.எம்.எஸ். பேசுகையில், நாடோடி மன்னில் இடம் பெற்றுள்ள தூங்காதே தம்பிதூங்காதே பாடலை ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பாடிஅசத்தினார். பாராட்டுவிழாமுடிந்த பின்னர் நாடோடிமன்னன் படத்தை நடிகைகள் அனைவரும்ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தனர்.

வாத்தியார், வாத்தியார் தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil