»   »  மிஸ் இங்கிலாந்து ஆன இந்திய அழகி

மிஸ் இங்கிலாந்து ஆன இந்திய அழகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டனில் நடந்த மிஸ் கிரேட் பிரிட்டன் அழகிப் போட்டியில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ப்ரீத்தி தேசாய் பட்டம் வென்றார்.

லண்டனில் மிஸ் கிரேட் பிரிட்டன் பட்டத்திற்கான அழகிப் போட்டி நடந்தது. இதில் டேணியல் லாயிட் என்ற அழகி மிஸ் கிரேட் பிரிட்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அழகிப் போட்டி நடுவர்களில் ஒருவரான டெட்டி ஷெரிங்காடன் அவர் படு நெருக்கமாக இருந்ததாகவும், அவருடன் உடலுறவு கொண்டதாகவும், பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானதால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது.

2வது இடத்தைப் பிடித்த இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ப்ரீத்தி தேசாய் மிஸ் கிரேட் பிரிட்டனாக அறிவிக்கப்பட்டார். கய்ஸ்பாரோ என்ற ஊரில் பிறந்தவர் தேசாய்.

23 வயதாகும் தேசாயின் தாயார் ஹேமா, தந்தை ஜித்து, தங்கை அஞ்சலி.

மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் இங்கிலாந்து சார்பில் தேசாய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது வெற்றிக்கு தாயாரின் ஊக்கம்தான் காரணம் என ப்ரீத்தி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கு 18 வயதாக இருக்கும்போது தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நான் படிப்பை நிறுத்திவிட்டு அவருடனேயே முழு நேரமும் செலவிட்டு வந்தேன்.

இந் நிலையில் அவர்தான் என்னை அழகிப் போட்டியில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தினார். எனது வெற்றியினால் அவர் தற்போது சந்தோஷமடைந்துள்ளார். அவர் முகத்தில் மீண்டும் புன்முறுவலைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போட்டியில் பங்கேற்றேன் என்றார் ப்ரீத்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil