»   »  மிஸ் செளத் இந்தியா நீலிமா நாயுடு

மிஸ் செளத் இந்தியா நீலிமா நாயுடு

Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த மிஸ் செளத் இந்தியா- 2006 அழகிப் போட்டியில் ஆந்திர அழகிநீலிமா நாயுடு முடி சூட்டப்பட்டார்.

மாயா ஈவன்ட்ஸ் இந்தியா மற்றும் விசன்ப்ரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்துசென்னையில் மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியை நடத்தின.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இந்தப்போட்டியில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 16அழகிகள் போட்டியிட்டனர்.

இறுதிச் சுற்றில் ஆந்திராவைச் சேர்ந்த நீலிமா நாயுடு முதலிடத்தைப் பிடித்து மிஸ்செளத் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.

2வது இடத்தையும் ஆந்திராவைச் சேர்ந்த சிந்து ஆபன் பெற்றார்.

கர்நாடக அழகி சாகித்யா 3வது இடத்தைப் பிடித்தார். தமிழக, கேரள அழகிளுக்குஇதில் வெற்றி கிடைக்கவில்லை.

இந்த அழகிப் போட்டியையொட்டி சின்னத் திரை நடிகர், நடிகையரின் கலக்கல்கிளாமர் டான்ஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. முன்னதாக அழகிகளுடன்நடிகர் பரத் மேடையில் அணி வகுத்து வந்தார். அழகிகளையும் அவர்அறிமுகப்படுத்தினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil