தமிழில் லால் படங்களுக்கு கிராக்கி!
பழைய மோகன்லால் நடித்த படங்களை ரீமேக் செய்ய தமிழ் சினிமாவில் திடீர் ஆர்வம் பிறந்துள்ளது. மோகன்லாலின் ஹிட் படங்களைத் தேடிப் பிடித்து ரைட்ஸ் வாங்க ஆரம்பித்துள்ளனராம்.
தமிழில் சமீபத்தில் ஹிட் ஆன படம் கிரீடம். சூப்பர் ஹிட் ஆன படம் வீராப்பு. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே மலையாளத்தில் வெளியான படங்கள். இரண்டிலுமே மோகன்லால்தான் நாயகன்.
இதனால் மோகன்லால் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் மோகம் பிறந்துள்ளது. மோகன்லால் நடித்த ஹிட் படங்களின் ரைட்ஸ்களை தமிழ் சினிமாக்காரர்கள் வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ் ஏற்கனவே உதயனு தாரம் படத்தின் ரைட்ஸை வாங்கி வெள்ளித்திரை என்ற பெயரில் ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக சமீபத்தில் மோகன்லால் நடித்து ஹிட் ஆன அலிபாய் மற்றும் ஹலோ ஆகிய இரு படங்களின் ரைட்ஸ்களையும் சிலர் வாங்கியுள்ளனராம்.
மேலும் சில மோகன்லால் படங்களுக்கு தமிழ் சினிமாக்காரர்கள் குறி வைத்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications