»   »  இன்று மிஸ் வோர்ல்ட் இறுதிப் போட்டி இந்த ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி இன்று சீனா நாட்டிலுள்ள சானியா தீவில் நடக்கிறது.இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 105 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சிந்தூரா காட்டேபங்கேற்றுள்ளார். ஆந்திர மாநில விஜயவாடாவை சேர்ந்த இவர் மும்பையில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர்.இன்று நடக்கும் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த அழகி யுலியா இவனோவா பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக சீன பத்திரிகைகள்கணித்துள்ளன.இந்த இறுதிப் போட்டியில் மெக்சிகோ அழகி மொலினா லோனா, அமெரிக்கா அழகி லிசட்டி டியாஸ் ஆகியோர் பங்கேற்பதுஉறுதியாகி விட்டது. உலக அழகிக்கான இறுதிப் போட்டி மொத்தம் 2 மணி நேரம் நடக்கிறது. இதில் 12 அழகிகள் பங்கு பெறுகிறார்கள். வடக்குஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டுஅதில் 2 அழகிகள் வீதம் இறுதிப் போட்டிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இவர்களில் ஒருவர் இன்று உலக அழகியாக தேர்வு செய்யப்படுவார். எஸ்.எம்.எஸ் மூலம் அழகியை ரசிகர்கள் தேர்வு செய்யவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இறுதிப் போட்டியில் புத்திக் கூர்மையை அறிய பொது அறிவு பற்றிய கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுவோர்உலக அழகியாக கிரீடம் சூட்டப்படுவார்கள். இந்த போட்டியின் நடுவர்களாக முன்னாள் உலக அழகிகள் 8 பேர் பணியாற்றுவர்.இந்த 8 பேரில் கடந்த 1997ம் ஆண்டு பட்டம் வென்ற இந்திய அழகி டயானா ஹைடனும் உள்ளார்.இன்று நடக்கவுள்ள உலக அழகி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவம் குறித்து இந்திய அழகி சிந்தூரா கூறுகையில்,எனக்கு ஒரே த்ரில்லிங்காக உள்ளது, அதே சமயத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு எப்போது வரப்போகிறது என்று இருக்கிறதுஎன்றார்.சிந்தூராவின் பெற்றோர் மற்றும் அவரது நெருங்கிய தோழிகளும் சானியா தீவிற்கு சென்றுள்ளனர். ஆனால் சிந்தூரா இதுவரைதனது பெற்றோரை சந்திக்கவில்லையாம். மேலும் சிந்தூரா சானியா தீவில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் பல்வேறு நாடுகளில்இருந்து வந்துள்ள 105 அழகிகளுடன் நன்றாக பழகிவிட்டாராம். அதிலும் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுஅழகிகளுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டாராம்.இந்த உலக அழகிப் போட்டியில் மொரிசீயஸ் நாட்டின் சார்பில் மீனாட்சி ஷிவானி என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தஅழகியும், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவிஜா சுந்தரம் என்ற அழகியும்போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி கார்லின் அகுலார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுசூதாட்டக்காரர்களின் கணிப்பாகும். இங்கிலாந்து சூதாட்டக்காரர்கள் கருத்துக்கணிப்பில் 2வது இடம் கனடா அழகி ரோமானாரினாவுக்கும், 3வது இடம் ஐஸ்லாந்து அழகி பிர்னாவுக்கும், 4வது இடம் மிஸ் இத்தாலி அழகி சோபியுக்கும் கிடைக்கும் என்றுஅறிவித்துள்ளனர்.எதுவாக இருந்தாலும் புதிய உலக அழகி யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.மிஸ் வோர்ல்ட்: வெல்வாரா சிந்தூரா?

