ஆபாச மெயில்கள்-மாடல் நடாஷா போலீசில் புகார்!

இதுகுறித்து நடாஷாவின் பிஆர்ஓ ப்ளைன் ரெமடியஸ் கூறுகையில், "இரண்டு வருடங்களுக்கு முன் நடாஷாவுக்கும் ஒரு டெல்லி இளைஞருக்கும் நிச்சயமானது. ஆனால் அந்த இளைஞனின் கொடுமையான மறுபக்கம் தெரிந்துவிட்டதால், நிச்சதார்த்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தொடர்ந்து ஆபாச மெயில்கள், கெட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதங்களை நடாஷா மாடலிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறான். தனியே ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் நடாஷா குறித்து மிகக் கேவலமாக எழுதியுள்ளான். நடாஷா ஒரு பிராட் என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளான். இதற்கு அவன் ஒரு போலியான இமெயில் முகவரியைப் பயன்படுத்தியுள்ளான்..." என்றார்.
சம்பந்தப்பட்ட பிளாக் மற்றும் மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து அந்த இளைஞனைக் கைது செய்யும் பணியில் இறங்கியுள்ளது மும்பை சைபர் கிரைம் பிரிவு.


Click it and Unblock the Notifications











