ஸ்பெஷல்ஸ்
சீனாவில் நடந்து வரும் மிஸ் வோர்ல்ட்-2003 போட்டியில் பியூப்பிள்ஸ் சாய்ஸ் பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிடும் அமி வஷி தேர்வாகியுள்ளார். 106 பேர் போட்டியிடும் மிஸ் வோர்ல்ட் போட்டியில் மக்கள் அதிகம் விரும்பும் முதல் 10 பேரில் அமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 6ம் தேதி தென் சீனாவில் உள்ள சன்யா சிட்டியில் மிஸ் வோர்ல்ட் இறுதிப் போட்டி நடக்கிறது. நடுவர்களில் ஒருவராக ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சானும் இருப்பார்.
22 வயதான அமி பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவர். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பொருளாதாரம் படித்தவர். பின்னர் அமெரிக்காவிலேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு அது பிடிக்காமல் இந்தியா திரும்பினார்.
இப்போது பிரதான் என்ற சமூக நல அமைப்பில் அமி பணியாற்றி வருகிறார். பரத நாட்டியத்திலும் கைதேர்ந்தவர் இந்த குஜராத்திப் பெண்.
More from Filmibeat
cinema dance dubbing hero heroine kamal kovilpatti veeralakshmi raju sundaram sex simran songs tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