இன்று மிஸ் வோர்ல்ட் இறுதிப் போட்டி இந்த ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி இன்று சீனா நாட்டிலுள்ள சானியா தீவில் நடக்கிறது.இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 105 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சிந்தூரா காட்டேபங்கேற்றுள்ளார். ஆந்திர மாநில விஜயவாடாவை சேர்ந்த இவர் மும்பையில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர்.இன்று நடக்கும் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த அழகி யுலியா இவனோவா பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக சீன பத்திரிகைகள்கணித்துள்ளன.இந்த இறுதிப் போட்டியில் மெக்சிகோ அழகி மொலினா லோனா, அமெரிக்கா அழகி லிசட்டி டியாஸ் ஆகியோர் பங்கேற்பதுஉறுதியாகி விட்டது. உலக அழகிக்கான இறுதிப் போட்டி மொத்தம் 2 மணி நேரம் நடக்கிறது. இதில் 12 அழகிகள் பங்கு பெறுகிறார்கள். வடக்குஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டுஅதில் 2 அழகிகள் வீதம் இறுதிப் போட்டிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இவர்களில் ஒருவர் இன்று உலக அழகியாக தேர்வு செய்யப்படுவார். எஸ்.எம்.எஸ் மூலம் அழகியை ரசிகர்கள் தேர்வு செய்யவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இறுதிப் போட்டியில் புத்திக் கூர்மையை அறிய பொது அறிவு பற்றிய கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுவோர்உலக அழகியாக கிரீடம் சூட்டப்படுவார்கள். இந்த போட்டியின் நடுவர்களாக முன்னாள் உலக அழகிகள் 8 பேர் பணியாற்றுவர்.இந்த 8 பேரில் கடந்த 1997ம் ஆண்டு பட்டம் வென்ற இந்திய அழகி டயானா ஹைடனும் உள்ளார்.இன்று நடக்கவுள்ள உலக அழகி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவம் குறித்து இந்திய அழகி சிந்தூரா கூறுகையில்,எனக்கு ஒரே த்ரில்லிங்காக உள்ளது, அதே சமயத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு எப்போது வரப்போகிறது என்று இருக்கிறதுஎன்றார்.சிந்தூராவின் பெற்றோர் மற்றும் அவரது நெருங்கிய தோழிகளும் சானியா தீவிற்கு சென்றுள்ளனர். ஆனால் சிந்தூரா இதுவரைதனது பெற்றோரை சந்திக்கவில்லையாம். மேலும் சிந்தூரா சானியா தீவில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் பல்வேறு நாடுகளில்இருந்து வந்துள்ள 105 அழகிகளுடன் நன்றாக பழகிவிட்டாராம். அதிலும் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுஅழகிகளுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டாராம்.இந்த உலக அழகிப் போட்டியில் மொரிசீயஸ் நாட்டின் சார்பில் மீனாட்சி ஷிவானி என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தஅழகியும், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவிஜா சுந்தரம் என்ற அழகியும்போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி கார்லின் அகுலார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுசூதாட்டக்காரர்களின் கணிப்பாகும். இங்கிலாந்து சூதாட்டக்காரர்கள் கருத்துக்கணிப்பில் 2வது இடம் கனடா அழகி ரோமானாரினாவுக்கும், 3வது இடம் ஐஸ்லாந்து அழகி பிர்னாவுக்கும், 4வது இடம் மிஸ் இத்தாலி அழகி சோபியுக்கும் கிடைக்கும் என்றுஅறிவித்துள்ளனர்.எதுவாக இருந்தாலும் புதிய உலக அழகி யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.மிஸ் வோர்ல்ட்: வெல்வாரா சிந்தூரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி இன்று சீனா நாட்டிலுள்ள சானியா தீவில் நடக்கிறது.

இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 105 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சிந்தூரா காட்டேபங்கேற்றுள்ளார். ஆந்திர மாநில விஜயவாடாவை சேர்ந்த இவர் மும்பையில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றவர்.

இன்று நடக்கும் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த அழகி யுலியா இவனோவா பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக சீன பத்திரிகைகள்கணித்துள்ளன.


இந்த இறுதிப் போட்டியில் மெக்சிகோ அழகி மொலினா லோனா, அமெரிக்கா அழகி லிசட்டி டியாஸ் ஆகியோர் பங்கேற்பதுஉறுதியாகி விட்டது.

உலக அழகிக்கான இறுதிப் போட்டி மொத்தம் 2 மணி நேரம் நடக்கிறது. இதில் 12 அழகிகள் பங்கு பெறுகிறார்கள். வடக்குஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 6 மண்டலமாக பிரிக்கப்பட்டுஅதில் 2 அழகிகள் வீதம் இறுதிப் போட்டிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவர்களில் ஒருவர் இன்று உலக அழகியாக தேர்வு செய்யப்படுவார். எஸ்.எம்.எஸ் மூலம் அழகியை ரசிகர்கள் தேர்வு செய்யவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இறுதிப் போட்டியில் புத்திக் கூர்மையை அறிய பொது அறிவு பற்றிய கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுவோர்உலக அழகியாக கிரீடம் சூட்டப்படுவார்கள். இந்த போட்டியின் நடுவர்களாக முன்னாள் உலக அழகிகள் 8 பேர் பணியாற்றுவர்.

இந்த 8 பேரில் கடந்த 1997ம் ஆண்டு பட்டம் வென்ற இந்திய அழகி டயானா ஹைடனும் உள்ளார்.

இன்று நடக்கவுள்ள உலக அழகி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவம் குறித்து இந்திய அழகி சிந்தூரா கூறுகையில்,எனக்கு ஒரே த்ரில்லிங்காக உள்ளது, அதே சமயத்தில் நாளை (சனிக்கிழமை) இரவு எப்போது வரப்போகிறது என்று இருக்கிறதுஎன்றார்.

சிந்தூராவின் பெற்றோர் மற்றும் அவரது நெருங்கிய தோழிகளும் சானியா தீவிற்கு சென்றுள்ளனர். ஆனால் சிந்தூரா இதுவரைதனது பெற்றோரை சந்திக்கவில்லையாம். மேலும் சிந்தூரா சானியா தீவில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் பல்வேறு நாடுகளில்இருந்து வந்துள்ள 105 அழகிகளுடன் நன்றாக பழகிவிட்டாராம். அதிலும் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுஅழகிகளுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டாராம்.


இந்த உலக அழகிப் போட்டியில் மொரிசீயஸ் நாட்டின் சார்பில் மீனாட்சி ஷிவானி என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தஅழகியும், தென் ஆப்பிரிக்காவின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவிஜா சுந்தரம் என்ற அழகியும்போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி கார்லின் அகுலார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுசூதாட்டக்காரர்களின் கணிப்பாகும். இங்கிலாந்து சூதாட்டக்காரர்கள் கருத்துக்கணிப்பில் 2வது இடம் கனடா அழகி ரோமானாரினாவுக்கும், 3வது இடம் ஐஸ்லாந்து அழகி பிர்னாவுக்கும், 4வது இடம் மிஸ் இத்தாலி அழகி சோபியுக்கும் கிடைக்கும் என்றுஅறிவித்துள்ளனர்.

எதுவாக இருந்தாலும் புதிய உலக அழகி யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

மிஸ் வோர்ல்ட்: வெல்வாரா சிந்தூரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil