twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள்

    |

    மறைந்த முதல்வர் திரையுலகின் முடிசூடா சக்ரவர்த்தி எம்ஜிஆரின் பெரும்பாலான வெற்றிப்படங்கள் பொங்கலன்று ரிலீஸ் ஆனவை, பொங்கல் தினத்தை தனது நாடக குழுவினருடன் ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடுவார் எம்ஜிஆர். கூடுதல் தகவலாக எம்ஜிஆரின் பிறந்த நாள் பொங்கல் கழித்து ஜனவரி 17 அன்று வரும் என்பது சுவாரஸ்யமான ஒன்று.

     தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்... யாரெல்லாம் வெளியிடறாங்க பாருங்க தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக்... யாரெல்லாம் வெளியிடறாங்க பாருங்க

    எம்ஜிஆரின் பொங்கல் திருநாள் ரிலீஸ் படங்கள்

    எம்ஜிஆரின் பொங்கல் திருநாள் ரிலீஸ் படங்கள்

    தமிழ்மக்களின் பண்பாட்டை அற்புதமாக விளக்கும் பல நல்ல படங்களை கொடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரும்பாலானவை பொங்கல் திருநாளில் வெளியாகி வெற்றி நடைபோட்டுள்ளன. விவசாயம், விவசாயிகள், தமிழர் பெருமை, கலாச்சாரம், மொழி, பண்பாடு, தமிழர் திருநாளின் வரலாறு, தமிழர்களின் பண்டிகைகள் என எம்ஜிஆர் படங்களில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் மிகக்குறைவு.

    தமிழர் வீர விளையாட்டை போற்றிய எம்ஜிஆர் படங்கள்

    தமிழர் வீர விளையாட்டை போற்றிய எம்ஜிஆர் படங்கள்

    தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டுகள் சிலம்பம், கத்திச்சண்டை, குஸ்தி என அனைத்தும் எம்ஜிஆர் படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு என பல விஷயங்கள் அவர் படத்தில் மறக்காமல் இருக்கும். பெரியவர்களை மதிப்பது தமிழர் பண்பாடு, சிறியவர்களுக்கு நல்போதனைகள் அளிப்பது, பெண்களை மதிப்பது, கலாச்சாரத்தை பாதுகாப்பது போன்றவை அழுத்தமாக வலியுறுத்தப்பட்டிருக்கும்.

    தமிழர் பாரம்பரியத்தை போற்றிய எம்ஜிஆர்

    தமிழர் பாரம்பரியத்தை போற்றிய எம்ஜிஆர்

    விவசாயிகளின் பிரச்சினை, கூட்டுப்பண்ணை விவசாயம், நவீன விவசாயம் என அனைத்து அம்சங்களும் எம்ஜிஆர் படங்களில் இருக்கும். தமிழர்களின் பாரம்பரிய உடை, உணவு உள்ளிட்டவற்றுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார் எம்ஜிஆர். மொத்தத்தில் தமிழர்கள் குறித்த தெளிவான பார்வை அந்தக்கால படங்களில் இருந்தது, அது எம்ஜிஆர் படங்களில் சற்றுக்கூடுதலாகவே இருந்தது எனலாம்.

    எம்ஜிஆர் படங்களில் தமிழர் பண்பாடு

    எம்ஜிஆர் படங்களில் தமிழர் பண்பாடு

    விவசாயிகள் மேன்மையை வலியுறுத்த விவசாயி பாடல், அன்னமிட்டக்கை என்கிற பாடல், பசுவை புனிதமாக போற்றும் சத்தியம் நீயே தருமத்தாயே படப்பாடல், நல்லப்பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என குழந்தைகளுக்கு அறிவுரை, கற்றவர் சபையில் உனக்காக தனியிடம் வரவேண்டும் என லட்சியத்தை விளக்கும் பாடல் என நல்ல போதனைகளை பாடல்களில் விதைத்தவர் எம்ஜிஆர். தவறாமல் தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு எனப்பாடி அதை படங்களில் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தியவர் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் தோட்டத்தில் பொங்கல் விழா

    எம்ஜிஆர் தோட்டத்தில் பொங்கல் விழா

    எம்ஜிஆர் மொழியால் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று சொல்வார்கள், ஆனால் அவர் வாழ்ந்த காலம் எல்லாம் அப்படி ஒரு எண்ணமே தமிழக மக்களுக்கு வந்ததில்லை, எங்க வீட்டுப்பிள்ளை என்றே பார்த்தார்கள். எம்ஜிஆரும் தமிழராகவே வாழ்ந்தார், தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மட்டுமே கொண்டாடினார். எம்ஜிஆர் நாடகக்குழு ஒன்றை நடத்தினார் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று அனைவரையும் ராமாவரம் இல்லம் அழைத்துவிடுவார் எம்ஜிஆர்.

    மறக்க முடியாத பொங்கல் திருநாள் விழாக்கள்

    மறக்க முடியாத பொங்கல் திருநாள் விழாக்கள்

    ஆட்டம், பாட்டம் என சந்தோஷமாக கழியும், உணவுண்டு பரிசுப்பொருளுடன் சந்தோஷமாக வீடு திரும்புவார்கள் அனைவரும், இதில் கணிசமாக ரொக்கப்பணமும் இருக்கும். எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகிய பின்னரும் இந்த பொங்கல் விழா மட்டும் விடாமல் தொடர்ந்து நடந்தது என்று சொல்வார்கள். ஆண்டுதோறும் திரைக்கலைஞர்கள் பொங்கல் எப்போது வரும் எம்ஜிஆர் இல்லம் நோக்கி செல்வோம் என காத்திருந்த காலம் உண்டு என சொல்வார்கள்.

    முதல் படமும் பொங்கல் ரிலீஸ்

    முதல் படமும் பொங்கல் ரிலீஸ்

    எம்ஜிஆரையும் பொங்கல் பட ரிலீஸையும் தள்ளி வைத்து பார்க்க முடியாது. அவரது திரையுல வாழ்வின் திருப்புமுனை ஏற்படுத்திய பல வெற்றிப்படங்கள் பொங்கல் ரிலீஸ் படங்களே. எம்ஜிஆர் துணை நடிகராக நடித்த ஹரிச்சந்திரா முதல் பொங்கல் ரிலீஸ். இது 1944 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று பொங்கலுக்கு வெளியானது. அதன் பின்னர் 1952 ஆம் ஆண்டு ராணி சம்யுக்தா என்கிற படம் பொங்கலுக்கு வெளியானது.

    பிரம்மாண்டமான முதல் கலர்படம்

    பிரம்மாண்டமான முதல் கலர்படம்

    அதன் பின்னர் எம்ஜிஆர் மட்டுமல்ல முதல் கலர் படம் என புகழ்ப்பெற்ற, எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, தங்கவேலு நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்கிற அரேபிய தழுவல் கதைப்படம் வெளியான ஆண்டும் 1956 ஆம் ஆண்டு ஜன 14 பொங்கல் தினம் தான். மாசில்லா உண்மைக்காதலே பாடலை நினைக்காதோர் உண்டா? இது சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஆகும்.

    1957 ஆம் ஆண்டு வெளியான பொங்கல் ரிலீஸ்

    1957 ஆம் ஆண்டு வெளியான பொங்கல் ரிலீஸ்

    அதற்கு அடுத்த ஆண்டு 1957 ஆம் ஆண்டு பொங்கலுக்கு சக்ரவர்த்தி திருமகள் படம் வெளியானது. இம்முறை ஜனவரி 18 எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு மறுநாள் வெளியானது. இந்தப் படமும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகும். இதன் பின்னரே எம்ஜிஆர் மிகப்பெரிய நடிகர் என்கிற அந்தஸ்த்தைப்பெற்றார். அதன் பின்னர் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று தனது படம் வெளிவருமாறு எம்ஜிஆர் பார்த்துக்கொண்டார்.

    தத்துவ பாடல் படம் பணத்தோட்டம்

    தத்துவ பாடல் படம் பணத்தோட்டம்

    எம்ஜிஆரையும் தேவரையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இருவரும் ஒன்றிப்போனவர்கள். 63 ஆம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த பணத்தோட்டம் படமும் பொங்கல் அன்று ரிலீசானது. இதில் கண்ணதாசன் எழுதிய பணத்தோட்டம் பாடல் அப்போது அவ்வளவு வரவேற்பை பெற்றது. படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    சுறுசுறுப்புக்கு பெயர் போன வேட்டைக்காரன்

    சுறுசுறுப்புக்கு பெயர் போன வேட்டைக்காரன்

    1964 ஆம் ஆண்டு, தேவர்பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த வேட்டைக்காரன் படம் பொங்கலுக்கு வெளியானது. மற்ற அனைத்து படங்களைவிட இளமை துள்ளலுடன் நடித்திருப்பார் எம்ஜிஆர், படம் முழுவதும் உற்சாகம் பொங்கும். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் இப்போது கேட்டாலும் கேட்பவர் உள்ளத்தில் உற்சாகத்தை தூண்டும்.

    சூப்பர் ஹிட் எங்க வீட்டு பிள்ளை

    சூப்பர் ஹிட் எங்க வீட்டு பிள்ளை

    1965 ஆம் ஆண்டு, நாகிரெட்டி தயாரிப்பில் எம்ஜிஆர் இருவேடங்களில் நடித்த, எங்க வீட்டு பிள்ளை பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். நான் ஆணையிட்டால் பாடல் ரசிகர்களால் அமோகமாக வரவேற்கப்பட்டது. எம்ஜிஆரின் கொள்கைப்பாடலாகவும் பின்நாளில் இப்பாடல் மாறியது.

    அன்பே வா வித்தியாசமான படம்

    அன்பே வா வித்தியாசமான படம்

    1966 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பொங்கலுக்கு ரிலீசான அன்பே வா, மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அதே ஆண்டில் காவல்காரன் பட ரிலீஸை ஏவிஎம் நிறுவனத்தாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று அன்பே வா ரிலீசுக்கு ஒதுக்கினார் எம்ஜிஆர். படத்தில் வழக்கமான எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாமல் இளமை துள்ளலுடன் கூடிய காதலுக்காக ஏங்கும், நகைச்சுவை கலந்த பாத்திரம். படம் சூப்பர் டூப்பர் வெற்றி. ஏவிஎம் மகுடத்தில் மைல்கல்லாக அமைந்த படம் இது.

    சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்

    67 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான தாய்க்குத் தலைமகன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 1968ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான ரகசிய போலீஸ் 115 திரைப்படம், 1970 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இரட்டை வேடங்களில் நடித்த மாட்டுக்கார வேலன் ஜெயலலிதா, லட்சுமி ஜோடி, ஒருபக்கம் பார்க்கிறா பாடல், சத்தியம் நீயே பாடலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

    திமுகவிலிருந்து வெளியேறிய பின வந்த உரிமைக்குரல்

    திமுகவிலிருந்து வெளியேறிய பின வந்த உரிமைக்குரல்

    திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டப்பின் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த உரிமைக்குரல் 1974 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. முழுதும் விவசாயியின் பிரச்சினையை பேசிய படம், இடையில் அண்ணன் தம்பி பாசம் என படம் சிறப்பாக இருக்கும். ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் ஒரு பிரிவு வந்தால் என்கிற கொள்கை பாடலும், விழியே கதை எழுது என ஜேசுதாசின் குரலில் இனிமையான பாடலும் படத்தை வெற்றிப்படமாக்கியது.

    எம்ஜிஆரின் கடைசிப்படமும் பொங்கல் ரிலீஸ்

    எம்ஜிஆரின் கடைசிப்படமும் பொங்கல் ரிலீஸ்

    எம்ஜிஆர் முதல்வரான பின் வெளியான படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். எம்ஜிஆர் டைரக்‌ஷனில் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று வெளியானது. அதன் பின்னர் நடிக்கும் எண்ணம் இருந்தாலும் முதல்வர் ஆனதால் அதன் பின்னர் நடிப்பதை எம்ஜிஆர் கைவிட்டார். எம்ஜிஆரின் திரையுலக வாழ்வின் கடைசிப்படமாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    MGR and Pongal Thirunal .... Pongal years when hit films are released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X