»   »  காட்டில் பதுங்கிய மிதுனா

காட்டில் பதுங்கிய மிதுனா

Subscribe to Oneindia Tamil

மிருது மிதுனா நடித்த டிப்டாப் படப்பிடிப்பின்போது காட்டெருமைக் கூட்டம் துரத்தியதால் ஷூட்டிங்கில்பரபரப்பு ஏற்பட்டது.

வடிவேலுவுடன் கூட்டு சேர்ந்து காமெடி விருந்து படைத்து வரும் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக்கும்,மிதுனாவும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம்தான் டிப்டாப்.

மிதுனா இதில் கிளாமர் கலந்த நடிப்பை அள்ளி வழங்கி வருகிறார். மிதுனாவுக்கு ஈடு கொடுத்து வாசனும் தூள்கிளப்பி வருகிறாராம். சமீபத்தில் கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு டூயட் பாட்டைசுட்டுள்ளனர்.

இதற்காக மிதுனா சகிதம் யூனிட்டார் காட்டுக்கு ஷிப்ட் ஆகி டேரா போட்டுள்ளனர். கிளாமர் காஸ்ட்யூமில் இருந்தமிதுனாவுடன், வாசன் கார்த்திக் கட்டிப் பிடித்த டூயட் பாடிக் கொண்டிருந்தபோது அங்கே காட்டெருமைக் கூட்டம்நுழைந்துள்ளது.

நம்ம ஏரியாவில் யாருடா புதுசா என்று குழம்பிய காட்டெருமைகள், படக் குழுவினரை நோக்கி உறுமலுடன்பாய்ந்துள்ளன. இதைப் பார்த்து பயந்த படக் குழுவினர் தாங்கள் வந்த வாகனங்களுக்குள் ஏறி பதுங்கிக்கொண்டனர்.

மிதுனாவும் படு சேபாக தனது காருக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார். கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு சிலமணி நேரம் வாகனங்களுக்குள்ளேயே மிதுனாவும் மற்றவர்களும் அடைந்து கிடந்தார்களாம்.

நல்ல வேளையாக மிதுனா குறைச்சலான காஸ்ட்யூமில் இருந்ததால் காருக்குள் வியர்க்காமல், விறுவிறுக்காமல்பந்தோபஸ்தாக இருந்துள்ளார். ஆனால் மற்றவர்களுக்குத்தான் வியர்த்து நாறிப் போய் விட்டதாம்.

ஒரு வழியாக காட்டெருமைகள் ஏரியாவைக் காலி செய்து விட்டு நகர, மிச்ச சொச்ச டூயட்டையும் முடித்துக்கொண்டு பேக்கப் செய்தார்களாம்.

காட்டு மிருகங்கள் ஒருவேளை மிதுனாவைப் பார்க்க வந்திருக்குமோ?

Read more about: mithu and vasan in tiptop
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil