For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விளாசும் காமெடியில் இவங்க வேற லெவல்... மிண்டி காலிங்... ஹாலிவுட்டில் ஒரு சொக்கலிங்கம்!

  By
  |

  சென்னை: விரிந்து கிடக்கிற நிலமெங்கும் பரந்து கிடக்கிறது தமிழினம். சொந்த நிலம் விட்டுப் பிழைப்புக்குப் பிரிந்தாலும் நம் அடையாளங்களை தங்கள் சூட்கேஸ்களுக்குள் திணித்தே சென்றிருக்கிறார்கள், தமிழர்கள்!

  அந்த அடையாளம் பெயர்களாவோ, கலாசாரம் திருவிழாவாகவோ இருக்கலாம். அப்படியொரு அடையாளத்தைச் சுமந்து நிற்கிறார் வேரா மிண்டி சொக்கலிங்கம். பிரபல ஹாலிவுட் நடிகை! அவர் தமிழச்சி என்பதற்கான அடையாளமாக, அந்த 'சொக்கலிங்கம்' போதும்.

  கேம்பிரிட்ஜ்

  கேம்பிரிட்ஜ்

  மிண்டி காலிங்கின் அப்பா சொக்கலிங்கம் சென்னைக்காரர். ஆர்கிடெக்ட். அம்மா ஸ்வாதி, பெங்காலைச் சேர்ந்தவர். மகப்பேறு மருத்துவர். நைஜீரியாவில் ஒரே இடத்தில் பணியாற்றியபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர் இருவரும். பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர, கேம்பிரிட்ஜில் பிறந்தார் மிண்டி.

  முதல் படம்

  முதல் படம்

  இவரை, லைசென்ஸ் டு வெட், திஸ் இஸ் த என்ட், இன்சைட் அவுட், த நைட் பிஃபோர், ஓசியன்ஸ் 8 உட்பட பல படங்களில் பார்த்திருக்க முடியும், காமெடி கேரக்டரிலும் சில படங்களில் குணசித்திர கேரக்டர்களிலும்! இதுதவிர ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார் மிண்டி. இவரது முதல் ஹாலிவுட் படம், 'தி 40 இயர்ஸ் ஓல்ட் விர்ஜின்'.

  சிரிச்சுட்டே இருக்கலாம்

  சிரிச்சுட்டே இருக்கலாம்

  'உனக்கு காமெடி சென்ஸ் ஜாஸ்தி...நீ கிட்ட இருந்தா சிரிச்சுட்டே இருக்கலாம்' என்று நண்பர்கள் பாராட்ட, நாடகங்களில் நடிக்கவும், எழுதவும் தொடங்கிவிட்டார் மிண்டி. அவர் எழுத்து ஏதோ மாயம் செய்கிறது என்று நினைத்தவர்கள், பாராட்டித் தள்ளினார்கள். தனது 24-வது வயதில் அமெரிக்காவின் என்பிசி சேனலில் ஒளிபரப்பான 'தி ஆபீஸ்' என்ற காமெடி தொடருக்கு எழுதும் வாய்ப்பு வந்தது, மிண்டிக்கு. அந்த தொடரின் பல எபிசோட்களை பலபேர் எழுத, ஒரே ஒரு பெண் எழுத்தாளர் இவர் மட்டுமே!

  கன்னா பின்னா ரீச்

  கன்னா பின்னா ரீச்

  பிறகு அந்த தொடரில் கெல்லி கபூர் என்ற இந்தியராக காமெடி கேரக்டரில் நடிக்கவும் செய்தார். இது கன்னாபின்னாவென ரீச் ஆனதை அடுத்து, சில தொடர்களை நடித்து இயக்க வாய்ப்பு வந்தது. அவர் எழுதி நடித்த 'தீபாவளி' காமெடி தொடர், அமெரிக்க இந்தியர்களுக்கு அதிகம் பிடித்த தொடரானது. இதன் வரவேற்பை அடுத்து, 'த மிண்டி புராஜக்ட்' என்ற காமெடி தொடரை தயாரித்து எழுதி நடிக்க பாக்ஸ் நிறுவனம் இவருடன் ஒப்பந்தம் போட்டது. இதன் வரவேற்பு மிண்டியின் புகழை இன்னும் அதிகரிக்க, சினிமாவுக்கு சென்றார்.

  புத்தகம்

  புத்தகம்

  தனது இளம் வயது அனுபவங்கள், நட்பு, உறவுகள் பற்றி இவர் விரிவாக எழுதிய, 'எவ்ரி ஒன் ஹேங்கிங் அவுட் வித்தவுட் மீ?'என்ற புத்தகம் அமெரிக்காவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது. 2013-ம் ஆண்டு, உலகில் மிகவும் செல்வாக்குள்ள 100 பேரில் ஒருவராக மிண்டி காலிங்கைத் தேர்ந்தெடுத்திருந்தது டைம் பத்திரிகை. 2014 ஆம் ஆண்டு வுமன் ஆப் த இயர் என்று இவரை அறிவித்திருந்தது கிளாமர் பத்திரிகை!

  நகைச்சுவை உணர்வு

  நகைச்சுவை உணர்வு

  'எனக்கு வீட்டுல சொல்லிக் கொடுத்தது, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். படிக்கணும், அமைதியா இருக்கணும். அப்பா, அம்மாவை மதிக்கணும்ங்கறதைத்தான். என் குழந்தைப் பருவம் இப்படித்தான் இருந்தது. அம்மாகிட்ட இருந்துதான் நகைச்சுவை உணர்வு வந்திருக்கும்னு நினைக்கிறேன்' என்கிற மிண்டியோடு, 'காலிங்' இணைந்த கதை சுவாரஸ்யமானது.

  kaling

  kaling

  மிண்டிக்கு அழகான அமெரிக்கப் பெயரைச் சூட்ட நினைத்தனர் பெற்றோர். அப்போது பிரபலமான, மோர்க் அண்ட் மிண்டி என்ற டி.வி.ஷோவின் தாக்கத்தில் மிண்டி என்ற பெயரை வைத்தனர். வளர்ந்த பிறகு பெயருக்குப் பின்னால் இருந்த சொக்கலிங்கத்தை, காலிங் என்று மாற்றிக் கொண்டார் மிண்டி. எப்படி என்றால், 'Chokalingam'என்ற பெயரில் இருக்கிற kaling-ஐ மட்டும் எடுத்து வைத்துக்கொண்டாராம்.

  தந்தை யார்

  தந்தை யார்

  கடந்த 2017 ஆம் ஆண்டு காலிங், பரபரப்பாகப் பேசப்பட்டார். அவர் அம்மா ஆனதுதான் பரபரப்புக்கு காரணம். அந்த வருட டிசம்பர் மாதம் அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கேத்தரின் ஸ்வாதி காலிங் என்று பெயர் வைத்திருக்கிறார் மிண்டி. ஸ்வாதி, அவர் அம்மாவின் பெயர். ஆனால், குழந்தையின் தந்தை யார் என்பதை தனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூடத் தெரிவிக்கவில்லை மிண்டி . ஆனால், தனது முன்னாள் காதலரான, நடிகர் நோவோக்கை, குழந்தையின் காட்பாதர் என்கிறார்.

  Read more about: actress நடிகை
  English summary
  Mindy Kaling- A tamil comedian and creator in Hollywood
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X