twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சானியா பாபி... உருகும் மிஸ் பாகிஸ்தான் ஆயிஷா கிலானி!

    By Staff
    |

    Ayesha Gilani
    இஸ்லாமாபாத்: சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு சானியா மிர்சா சீக்கிரம் பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்று மிஸ் பாகிஸ்தான் அழகியான ஆயிஷா கிலானி ஆர்வமாகக் கூறியுள்ளார்.

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்குக்கும் வரும் 15ம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, முதல் தாரம் எனக் கூறி சோயப் - சானியா இடையே ஆயிஷா ரூபத்தில் புயல் புகுந்து பெரும் சர்ச்சையில் விவகாரம் சிக்கியுள்ளது. ஆனால் இன்னொரு ஆயிஷாவோ சானியா - சோயப் திருமணத்தை ரொம்ப ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளார். இந்த ஆயிஷா, மிஸ் பாகிஸ்தான் ஆயிஷா கிலானி ஆவார்.

    தற்போது வாஷிங்டனில் படித்துவரும் ஆயிஷா கிலானி இதுபற்றி கூறுகையில், 'சானியா பாபிக்கும், சோயப்பும் அவ்வளவு அற்புதமான ஜோடிப் பொருத்தம்.

    இரண்டு பேரும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்குள் ஒரு வித புரிதல் இருக்கும்.

    சோயப்புக்கும் இந்தியாவில் நிறைய உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதால் கலாச்சாரத்தில் கூட எந்த விதமான முரண்பாடுகளும் இருக்க முடியாது.

    மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு குறித்து வெளி உலகுக்கு நல்ல அறிகுறியை தெரிவிக்க இந்த திருமணம் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    பாபி (சானியா) துபாயில் தங்கியிருக்கப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கராச்சியில் இருக்க வேண்டு்ம் என்பது தான் என்னுடைய ஆசை.

    ஒரு பெண் கல்யாணம் முடிந்ததும், கணவன் வீட்டில் வசிப்பது தான் முறை. இதை சானியாவும் பின்பற்ற வேண்டும் என நான் விரும்பிகிறேன். பாபிக்கு சோயப் சிறந்த புருஷனாக இருக்க வேண்டு்ம்' என்றார்.

    சானியாவுக்கு எதிராக இந்தியாவில் எழுந்துள்ள தேசபக்தி தொடர்பான சர்ச்சைகள் குறித்து மிஸ் பாகிஸ்தான் ஆயிஷா கிலானி குறிப்பிடுகையில்,

    'காதலையும், விதியையும் யாரும் குறைபட்டுக் கொள்ள முடியாது. பாபி எப்போதும், இந்தியாவுக்காக விளையாட மாட்டேன் எனக் கூறவேயில்லை. அப்படியிருக்க அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவதெல்லாம் முட்டாள்தனம்' என்றார்.

    சோயப் மாலிக்கை முதலில் திருமணம் செய்து கொண்டதாக ஆயிஷா சித்திக் ஹைதராபாத் பெண் எழுப்பியுள்ள பிரச்னை குறித்து மிஸ் பாகிஸ்தான் கூறுகையில்,

    'ஒருவர் எந்த தவறும் செய்யாத போது, அவர் மீது பழி விழுந்தால் அது மிகவும் மோசமான அனுபவம்.

    குற்றம் செய்தது நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபராதி தான். ஒருவேளை ஆயிஷா ஏதாவது ஆதாரம் வைத்திருந்தால் அவர் கூறுவதையும் நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

    ஆனால் சோயப்பை திருமணம் செய்ததாக ஆயிஷாவிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை. பொதுவாக பிரபலமாக இருப்பவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம் என்பது அனைவரும் அறிந்ததே.

    ஆனாலும், அந்த ஆயிஷாவுக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். குற்றத்தை அவர் நிரூபித்துவிட்டால், அதற்கான பொறுப்பை சோயப்பும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்' என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X